பிரீமியம் ஸ்டோரி

வெண்ணெய் மலை!

வாசகர் தகவல்கள்

ரோடு அருகே உள்ளது, வெண்ணெய் மலை. இங்கு அருள்புரியும் முருகப்பெருமான் தனது கரங்களில் எந்தவித ஆயுதங்களும் இல்லாமல் தனித்த திருக்கோலத்தில் காட்சித் தருகிறார். வள்ளி - தெய்வானை மற்றும் மயில் வாகனமும் இவருக்கு அருகில் இல்லை. இங்கு இவரது திருநாமம் தண்டாயுதபாணி. முன்னொரு காலத்தில் இங்குள்ள மலை வெண்ணெயாக இருந்ததாம். காலப்போக்கில் வெண்ணெய் இறுகி, வெண்ணிற மலையாக மாறிவிட்டதாகச் சொல்கிறார்கள். இந்த மலையை வலம் வந்தால், கயிலாய மலையை வலம் வந்த பலன் கிட்டும் என்பது ஐதீகம்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள சிவாலயத்தில் தனிச்சந்நிதி கொண்டுள்ள முருகப்பெருமான் நாகசுப்ரமணியராகக் காட்சித் தருகிறார். இவரது தலையில் நாகம் படமெடுத்த நிலையில் காணப்படுகிறது.

புதுக்கோட்டை அருகே உள்ளது, திருவேங்கைவாசல். இங்குள்ள ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் கோயில் பிராகாரத்தை வலம் வரும்போது, தவம் செய்யும் திருக்கோலத்தில் உள்ள முருகப்பெருமானை தரிசிக்கலாம். இவரை வழிபட்டால், எளிதில் தியானம் கைகூடும் என்கிறார்கள்.

வாசகர் தகவல்கள்

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் மூலவர் சந்நிதியை ஒட்டி ஒரு குகை அமைந்துள்ளது. அங்கு ஒரே பீடத்தில் அமைந்த 5 லிங்கங்களை தரிசிக்கலாம். இந்த லிங்கங்களை முருகப்பெருமான் பூஜிப்பதாக ஐதீகம். அதனால், மானிட பூஜை கிடையாது. மேலும், இந்தக் குகையின் மேல்புறத்தில் ஒரு சிறிய இடைவெளி உள்ளது. இதன் வழியாக தேவர்கள் தினமும் இங்கு வந்து, 5 லிங்கங்களையும் பூஜிப்பதாகச் சொல்கிறார்கள்.

தொகுப்பு: டி.ஆர்.பரிமளம், திருச்சி-21

வைகாசி விசாகச் சிறப்புகள்

##~##
வை
காசி மாதம், ஞான நட்சத்திரமான விசாகத்தில் முருகப்பெருமான் அவதரித்தார். அதனால், 'விசாகன்’, 'விசாகப் பெருமான்’ என்றெல்லாம் அவரைப் போற்றி வழிபடுவார்கள்.

வைகாசி பௌர்ணமியுடன் விசாக நட்சத்திரம் சேர்ந்து வரும் என்பதால், அந்த மாதத்துக்கு 'வைகாசம்’ அல்லது 'வைகாசி’ என்ற பெயர் வந்தது. வைகாசி பௌர்ணமியை, 'மதி நாண் முற்றிய மங்கலத்திருநாள்’ என்று போற்றுகிறது மணிமேகலை. இந்தத் திருநாளில் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு!

கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு ஆராட்டு விழா வைகாசி விசாகத்தில்தான் நடக்கிறது. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொள்வது விசேஷம்.

தொகுப்பு: இரா.பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு.

ஆலயங்கள்... அற்புதங்கள்!

வாசகர் தகவல்கள்

ரித்துவாரில் உள்ள சண்டிதேவி கோயிலுக்கு அருகில் ஆஞ்சநேயரின் தாயாரான ஸ்ரீஅஞ்சனைதேவிக்கு தனிக்கோயில் இருக்கிறது. அனுமனை மடியில் கிடத்தி, அவருக்கு தாய்ப்பால் ஊட்டும் வகையில் இங்குள்ள விக்கிரகம் வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூரில் உள்ளது ஸ்ரீகோதண்ட ராமர் திருக்கோயில். இங்கே கருவறையில் நின்ற கோலத்தில் அருளும் ஸ்ரீராமன், லட்சுமணர் மற்றும் சீதாதேவியின் (மூலவர்) விக்கிரகத் திருமேனிகள் சாளக்கிராமத்தால் ஆனது என்பர். மேலும், கருவறையில் அனுமனுக்குப் பதிலாக சுக்ரீவன் காட்சி தருவது இந்தத் தலத்தின் விசேஷம். இந்த விக்கிரகங்கள் சுமார் 1400 ஆண்டுகள் பழைமையானவை என்கிறார்கள்.

பாடல்பெற்ற சிவத்தலங்களில் காவிரி வடகரையில், திருக் காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ள திருத்தலம்- திருக்கானூர். இங்குள்ள அம்பாள் திருநாமம் சிவலோகநாயகி. இந்த அம்பாளின் விக்கிரகம் முழுவதும் சாளக்கிராமத்தால் ஆனது!

