Published:Updated:

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

Published:Updated:
திருப்பட்டூர் அற்புதங்கள்!
திருப்பட்டூர் அற்புதங்கள்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'இ
ந்த முறை தமிழகத்துக்கு வரும்போது, தரிசனம் பண்ண வேண்டிய கோயில்கள் பட்டியல்ல நான் முக்கியமான இடம் கொடுத்திருந்தது திருப்பட்டூருக்குத்தான்! அதன்படி திருப்பட்டூருக்குப் போனோம். அங்கே அருமையான தரிசனம் கிடைச்சது. அந்தத் தலத்துல கால் வைச்சதுக்கான பலனும் கிடைச்சுது'' என்று பெருமிதத்துடன் சொல்கிறார் சீனிவாசன். தற்போது, டெல்லியில் பணியாற்றி வரும் இவர், புதுக்கோட்டையை பூர்வீகமாகக் கொண்டவர்.

''புதுக்கோட்டைல இருந்தப்ப சின்ன வயசு. கோயில் -குளம்னு பெருசா தேடிப் போகலை. அப்புறம் படிப்பு, உத்தியோகம்னு ஓடிக்கிட்டே இருக்க வேண்டியதாயிருச்சு. ஒருவழியா... நல்ல வேலை கிடைச்சு, டெல்லில செட்டிலாகியாச்சு. மே மாத விடுமுறைல வரும்போது, உறவுக்காரங்க, நண்பர்கள்னு எல்லாரையும் பார்த்துட்டு, முக்கியமான கோயில்களுக்குப் போய் தரிசனம் பண்ணிட்டு, எங்க குலதெய்வம் சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளியம்மனை கண்ணாரத் தரிசனம் பண்ணிட்டு, டெல்லி கிளம்பிடுவோம்.

சக்திவிகடன்ல 'திருப்பட்டூர் அற்புதங்கள்’ தொடர் படிக்கும் போதுதான் திருச்சிக்குப் பக்கத்துல, எங்க குலதெய்வம் இருக்கிற சிறுவாச்சூருக்குப் பக்கத்துல இப்படியரு அற்புதமான கோயில் இருக்கறதே தெரிய வந்துச்சு.  

நாங்களும் எத்தனையோ கோயில்களுக்குப் போயிருக்கோம்; தரிசனம் பண்ணியிருக்கோம். ஆனா, எங்களுக்குத் தெரிஞ்சு சித்த புருஷர்கள் அல்லது முனிவர்களின் திருச்சமாதியைக் கோயில்ல பார்த்ததே இல்லை. திருப்பட்டூர்ல உள்ள ரெண்டு கோயில்லயும் ஸ்ரீபதஞ்சலி முனிவர் மற்றும் ஸ்ரீவியாக்ரபாதர் திருச்சமாதிகள் இருக்குன்னு படிக்கப் படிக்க... அந்தக் கோயிலுக் குப் போகணுங்கற ஆர்வம் அதிகமாயிட்டே இருந்துச்சு.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

இதோ... இந்த மே மாத விடுமுறைல டெல்லிலேருந்து தமிழ கத்துக்கு வந்தோம். ராமேஸ்வரம், திருச்சி குணசீலம், ஸ்ரீரங்கம்னு போயிட்டு, அப்படியே சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளியம்மன் கோயி லுக்கு வந்து, சிறப்பு அபிஷேக - ஆராதனைகள் எல்லாத்தையும் செஞ்சு முடிச்சோம். அப்புறமா, நேரா திருப்பட்டூருக்குப் போனோம். அடடா... அந்தக் கோயில் கோபுர வாசல்ல நிக்கும்போதே... நம்ம பாவமெல்லாம் விலகிட்ட மாதிரி ஒரு உணர்வு'' என்று ஆச்சரியமும் ஆர்வமும் பொங்கச் சொல்கிறார் சீனிவாசன்.

''பெருசா எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவன் நான். என் குடும்பமும் அப்படித்தான்! ஆனா, ரொம்பநாளா ஆபீஸ்ல வரவேண்டிய புரமோஷன் ஒண்ணு, தள்ளிப் போயிக்கிட்டே இருந்துச்சு. ஸ்ரீபிரம்ம புரீஸ்வரரைத் தரிசனம் பண்ணிட்டு, ஸ்ரீபிரம்மாவோட சந்நிதிக்கு வந்ததும்... அப்படியே அதிர்ந்து போயிட்டோம்.

அடேங்கப்பா... என்னவொரு பிரமாண்டமான திருமேனி. மஞ்சள் காப்பு அலங்காரத்துல, ஸ்ரீபிரம்மாவைப் பார்க்கப் பார்க்க... 'இனி நம்ம வாழ்க்கை இதைவிட இன்னும் பெட்டரா, ரொம்ப அழகா இருக்கப்போகுது’ங்கற மாதிரி ஒரு உணர்வு; ஒரு நம்பிக்கை! சிலிர்ப்போடயே தரிசனம் பண்ணிட்டு, வெளியே வந்தோம்.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

'ரொம்ப வருஷமா உனக்கு புரமோஷன் தள்ளிப்போயிக்கிட்டே இருந்துச்சுல்ல அப்பா... உனக்குச் சீக்கிரமே அந்தப் புரமோஷன் கிடைக்கணும்னு வேண்டிக்கிட்டேன்’னு சொன்னான் என் பையன் ஸ்ரீகாந்த். நெகிழ்ந்து போயிட்டேன். அப்புறம் நாலு நாள்... இன்னும் சில கோயில்களுக்கும், புதுச்சேரி ஸ்ரீஅன்னை ஆஸ்ரமத்துக்கும் போயிட்டு, டெல்லி திரும்பினோம். வேலைக்குப் போன மூணாவது நாள்... அதாவது திருப்பட்டூருக்குப் போயிட்டு வந்த ஏழாவது நாள்... ஆபீஸ்ல, புரமோஷன் ஆர்டரைக் கூப்பிட்டுக் கொடுத்தாங்க. ரொம்ப ரொம்ப சாந்நித்தியமான அந்தக் கோயிலுக்கும் ஸ்ரீபிரம்மாவுக்கும் அங்கிருந்தபடியே மானசீகமா நமஸ்காரம் பண்ணினேன். இனி, சிறுவாச்சூர் குலதெய்வத்தையும் திருப்பட்டூர்ல இருக்கிற இஷ்ட தெய்வத்தையும் தமிழகம் வரும்போதெல்லாம் தரிசனம் பண்றதுன்னு உறுதியே எடுத்துட்டோம், எங்க வீட்ல!'' என நம்பிக்கையும் உற்சாகமும் ததும்பச் சொல்லி முடித்தார் சீனிவாசன்.

இதுபோன்ற சின்னச் சின்னப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி, நம் வாழ்வில் நல்ல பல திருப்பங்களைத் தருகிறது, திருப்பட்டூர் திருத்தலம் என்று வாசக அன்பர்களும் பக்தர்களும் நெக்குருகிச் சிலாகித்துக்கொண்டே இருக்கின்றனர்.

''கஷ்டப்படும்போது, கோயில்களுக்குப் போறோமோ இல்லியோ... நல்லா இருக்கும் போது, நிச்சயமாகக் கோயில்களுக்குப் போய் தரிசனம் பண்ணணும். சினிமால நடிச்சாலும் சரி... நடிக்கலேன்னாலும் சரி; அரசியல்ல வளர்ச்சி அடைஞ்சிருந்தாலும் சரி... சின்னத் தேக்கத்தோட இருந்தாலும் சரி; நாடகம் அடிக்கடி நடந்தாலும் சரி... நடக்காது போனாலும் சரி... இந்த என் வாழ்க்கை எப்பவும் சந்தோஷமா, நிம்மதியா, அமைதியா போயிக்கிட்டேதான் இருக்கு. அதனால பிரார்த்தனை, நேர்த்திக்கடன் போன்ற சமாசாரம்லாம் நான் பண்றதே இல்லை'' என்று தனக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் சொல்கிறார் எஸ்.வி.சேகர்.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

''திருப்பதிக்குப் போனதும் திடீர்னு தோணும்... அங்கப் பிரதட்சணம் பண்ணணும்னு! உடனே பண்ணிருவேன். அதேபோல், சபரிமலைக்குப் போகும் போது தோணுச்சு... நிறைய்ய முறை அங்கப் பிரதட்சணம் பண்ணியிருக்கேன். திருப்பதி போல சபரிமலை மாதிரி, மனசுக்கு நிறைவும் வாழ்க்கையில நல்லதொரு திருப்பமும் தர்ற தலம், திருப்பட்டூர். ரொம்ப வருஷமாப் போய் தரிசனம் பண்ணிட்டிருக் கேன். 'எனக்கு இதைக் கொடு; அதைச் செஞ்சு தா’னு ஸ்ரீபிரம்மாகிட்ட கேட்டதே இல்லை. இந்த வாழ்க்கையைக் கொடுத்த பிரம்மனுக்கு எனக்கு இன்னும் என்னெல்லாம் கொடுக்கணும்னு நிச்சயம் தெரியும். அதனால எதுவும் கேக்காம, தரிசனம் பண்ணிட்டுத் திரும்பிருவேன்.

இப்பக்கூட... சமீபத்துல திருப்பட்டூர் போயிருந்தேன். எப்பவும், எந்தக் கோயிலுக்குப் போனாலும் விளக்கேத்த நெய் கொண்டு போறது வழக்கம். அதேபோல இங்கேயும் போய், ரொம்ப நிறைவா தரிசனம் பண்ணிட்டு வந்தேன். சின்ன வயசுலேருந்தே முனிவர்கள், சித்தர்கள், மகான்கள் மேல ஆழ்ந்த ஈடுபாடும் பக்தியும் எனக்கு உண்டு.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

இங்கே... ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயில்ல ஸ்ரீபதஞ்சலி முனிவருக்கும் ஸ்ரீகாசிவிஸ்வநாதர் கோயில்ல ஸ்ரீவியாக்ரபாதருக்கும் திருச் சமாதி கள் இருக்கு. இதுதான், இந்தக் கோயில் மேல அதிகம் ஈடுபாடு வர்றதுக்குக் காரணம். நமக்கு சார்ஜ் ஏத்திவிடுற மாதிரியான சாந்நித்தி யமான கோயில்கள் நிறைய்ய இருக்கு! புராண- புராதனப் பெருமைகள் கொண்ட இந்தக் கோயில்ல அந்த முனிவர்களோட திருச்சமாதிக்குப் பக்கத்துல கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தாலே... ஒரு புத்துணர்ச்சி பரவறதை உணர முடியும்!

அதேபோல, ஸ்ரீபிரம்மாவும் குரு; ஸ்ரீதட்சி ணாமூர்த்தியும் குரு. இங்கே... ஸ்ரீபிரம்மா வோட சந்நிதிக்கு நேரா நின்னுக்கிட்டு ஸ்ரீபிரம்மாவையும் தரிசனம் பண்ணலாம்; ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தியையும் கண்ணாரத் தரிசிக்கலாம்! இந்த அமைப்பு கூட வேற எங்கேயும் இல்லாதது. ரொம்பப் பரவசமான அனுபவங்கள் நிறைஞ்ச கோயில்... திருப்பட்டூர்!

அதைச் சொன்னாப் புரியாது. திருப்பங்கள் தரும் திருப்பட்டூருக்கு போனாத்தான் அந்த அனுபவங்களை உணர முடியும்'' என்கிறார் எஸ்.வி.சேகர்.

உண்மைதான். சில விஷயங்களை உணரத் தான் முடியும்; உணர்த்துவது கடினம்!

- பரவசம் தொடரும்
படங்கள்:'ப்ரீத்தி’ கார்த்திக், என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism