பிரீமியம் ஸ்டோரி

மிகப்பெரிய நந்தி

வாசகர் தகவல்கள்
##~##
கோ
வையில் இருந்து பாலக்காடு செல்லும் வழியில் அமைந்துள்ள திருத்தலம் தவக்கரை. இந்த தலத்திலுள்ள ஸ்ரீமலையாளதேவி துர்கா பகவதி பிராட்டியம்மன் கோயிலில், மிகப்பெரிய நந்தி சிலை அமைந்துள்ளது. சுமார் 31 அடி உயரம்; 22 அடி அகலம்; 45 அடி நீளம் கொண்டது இந்தச் சிலை.

மேலும் ஸ்ரீசனி பகவான், தமது வாகனமான காகத்தின் மீது வலது காலை ஊன்றியபடி ஒய்யாரமாக காட்சித் தருவது, இந்தக் கோயிலின் இன்னொரு சிறப்பம்சம்!

- ஆர்.மகாதேவன், திருநெல்வேலி.

வாசகர் தகவல்கள்


அன்னதான மகாதேவன்!

கேரள மாநிலத்தில் உள்ள திருத்தலம் வைக்கம். இங்குள்ள சிவன் கோயில் புகழ்பெற்றது. இந்தத் தலத்தில் வைக்கத்தப்பன் என்ற திருநாமத்துடன் மூலவர் சிவபெருமான் காட்சி தருகிறார். இங்கு நடைபெறும் அன்னதானம் மிகவும் விசேஷம்! அதனால், இங்கே அருளும் இறைவனுக்கு 'அன்னதான மகாதேவன்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு!

- கே.வி.சீனிவாசன், திருச்சி-13.

சங்கு சக்கர முருகன்

கும்பகோணம் அருகே உள்ளது அழகாபுத்தூர். இந்தத் தலத்தில் சங்கு- சக்கரத்துடன் காட்சி தருகிறார் ஸ்ரீமுருகப்பெருமான்.

அதேபோன்று, திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பராண்யேஸ்வரர் கோயிலில் கையில் மாம்பழத்துடனும், கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீவியாழ சோமநாதர் ஆலயத்தில், பாத ரட்சையுடனும், திருநனிப்பள்ளி மற்றும் திருக்குறுங்குடி திருத்தலங்களில் மூன்று கண்கள், எட்டுக் கரங்களுடனும் அருள்பாலிக்கிறார் கந்தக்கடவுள்!

- டி.ஆர்.பரிமளம், திருச்சி-21.

வாசகர் தகவல்கள்


எத்தனை சிதம்பரங்கள்?!

வாசகர் தகவல்கள்

'எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்’ எனப் பாடியுள்ளார் திருமூலர். அகிலத்தின் ஒவ்வொரு துகளிலும் பரமனின் நடனம் நடந்துகொண்டே இருக்கிறது. அதனால் அவ்விடங்கள் யாவுமே சிதம்பரம் ஆகும். இதையட்டியே 'எங்கும் சிதம்பரம்’ எனப் பாடிப் பரவுகிறார் திருமூலர்!

* திருவெண்காட்டை புராணங்கள் ஆதி சிதம்பரம் எனப் போற்றுகின்றன. கோவை மாவட்டம் பேரூர் பட்டீச்சரம், மேலைச் சிதம்பரம் எனப் போற்றப்படுகிறது.

* இலங்கையில் காரைத்தீவில் அமைந்த ஸ்ரீசௌந்தராம்பிகை சமேத ஸ்ரீசுந்தரேசுவரர் ஆலயத்தை ஈழத்துச் சிதம்பரம் எனப் போற்றுவர். இந்தத் தலத்தில் ஆண்டியவர் என்பவர் தவம் இருந்தாராம். இவரின் சீடரான சிவமுருகர், தமது குருவின் ஆணைப்படி ஐயனாருக்கு கோயில் கட்டினார். ஐயனார் இவருக்கு ஸ்ரீநடராஜராகவே காட்சியளித்ததாகக் கூறுவர். பிறிதொரு காலம் சிவாலயம் அமைக்க விரும்பினார் சிவமுருகர். இறைவன் ஆணைப்படி தில்லைக்கு வந்து, சிவலிங்கம், நந்தி, அம்பிகை திருவடிவங்களை வடிக்கச் செய்து தமது ஊரில் நிலைப்படுத்தினாராம்!  

* அருட்பிரகாச வள்ளலார் தாம் அமைத்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆலயம் அமைந்த வடலூரை, உத்தரஞான சிதம்பரம் என அழைக்கிறார். வடநாட்டில் சதாரா எனும் இடத்தில் பெரிய நடராஜர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இதையும் உத்தர சிதம்பரம் என்று அழைக்கின்றனர். இந்த ஆலயத்தின் பெரும்பாலான கட்டட அமைப்பு, நம் தில்லை கோயிலைப் போன்றே திகழ்வது குறிப்பிடத்தக்கது.

* வேதங்கள் வழிபட்ட வேதாரண்யம் திருத்தலத்தை கீழைச் சிதம்பரம் எனப் போற்றுகின்றன ஞானநூல்கள். இந்தத் தலத்தை ஒட்டியுள்ள கடல்பகுதிக்கு அக்னி தீர்த்தம் என்று பெயர். தேவர்களின் வேண்டுகோளை ஏற்று, சிவபெருமான் அக்னி தாண்டவ சபையை இங்கே தோற்றுவித்து, அதில் தனது ஆடலை ஆடிக்காட்டி அருளியதாக புராணம் சொல்லும்.

- பூசை ஆட்சிலிங்கம், சென்னை-4

வாசகர் தகவல்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு