Published:Updated:

வடகோடி எல்லையில்... தமிழ்க்கடவுளுக்கு கோயில்!

கந்தன் புகழைப் பாடுவோம்!

வடகோடி எல்லையில்... தமிழ்க்கடவுளுக்கு கோயில்!
##~##
ஞ்சாப் மாநிலம் சண்டிகரைத் தெரியும்தானே? சண்டிகரில் இருந்து சற்றே பயணித்தால், பாகிஸ்தானை அடைந்துவிடலாம்! கிட்டத்தட்ட இந்தியாவின் வடகோடி எல்லைப் பகுதியில்... நம் தமிழ்க்கடவுளாம் முருகப்பெருமானுக்கு அழகான கோயில் கட்டப்பட்டுள்ளது.

வடக்கின் எல்லைப் பகுதியில், வட இந்தியர்கள், சீக்கிய இனத்தவர்கள் மற்றும் தென்னிந்தியர்கள் என அனைவரும் ஒன்று கூடி வாழும் அற்புதமான சண்டிகரில், கந்தக் கடவுளுக்கு கோயில் அமைத்துள்ளது, ஸ்ரீமுருகப்பெருமான் பக்த சமாஜம் எனும் அமைப்பு!

வடகோடி எல்லையில்... தமிழ்க்கடவுளுக்கு கோயில்!

தென்னிந்திய மக்கள் பலரும் அரசு ஊழியர்களாகவும் வியாபாரிகளாகவும் சண்டிகருக்கு வந்து, தோழமையுடன் கட்டிய சிறிய அளவிலான கோயில் இது! அடிக்கடி இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி, விழா மற்றும் பண்டிகைக் காலங்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் என நடத்தி வந்தனர். தற்போது கோயிலை விரிவுபடுத்தி, மற்ற தெய்வங்களுக்கும் சந்நிதிகள் அமைத்து... இதோ திருப்பணிகள் நிறைவுற்று, ஜூன் மாதம் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற உள்ளது.

ஸ்ரீமுத்துகிருஷ்ணா ஸ்வாமி மிஷனைச் சேர்ந்த பூஜ்யஸ்ரீ மாதாஜி விதம்மா, சண்டிகர் சம்ஸ்கிருத வித்யாஸ்ரமத்தின் குருமகராஜ் ஆத்மாராம் மிஸ்ரா ஆகியோர் பங்கேற்க, காஞ்சிபுரம் ராஜப்பா குருக்கள் கும்பாபிஷேக பூஜையை நடத்தி வைக்கிறார்.

இனி... வடகோடியில் உள்ள சண்டிகரில் ஒலிக்கப் போகிறது, தமிழ்த் திருப்புகழ்!

- வி.ராம்ஜி

அடுத்த கட்டுரைக்கு