Published:Updated:

தென்னாட்டுச் செல்வங்கள்

தென்னாட்டுச் செல்வங்கள்

தென்னாட்டுச் செல்வங்கள்
தென்னாட்டுச் செல்வங்கள்
##~##
வை
காசி விசாகம் என்றதும் நம் நினைவுக்கு வரும் முருகன் திருத்தலங்களில் குறிப்பிடத்தக்கது திருச்செந்தூர். சர்க்கரையின் தித்திப்பை எழுத்திலே காணமுடியாததுபோல், இந்தப் புண்ணிய பூமியின் பெருமையை அனுபவித்தே பார்க்க வேண்டும் என்பது அன்பர்களின் ஏகோபித்த கருத்து. காரணம், ஸ்ரீசெந்தில் ஆண்டவனின் திருவருளும் அவன் கோயிலில் நிறைந்திருக்கும் தெய்வச் சிற்பங்களும்தான்!

திருச்சீரலைவாய் என்றும், ஜயந்திபுரம் என்றும் சிறப்புப் பெயர்கள் பெற்ற திருச்செந்தூரில், ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி தேவர்களுக்கு அபயம் அளித்து, சூரபத்மன் முதலான அசுரர் சுற்றம் ஒழித்து வெற்றி வீரராக வீற்றிருக்கும் ஆலயத்தைப் பாண்டிய மன்னன் விஸ்தாரமாகக் கட்டுவித்துத் திருப்பணிகள் செய்தான் என்று சொல்லப்படுகிறது.

தென்னாட்டுச் செல்வங்கள்

மிக அற்புதமாகத் திகழும் ஷண்முக விலாசத்தில் (மண்டபம்) துவங்கி அடுத்தடுத்து... துவார பாலகர்களான வீரவாகு- வீர மார்த்தாண்டர், ஆடல்வல்லான் ஸ்ரீநடராஜர் முதலாக ஆலயமெங்கும் தூண் சிற்பங்களாக பொலிந்து நிற்கும் தெய்வச் சொரூபங்கள் அனைத்திலும் தெய்வ சாந்நித்தியம் மிதமிஞ்சி திகழ்கிறது.

இவை எல்லாவற்றையும் மிஞ்சும் அமரசிற்பம் ஒன்று, பிராகாரத்தில் பார்வையான இடத்தில் அமைந்துள்ளது. கற்பூர தீபத்தில் ஸ்ரீசெந்திலாண்டவனை மெய்யுருக தரிசிக்கும் பக்தர்கள், இந்த மயூர வாகனனையும் அவசியம் தரிசிக்க வேண்டும்.

முருகப்பெருமான் சூரபத்மனை அநாயாசமாக வேல் கொண்டு வீழ்த்தி, துஷ்டநிக்ரக காரியத்தைச் செய்து முடிக்கும் கோலம். உட்கார்ந்திருக்கும் தோரணையும், இடது காலைத் தொங்கவிட்டு வலது காலைச் சற்றே உதைத்துத் தமது வேலாயுதத்துக்கு வேகம் கொடுக்கிறார் பிரபு. ஒரு கரம் மயிலின் லகானைப் பற்றியிருக்கிறது. முகமண்டலத்தில் வீசும் ஒளி உள்ளத்தை நெக்குருகச் செய்கிறது.

தென்னாட்டுச் செல்வங்கள்

'நான் பரம சாந்தன்தான்; என்றாலும்கூட இனி பொறுக்க மாட்டேன்' என்கிற விதமாகப் பார்க்கிறாற்போலவே- ஏன், பேசுகிறாற்போலவே நமக்குத் தோன்றுகிறது. கடும் வேகம் தோன்றும் உயிர்ச் சிற்பமாகச் சிருஷ்டித்துவிட்டார் இதை ஆக்கியவர்.

வேல் பாயும்போது சூரபத்மன் மட்டும் அல்ல, அவனை யத்த பதினாயிரம் பேர் வரிசையாக நின்றாலும் துளைத்துக்கொண்டு போகும் சக்தி அதற்கு உண்டு என்று நம்மை நம்பச் செய்கிறது.  நான்கு கரங்களுடன் ஹாரங்கள் அணிந்த மார்பும் கிரீடம் தரித்த சிரசுமாக முருகனின் திருவுருவம் வெகு சுந்தரமாக விளங்குகிறது. முருகன் ஆலயத்திலும் கண்டு ஆனந்தித்துவிட்டு, உள்ளக் கோயிலிலும் இருத்தி வைத்துக்கொள்ள வேண்டியதொரு சொரூபம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு