
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''என் பையனுக்கு நல்ல வரன் அமையணும். என் பொண்ணுக்கு நல்ல வேலை கிடைக்கணும். அந்த சுகவனேஸ்வரர்தான் அருள்பாலிக்கணும்'' என்று வேண்டிக்கொண்டார் வாசகி புஷ்பராணி. ''அப்பா- அம்மாவைப் பாக்கறதுக்காக சேலம் வந்தேன். வந்த இடத்துல சக்திவிகடன் தந்த மனநிறைவு இது. என் ரொம்ப நாள் ஆசை நிறைவேறிடுச்சு'' என நெகிழ்ந்தார் திருச்சி வாசகி பூர்ணிமா. ''என் மகன் நல்லபடியா வீடு கட்டணும்'' என்று வாசகி கல்யாணியும், ''என் பொண்ணுக்கு நல்லபடியா சுகப்பிரசவம் நடக்கணும். வெளிநாட்ல வேலை செய்ற மகன் நல்லாருக்கணும்'' என்று வாசகி உதயசந்திரிகாவும் வேண்டிக்கொண்டனர். ''என் கணவருக்கு ஆபரேஷன் நடந்திருக்கு. அவர், சீக்கிரமே குணமாகணும். பழைய படி உற்சாகமா வலம் வரணும்'' என்று கண்ணீருடன் தெரிவித்தார் வாசகி பரிமளா.
ஸ்ரீசுகவனேஸ்வரர் ஸ்வாமி, நிச்சயம் அனைவரையும் சுகப்படுத்திவிடுவார், பாருங்கள்!
- மு.கார்த்திகேயன்
படங்கள்: மகா.தமிழ்ப்பிரபாகரன்