திருநெல்வேலி பாபநாசம் திருத்தலத்தில் உள்ள சிவலிங்கம், ருத்ராட்சத்தால் ஆனது. இதுபோன்ற சிவலிங்கத் திருமேனியை வேறெங்கும் காண்பது அரிது!

- பி.கனகசபாபதி, திருச்சி-1

பாதை காட்டிய குருநாதர்!

வாசகர் தகவல்கள்

ருமுறை, தன்னுடைய சீடர்களுடன் திருப்பதி திருமலைக்கு பாதயாத்திரையாகப் புறப்பட்டார் ஸ்ரீராமானுஜர். இரவில் ஓர் இடத்தில் தங்கியிருந்தனர். விடிந்ததும்தான் தாங்கள் தங்கியிருந்த பகுதி வயல்வெளி என்பது தெரியவந்தது.

அதேநேரம், அங்கிருந்து திருமலை திருப்பதிக்குச் செல்லும் வழி எது என்று தெரியாமல் குழப்பம் உண்டானது. அங்கிருந்த பாதை வழியாக சிறிது துரம் பயணித்தவர்கள், விவசாயி ஒருவரைக் கண்டனர். அவரிடம், திருப்பதிக்கு எப்படிப் போகவேண்டும் என விசாரித்தார் ஸ்ரீராமானுஜர். அதற்கு அந்த விவசாயி, ''ஐயா நான் திருமலை திருப்பதிக்குச் சென்றதில்லை. ஆனால், அருகிலுள்ள மலையை ஒட்டிய பாதையில் 'வேங்கடரமணா, கோவிந்தா...’ என்று பக்தர்கள் பாடிக்கொண்டு செல்வதைப் பார்த்திருக்கிறேன்' என்றார்.

திருமலை செல்வதற்கான வழி தெரிந்ததும், எல்லோரும் புறப்படத் தயாரானார்கள். ஸ்ரீராமானுஜரோ சீடர்களை நிறுத்தி, ''திருமலைக்குச் செல்ல நமக்கு வழிகாட்டியதால் இந்த விவசாயி நமக்கு குருவாகிவிட்டார். இவரை வழிபட்டுவிட்டு திருமலைக்கு பயணத்தைத் தொடர்வோம்'' என்றார். அதன்படியே அவரும், அவரது சீடர்களும் செய்துவிட்டு திருமலை பயணத்தை தொடர்ந்தார்கள். ஒருவருக்கு சரியான பாதையைக் காட்டுவதுகூட எவ்வளவு புண்ணியத்தை தேடித் தந்திருக்கிறது பார்த்தீர்களா?

சாதாரண விஷயம்தான் என்றாலும், தெரியாத ஒன்றை தெரியப்படுத்தியதால் அந்த விவசாயியையும் குருவாக மதித்துப் போற்றிய ஸ்ரீராமானுஜரின் செயல் போற்றத்தக்கது அல்லவா?!

- ஆர்.கண்ணன், சென்னை-33

வாசகர் தகவல்கள்

முருகக்கடவுள் எட்டு திருவடிவங்களில் எழுந்தருளும் அஷ்ட மூர்த்திகளாக எழுந்தருளும்போது, அவர் ஏறி வரும் மயில்களை அஷ்ட மயில் எனப் போற்றுகின்றன ஞானநூல்கள்.

இந்த மயில்கள் எட்டுத் திக்கிலும் இருந்துகொண்டு உலகை காக்கும் என்பது நம்பிக்கை. முருகன் கோயில்களில், அவர் எழுந்தருளியிருக்கும் பீடத்தில் எட்டுத் திக்கிலும் காணப்படும். பழநி மலையின் எட்டுத் திக்கிலும் மயில் மண்டபங்கள் அமைக்கப்பட்டு, எட்டு மயில்கள் எழுந்தருளி வைக்கப்பட்டுள்ளன!

மயிலை வழிபடும் முறை பற்றி குமார தந்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, நடுவில் ஒரு கலசத்தை வைத்து, அதைச் சுற்றி எட்டு கலசங்களை அமைக்கின்றனர். அவற்றில் எட்டு மயில்களை பூஜிக்கிறார்கள். இவற்றின் பெயர்கள்: புஜங்க புவன், நீலகண்டன், கணப்பிரியன், கலாபினன், சிகி, வர்ஹி, பீலிபிஞ்சினன் மற்றும் கேசினி.

பொதுவாக தெய்வங்கள் எழுந்தருளும் பீடத்தில் அஷ்டதிக்கு பாலகர்கள், அஷ்ட சக்தியரை பூஜிப்பார்கள். அந்த பீடத்தின் முகப்பில் அந்தந்த தெய்வங்களின் வாகனங்களை அமைப்பார்கள். இந்த வகையில், முருகனின் பீடத்தில் மயில் நின்றிருப்பது போலவும் அமைக்கப்படுகிறது. இதற்கு பீட மயில் என்று பெயர்.

- பூசை. அருணவசந்தன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு