
சென்னை நங்கநல்லூர் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சக்திவிகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை, 19.6.12 அன்று சிறப்புற நடைபெற்றது. சக்திவிகடனின் 89-வது திருவிளக்கு பூஜை இது!
''சக்திவிகடன் விளக்குபூஜைல கலந்துக்கறது, இது ஏழாவது முறை. குடும்பத்துல சின்னச் சின்னதா பிரச்னைகள். அதெல்லாமும் சீக்கிரமே சரியாகணும்னு வேண்டிக்கிட்டேன்'' என்றார் வாசகி மாலதி.
##~## |
''என் மருமகப் பொண்ணு, மகளைப் போல பிரியமா இருக்கா. இந்த உலகத்துல இருக்கற மாமியாரும் - மருமகளும் இதைப் போலவே அன்பா, அந்நியோன்யமா இருக்க நீதான் அருள்புரியணும்னு வேண்டிக்கிட்டேன்'' என்று சொன்ன வாசகி பார்வதி, தன் மருமகள் தேவியுடன் வந்திருந்தார்.
''பையனுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கணும்'' என்று வாசகி மீனாவும், ''என் கணவருக்கு பதவி உயர்வு தள்ளிப் போயிக்கிட்டே இருக்கு. எதிர்பார்க்கிற புரமோஷன் கிடைக்கணும்'' என்று வாசகி செந்தாமரையும் வேண்டிக் கொண்டனர்.
ஆணின் பிரார்த்தனையாகட்டும்; பெண்ணின் வேண்டுதலாகட்டும்... அனைத்தையும் நிறைவேற்றித் தருவார் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர்!
- சா.வடிவரசு
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்