Published:Updated:

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

Published:Updated:
கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்
கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

'எவ்வளவு கூட்டம்!? இப்படியரு கூட்டத்தை நான் பார்த்ததே இல்லை!' - பரமசாமி இப்படி வியப்போடு சொன்ன இடம், மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணக் கூட்டம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'மதுரையை ஆண்ட மலையத்துவசப் பாண்டிய னின் மகள் அல்லவா மீனாட்சி? பின்னே, கூட்டத் துக்குக் கேட்பானேன்!' - நான் சொல்லிக் கொண் டிருக்கும்போதே, அம்மை-அப்பனும், பெருமாளும், தெய்வயானை சமேதராய் திருப்பரங்குன்றம் முருகனும் திருக்கல்யாண மேடையை நோக்கி ஊர்வலமாய் வர... கோயில் ஓதுவார் 'கணீர்’ என்ற குரலில் பாடினார்....

'சடைமறைத்துக் கதிர்மகுடம் தரித்துநறுங்
கொன்றையந்தார் தணந்து வேப்பம்
தொடைமுடித்து விடநாகக் கலனகற்றி
மாணிக்கச் சுடர்ப்பூண் ஏந்தி
விடைநிறுத்திக் கயலெடுத்து வழுதி
மருமகனாகி மீன நோக்கின்
மடவரலை மணந்து உலகம் முழுதாண்ட
சுந்தரனை வணக்கஞ்செய்வாம்.'

'அருமையான குரல்ல பாடுறாரு. பொருள்தான் புரியமாட்டேங்குது!' என்று பரமு அலுத்துக்கொள்ள, நானே விளக்கினேன்: 'திருநாவுக்கரசர் தமது தேவாரப் பாடல் ஒன்றில் சிவனாரிடம் 'தங்களின் திருமண நாளன்றும் இதே புலித்தோலும் கோவண மும்தானா?’ என்று ஒரு கேள்வி கேட்கிறார்.

அதற்கு பதில்கூறும் முகமாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. அதாவது, தன் சடை முடியை மறைத்து, வெற்றி மகுடம் தரித்து, கொன்றைமலர் மாலையைத் தலையில் சூடி, கழுத்தில் வேப்பம்பூ மாலையணிந்து, நாக ஆபரணத்தைக் கழற்றி மாணிக்கப் பதக்கம் ஏற்று, காளை வாகனத்தில் மீன் கொடி ஏந்தி, பாண்டிய மன்னனின் மருமகனாகி, மீனாட்சியை மணந்து, உலகம் முழுவதையும் ஆளும் அழகிய சொக்கநாதரை வணங்குவோம் என்பதுதான் அதற்கான பொருள்...' என்று நான் சொல்ல, பரவசத்தில் நெகிழ்ந்தார் பரமு.

'நீங்க சொன்னது நல்லாவே புரிஞ்சுது. இப்போ, நாம மீனாட்சி கல்யாணத்துக்கு வந்திருக்கோம். மாப்ள வீட்டு தரப்புல யாரும் வரலியா?' என்றொரு கேள்வியை அப்பாவியாய் கேட்டார் பரமு.

'இதே கேள்வியைத்தான் தடாதகைப் பிராட்டியும் சொக்கநாதரிடம் கேட்டாள். கேட்டு விட்டு, மலைமலையாய் செய்துவைத்த அறுசுவை உணவை யார் உண்பது, அத்தனை யும் வீணாகி விடுமே எனக் கவலைப்பட்டாளாம். உடனே சிவனார் தனது ஏவலர்களாகிய பூத கணங்களில் ஒருவனான குண்டோதரனைச் சாப்பிட அனுப்ப... சற்று நேரத்தில் கல்யாண சமையற்காரர்கள் எல்லாம் மீனாட்சியிடம் அலறியடித்து ஓடிவந்தார்களாம்.

'தாயே! சமைத்த உணவையெல்லாம் குண்டோதரன் ஒருவனே உண்டு முடித்து, அரிசி, பருப்பு, காய்கறிகளையும் தின்னத் தொடங்கியிருக்கிறான். அன்னக்குழி மண்டபம் அதகளமாய்க் காட்சியளிக்கிறது’ என்று அவர்கள் சொல்ல, மீனாட்சியும் திகைத்து நின்றாராம்...'

நான் முடிப்பதற்குள் பரமசாமி குறுக்கிட்டு, 'சார் சார், உடனே புறப்படுவோம். இன்றைக்கும் அப்படி யாராவது ஒரு குண்டோதரன் வந்துவிடப் போகிறான்' என்று என்னை அழைக்க, உணவுச் சாலையை நோக்கிச் செல்லும் ஜன சமுத்திரத்தில் நாங்களும் சங்கமமானோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism