பிரீமியம் ஸ்டோரி
நல்லது நடந்தது!
##~##
'தி
ருநெல்வேலி - தென்காசி சாலையில் உள்ளது பாவூர்சத்திரம். இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலை வில், சுரண்டை செல்லும் வழியில் உள்ளது கீழப்பாவூர். இங்குதான் அற்புதமான ஸ்ரீநரசிம்மர் ஆலயம் அமைந்துள் ளது’ என்று 9.4.09 இதழில், ஆலயம் தேடுவோம் பகுதியில் எழுதியிருந்தோம்.

16 கரங்களுடன், பிரமாண்டத் திருமேனி கொண்டு அருளாட்சி நடத்துகிறார் ஸ்ரீநரசிம்மர். பொதிய மலையில் தவமிருந்து வந்த காசியபர் முதலான முனிவர்களின் வேண்டுகோளை ஏற்று, இங்கே ஸ்ரீநரசிம்மர் காட்சி தந்தார் என்கிறது ஸ்தல புராணம்.

நல்லது நடந்தது!
நல்லது நடந்தது!

அமைதியான, சிறிய கோயில். ஸ்ரீஅலர்மேல்மங்கா சமேத ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதியும் இங்கே தரிசனம் தருகிறார். மன்னர்கள் காலத்திலேயே ஆலயப் பணிகள், முற்றுப்பெறாத படி இருந்தது என்றும் நினைவு தெரிந்து, இந்தக் கோயிலுக்குக் கும்பாபிஷேகமே நடைபெற வில்லை என்றும் வேதனையுடன் ஊர்மக்கள் தெரிவித்ததையும் வெளியிட்டிருந்தோம். 'ஸ்ரீநரசிம்மரை வணங்கினால், வழக்குகள், விவாகத் தடை, வயிறு தொடர்பான நோய், பில்லி சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோர் அவசியம் வணங்க வேண்டிய தலம் இது’ என்றும் குறிப்பிட்டிருந்தோம். இதையடுத்து, கோயில் திருப்பணிக்கு மளமளவெனக் குவிந்தன நிதியுதவி! சீரமைப்புப் பணிகள் வேகமாக நடைபெறத் துவங்கின.

நல்லது நடந்தது!

''சக்தி விகடன்ல பார்த்துட்டு, எங்கிருந்தெல்லாமோ திருப் பணிக்கு உதவினாங்க. வாசகர்களுக்கும் சக்தி விகடனுக்கும் தான் நன்றி சொல்லணும். மளமளன்னு ஆரம்பிச்ச வேலைகள் எல்லாம் முடிஞ்சு, இதோ... ஜூன் மாசம் 1-ஆம் தேதி, மகா ஸம்ப்ரோக்ஷணம் சீரும் சிறப்புமா நடக்கப் போகுது!''என்று பெருமிதம் பொங்கச் சொல்கிறார் கோயில் அர்ச்சகர்.

விகடன் வாசகர்கள் எப்போதும்... நல்லது நடக்க உறுதுணையாக இருப்பார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு