Published:Updated:

’என் கணவர் சீக்கிரமே குணமாகணும்!’

’என் கணவர் சீக்கிரமே குணமாகணும்!’

பிரீமியம் ஸ்டோரி
’என் கணவர் சீக்கிரமே குணமாகணும்!’
##~##
தி
ருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் வீட்டு வசதி வாரியத்தில் உள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோயிலில், 22.5.12 அன்று சக்தி விகடனும்  தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தி வரும் திருவிளக்கு பூஜை இனிதே நடந்தேறியது. சக்தி விகடனின் 87-வது விளக்கு பூஜை இது!

''எனக்கு ரெண்டு பொண்ணுங்க. ரெண்டு பேரும் நல்லாப் படிச்சு, பெரிய வேலைக்குப் போகணும். எங்க குடும்பத்துல ஒற்றுமையும் சந்தோஷமும் இப்பப் போலவே, எப்பவும் இருக்கணும். அதான் வேண்டிக்கிட்டேன்'' என்று சொல்லிச் சிரிக்கிறார் அரக்கோணம் வாசகி லட்சுமி.

''இன்ஜினியரிங் படிக்கிற எனக்கு, நல்ல வேலை கிடைக்கணும். எங்க குடும்பத்துக்குத் தேவையானதையெல்லாம் வாங்கித் தரணும். அந்தப் பிரார்த்தனையிலதான் பூஜைல கலந்துக்கிட்டேன்'' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் மாணவி ரேவதி. ''போன வருஷம் ஒரு பஸ் விபத்துல என் கணவருக்கு பலத்த காயம். படுத்த படுக்கையா, நடக்க முடியாம ஆகிட்டார். இப்பத்தான் மெள்ள மெள்ள... நடக்கறார். என் கணவர் பழையபடி நடக்கணும். அவரோட உடம்பு பரிபூரணமா குணமாகணும். இதைத் தவிர கடவுள்கிட்ட வேற எதையுமே நான் கேக்கலை'' என்று கண்ணீருடன் தெரிவித்தார் வாசகி சூர்யகுமாரி.

சந்நிதியில் வைத்த குறைகள் அனைத்தையும் முழு முதற்கடவுள் விநாயகப் பெருமான் தீர்த்துவைப்பார். கவலையை விடுங்கள்!

கட்டுரை, படங்கள்: ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு