Published:Updated:

ஞானம் தருவார் ஆத்மநாதர்!

ஞானம் தருவார் ஆத்மநாதர்!

ஞானம் தருவார் ஆத்மநாதர்!

ஞானம் தருவார் ஆத்மநாதர்!

Published:Updated:
ஞானம் தருவார் ஆத்மநாதர்!
##~##
பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

துக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பெருந் துறை எனப்படும் ஆவுடையார்கோவில். குரு ஸ்தானத் தில் இருந்து சிவபெருமான் தீட்சை கொடுத்து அருளிய திருத்தலம் இது. சிவபெருமானிடம் தீட்சை பெற்றவர்... மாணிக்கவாசகர்.  

ஒருகாலத்தில், ஆளுடையார்கோவில் என்றும் அழைக்கப்பட்டதாம் இந்தக் கோயில். இங்கு ஸ்வாமியின் திருநாமம் - ஸ்ரீஆத்மநாதர். அம்பாள் - ஸ்ரீயோகாம்பிகை. மாணிக்கவாசகர் தீட்சை பெற்ற தலம் என்பதால், அவருக்கும் சந்நிதி உண்டு. இந்தத் தலத்தில், 24 பதிகங்களைப் பாடிப் போற்றியுள்ளார் மாணிக்கவாசகர்.

ஞானம் தருவார் ஆத்மநாதர்!

இந்தத் தலத்தில் உள்ள மாணிக்கவாசகரின் திருவிக்கிரகம் சிதம்பரம் திருத்தலத்தில் தோன்றியதாகவும், அதுவே இங்கு பிரதான மூர்த்தியாக இருந்து அருள்பாலிப்பதாகவும் சொல்கிறது ஸ்தல புராணம். இன்னொரு சிறப்பாக, இங்கே ரிஷப வாகனத்தில் காட்சி தருகிறார் மாணிக்கவாசகர்.

பாண்டிய மன்னனிடம் அமைச்சராக இருந்தபோது, குதிரைகள் வாங்கி வருவதற்காகப் பணம் கொடுத்து அனுப்பி வைத்தான் மன்னன். சிவனாரின் மீது கொண்ட பக்தியால், குதிரை வாங்குவதற்குக் கொண்டு வந்த பணத்தைக் கொண்டு, வழியில் தான் தங்கிய இடத்திலேயே சிவனுக்கு அழகிய ஆலயம் ஒன்றை எழுப்பினார் மாணிக்கவாசகர். பிறகு, மாணிக்கவாசகர் மன்னரின் கோபத்துக்கு ஆளாக, அவரைக் காக்கும்பொருட்டு, நரிகளையெல்லாம் பரிகளாக்கிச் சிவனார் புரிந்த திருவிளையாடல் அனைவருக்கும் தெரிந்த கதைதான். இந்தக் காட்சிகளையும் அழகுறச் சிற்பமாக்கியிருக்கிறார்கள் ஆலயத்தில்!

ஞானம் தருவார் ஆத்மநாதர்!

பிரமாண்டமான ஆலயம்; தெற்குப் பார்த்த கோயில். ஸ்வாமிக்கு எதிரில் அம்பாள் சந்நிதியும், இடது பக்கத்தில் மாணிக்கவாசகர் சந்நிதியும் அமைந்துள்ளது. ஆறு கால பூஜைகள் நடைபெறும் இந்தக் கோயிலில், அம்பாளுக்கும் மாணிக்கவாசகருக்கும் ஒரே தீபாராதனை காட்டி வழிபடப்படுவது சிறப்பு!  

மாணிக்கவாசகர் தீட்சை பெற்ற திருத்தலம் என்பதால், இங்கு மாணிக்கவாசகரை வணங்கிய பின்னரே சிவ - பார்வதியை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்! ஸ்ரீஆத்மநாதருக்கு மதியத்தில் புழுங்கல் அரிசி சாதம் மற்றும் கீரை வகைகள், இரவில் சாதத்துடன் பாகற்காய் சேர்த்து நைவேத்தியம் செய்யப்படுகிறது. ஸ்வாமிக்கு படைக்கப்பட்ட நைவேத்தியத்தைச் சாப்பிட்டால், மனோவியாதி, மன அழுத்தம், சித்தம் கலங்கிய நிலை ஆகியவற்றில் இருந்து நிவாரணம் பெறலாம் என்பது ஐதீகம்!  

ஞானம் தருவார் ஆத்மநாதர்!

இங்கே, ஸ்ரீவீரபத்திரருக்கும் சந்நிதி உள்ளது. இங்கு தீபமேற்றி வழிபட்டால், செய்வினை முதலான கோளாறுகள் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள். ஸ்ரீவலஞ்சுழி விநாயகர், ஸ்ரீஇடஞ்சுழி விநாயகர், ஸ்ரீநந்திகேஸ்வரர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீநடரஜர் ஆகியோருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன.

இந்த மாதம் மாணிக்கவாசகரின் திரு நட்சத்திரத் திருவிழா வருகிறது. இதையட்டி, இங்கே 10 நாள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. தினமும் மாணிக்கவாசகர் திருவீதியுலா, சிறப்பு அலங்காரத்துடன் விசேஷ பூஜை என அமர்க்களப்படுமாம்!

மாணவர்கள், நோட்டுப் புத்தகத்தில் 'நமசிவாய’ எனும் மந்திரத்தை எழுதி, அத்துடன் பேனாவையும் வைத்து மாணிக்கவாசகரை வணங்கினால், அவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும்; ஞானம் பெருகும்; கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்!

மாணிக்கவாசகருக்கு, சிவபெருமான் தீட்சை தந்தருளிய திருத்தலத்துக்கு வந்து வணங்குங்கள்; வளம் பெறுவீர்கள்!

- மா.நந்தினி
படங்கள் : அருண்பாண்டியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism