பிரீமியம் ஸ்டோரி
நல்லது நடந்தது!
##~##
'கு
டிசைகளெல்லாம் வீடுகளாக, கட்டடங் களாக வளர்ச்சி பெற்று வருகிற காலம் இது. கோபுரமும் மதிலும், பிராகாரங்களும் சந்நிதிகளும், மண்டபங்களும் விமானங்களும், பரிவார தெய்வங்களும் படாடோப விழாக்களுமாக இருந்த ஒளிமதி - ஸ்ரீவஜ்ரபுரீஸ்வரர் மட்டும் குடிசைக்குள், இருளில் இருக்கலாமா?’ என்று 22.11.11 இதழில், 'ஆலயம் தேடுவோம்’ பகுதியில் எழுதியிருந்தோம்.

தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில், சுமார் 36 கி.மீ. தொலைவில் உள்ளது நீடாமங்கலம். இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது ஒளிமதி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீவஜ்ரபுரீஸ்வரர் திருக்கோயில்.  

'உலகுக்கே ஒளி தரும் சந்திரனின் சாபத்தை நீக்கி அருளுங்கள்’ என உமையவள், சிவனாரிடம் பரிந்துரைக்க... சந்திரனின் சாபத்தைப் போக்கி அருளினார் சிவனார். அதனால் இந்தத்  தலம், ஒளிமதி எனப் பெயர் பெற்றது.  27 நட்சத்திரப் பெண்களின் கண்ணீரைத் துடைத்த ஈசனுக்கு, கம்பீரமான ஒரு கோயில் அமைவதற்கு, கல்லாக, மண்ணாக, சிமென்டாக, காசு -பணமாக,  கல் விக்கிரகங்களாக, கதவுகளாக, சந்நிதிகளாக, 27 நட்சத்திரங்களைச் சேர்ந்த அன்பர்களும் தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்தால், சந்திர பலம் கூடும்’ என்று தெரிவித்திருந்தோம்.

''சக்திவிகடன்ல கோயிலைப் பத்திப் படிச்சிட்டு, எங்கிருந்தெல்லாமோ கார்லயும் வேன்லயுமா எங்க ஊருக்கு வந்துட்டாங்க. கன்யாகுமரியிலேருந்தும்  கோயம்புத்தூர்லேருந்தும் வடக்கே மும்பை, டெல்லிலேருந்தும் திருப்பணிக்கு மளமளவென உதவி செஞ்சாங்க.  இதுல, கோவையைச் சேர்ந்த ஒரு பெண்மணியின் பேருதவி மறக்கவே முடியாதது.

வந்து சேர்ந்த உதவிகளைக் கொண்டு முடிஞ்ச அளவுக்குக் கோயிலை முடிப்போம். பிறகு கும்பாபிஷேகம் நடத்திட்டு, அப்புறம் மெள்ள மெள்ள... திருப்பணிகளைப் பார்ப்போம்னு முடிவு பண்ணினோம்'' என்கிறார் திருப்பணியில் ஈடுபட்டு வரும் பாஸ்கரன் ஐயா.

இதோ... வரும் 29-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று, ஒளிமதி ஸ்ரீவஜ்ரபுரீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா! 27 நட்சத்திரக்காரர்களும் வந்து வணங்க வேண்டிய அற்புதமான ஆலயத்துக்கு வாருங்கள்; கிரக தோஷங்கள் அனைத்தும் விலகி, வாழ்வில் சுபிட்சம் தந்தருள்வார் ஒளிமதி ஈசன்!

- வி.ராம்ஜி
படங்கள்: அருண்பாண்டியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு