Published:Updated:

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

Published:Updated:
கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

'ழூணாவது நாளா போயிட்டு வர்றேன்; இன்னைக்கும் டிக்கெட் கெடைக்கலே' என்றவாறே, அருகில் வந்து அமர்ந்தார் வழக்கறிஞர் நண்பர் ஒருவர்.

'ரிலீசான புதுப்படத்தை உடனே பார்க்காட்டிதான் என்ன?' என்று அருகில் இருந்த இன்னொரு நண்பர் கேட்க, 'அட... நீங்க வேற, 45 வருஷத்துக்கு முன்னால வந்த கர்ணன் படத்துக்குத்தாங்க போயிட்டு டிக்கெட் கெடைக்காம வர்றேன்' என்று அவர் ஆத்திரத்தோடு சொன்னபோது, நாங்கள் எல்லோரும் சிரித்துவிட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'அப்படி என்ன சார் கர்ணன் கதையில இருக்கு?' என்றொருவர் ஆர்வமாய்க் கேட்டார்.

'என்ன இருக்காவது..? கர்ணன் எத்தனை அபாக்கியவான் தெரியுமா? தாயார் குந்தி, கர்ணனைப் பெற்றெடுத்ததுமே ஆற்றிலே விட்டுவிட்டாள். தந்தையாகிய சூரிய பகவானும் கர்ணனுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. குருவாகிய பரசுராமரோ கற்ற வித்தை தக்க நேரத்தில் கைகொடுக்காது என்று சாபம் கொடுத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, கடவுளே வந்து அவனுடைய தான தர்மங்களின் புண்ணியங்களைக் கையேந்தி பெற்றுக்கொண்டு அவனது மரணத்திற்குக் காரணமானார்...' என்று நான் கர்ணன் பற்றிச் சொன்னவுடன் சபை சற்று மௌனமானது.

##~##
மீண்டும் தொடர்ந்தேன்... 'அர்ஜுனனின் அம்புகளால் வீழ்ந்த கர்ணன் உயிர் போகாமல் தவித்தபோது, அவனது உயிரைக் காப்பது அவன் செய்த தான- தர்மங்களே என்பதை அறிந்த கிருஷ்ண பரமாத்மா, முதியவர் வேடத்தில் வந்து, தானத்தையே தானமாகப் பெற்றார். பின்னர், மகாவிஷ்ணுவாகப் பேருருவம் கொண்டு கர்ணனுக்குக் காட்சி தந்தார். 'நீ வேண்டிய வரங்களைக் கேள்’ என்றார். 'உன் விஸ்வரூப தரிசனம் ஒன்றே போதும். இருந்தாலும் கேட்கிறேன்; இல்லையென்று வருவோருக்கு, இல்லையென்று சொல்லாத இதயத்தை நீ அருள வேண்டும்’ என்று வரம் கேட்டான் கர்ணன். இதுவே அவனது கடைசி வார்த்தையும் வரமுமாகும்' என்றேன்.

'அது சரி... கர்ணனிடத்தில் புண்ணியங்களை வாங்கத்தானே கிருஷ்ண பரமாத்மா வந்தார்? பின்னே, அவனுக்கு எதற்காக வரம் கொடுத்தார்?' என்று கேள்வி எழுப்பினார் ஒரு நண்பர்.

'கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கண்ண பரமாத்மா வரவில்லை. மாயக்கண்ணனான அவர் கர்ணனின் புண்ணியங்களை வாங்கிப் போகத்தான் வந்தார். ஆனால், வாழ்நாளெல்லாம் கொடுத்தே பழகிய அந்தக் கொடையாளி கர்ணனின் ரத்தம் கிருஷ்ண பரமாத்மாவின் கைகளிலே பட, அவருக்கும் ஏதாவது தரவேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்க வேண்டும்' என்றேன் நான்.

தொடர்ந்து, 'இந்தக் காட்சியின் நீதி என்ன தெரியுமா? கொடுத்துப் பாருங்கள்; கடவுளும் உங்களிடம் கையேந்துவார். நல்லவர்களோடு பழகிப் பாருங்கள்; நீங்களும் நல்லவராக மாற வழியுண்டு' என்று சொன்ன நான், 'கர்ணன் படத்துக்குப் போகலையா?' என்று அந்த நண்பரைக் கேட்டேன். 'அந்தக் காசுலதானே இப்ப நம்ம எல்லாருக்கும் மிக்ஸரும் காராபூந்தியும் வாங்கிட்டு வந்தேன்?!' என்று அவர் மகிழ்ச்சியோடு சொல்ல, அனைவரும் ''காராபூந்தி வாங்கித் தந்த கலியுக கர்ணன் வாழ்க!'' என்று கோஷம் போட்டுக் கை தட்டினார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism