Published:Updated:

வாசகர் தகவல்கள்

வாசகர் தகவல்கள்

வாசகர் தகவல்கள்

வாசகர் தகவல்கள்

Published:Updated:
வாசகர் தகவல்கள்
##~##
வை
ணவ மரபில் கோயில் என்றால் திருவரங்கத்தைக் குறிக்கும். அதுபோல திருமாலின் ஆயுதங்களில் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சங்கும் சக்கரமும்தான்! பல திவ்விய தேசங்களில் சக்கரத்தாழ்வார் காட்சியளிக்கின்ற போதிலும், புராதனமாகக் கருதப்படும் ஸ்ரீரங்கம், குடந்தை ஸ்ரீசக்கரபாணி ஆலயம், திருமாலிருஞ்சோலை, திருமோகூர் திருக்கோயில்கள் முக்கியமாகக் கருதப்படுகின்றன.

திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் அரங்கனுக்கும் தொடர்பு உண்டு. ஒருமுறை காவிரியில் அரங்கனுக்கு தெப்ப உத்ஸவம் நடைபெற்ற நேரம் காவிரியில் வேகம் அதிகரித்தது. அரங்கனை அந்த வெள்ளத்தில் இருந்து மீட்க முடியுமா என்ற பயம் ஏற்பட்டபோது, ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருந்த கூரநாராயண ஜீயர் என்பவர், சுதர்ஸன சதகத்தை இயற்றி ஸ்ரீசுதர்ஸனரை வேண்ட... காவிரி வெள்ளம் குறைந்து அரங்கன் கரையேறினான். இந்த சுதர்ஸன சதக பாராயணம் பல சங்கடங்களைப் போக்கும் மாமருந்தாகும்!

கும்பகோணத்தில் சக்கரத்தாழ்வாருக்கு என்றே தனிக் கோயில் அமைந்துள்ளது. வேறெங்கும் காணமுடியாத அமைப்பு அது. மேலும், இங்கு மூலஸ்தானத்தில் சக்கரத்தாழ்வார் (மூலவரும் உத்ஸவரும்) சுதர்ஸன வல்லித் தாயாருடன் காட்சியளிக்கிறார். தவிர, ணீகோயில் கொண்டு காட்சியளிக்கிறார். இவரை தரிசிக்க தட்சிணாயன, உத்தராயன வாசல்கள் அமைந்துள்ளன. தை முதல் ஆனி வரை உத்தராயன வாசல் வழியாகச் செல்ல வேண்டும். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன வாசல் வழியாகச் செல்ல வேண்டும். சூரிய பகவானின் கர்வத்தை அடக்கியவர் சக்கரபாணி என்கிறது தலவரலாறு. அதனால், இத்தலத்தை பாஸ்கர க்ஷேத்திரம் என்றும் போற்றுவர்.

- எம்.என்.ஸ்ரீநிவாஸன்

வாசகர் தகவல்கள்

திருநெல்வேலியில் இருந்து 60 கி.மீ. தொலைவில், பொதிகை மலைச்சாரலில் தவழ்ந்தோடும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள திருத்தலம் பாபநாசம். மனிதர்கள் செய்த பாவங்களை நாசம் செய்யும் திருத்தலம் என்பதால், அந்தப் பெயர்.

சிவபெருமான்- அன்னை உமா தேவி திருக்கல்யாணத்தின்போது வடபுலம் உயர்ந்து தென்திசை தாழ்ந்ததால், அதைச் சமன்செய்ய தென்புலம் வந்தார் அகத்திய மாமுனி. அவருக்கு ஓரிடத்தில் தனது திருக் கல்யாணக் கோலத்தைக் காண்பித்தருளினார் சிவபெருமான். அந்த அற்புதம் நிகழ்ந்த இடம்தான் இந்தப் பாபநாசம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நவகயிலாய திருத்தலங்களில் முதல் ஸ்தலமாக கருதப்படும் இது, சூரியனுக்கு உரிய திருத்தலமாகும். அதனால், 'சூரிய கயிலாயம்’ என்ற பெயரும் இந்த ஸ்தலத்துக்கு உண்டு.

இக்கோயில் அம்மனான உலகம்மை சந்நிதி முன் உரல் ஒன்று உள்ளது. இங்கு வரும் பக்தர் கள், அந்த உரலில் விரலி மஞ்சளைப் போட்டு இடித்துப் பவுடராக்கி, அதைக்கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.

இப்படி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும் மஞ்சள் நீரை அருந்தினால், குழந்தை பாக்கியம் தாமதமாகும் தம்பதியருக்கு அந்தப் பாக்கியம் உடனே கிட்டும்; திருமணம் ஆகாதவர்களுக்குச் சட்டென்று திருமணம் கைகூடும் என்கிறார்கள்.

- மதுவர்ஷா, சென்னை-100

அருள்புரிவாள் அம்பிகை!

வாசகர் தகவல்கள்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூருக்கு அருகில் அமைந்துள்ள திருத்தலம் குலசேகரன் பட்டினம். முத்துக்களை ஆற்றி குணப்படுத்துவதால் இங்குள்ள அம்மன், முத்து + ஆற்று + அம்மன் = முத்தா(ற்ற)ரம்மன் என்று அழைக்கப்படுகிறார்.

இந்தக் கோயிலில் ஸ்வாமியும், அம்மனும் ஒரே பீடத்தில் எழுந்தருளி இருப்பது கூடுதல் சிறப்பு. மைசூருக்கு அடுத்தபடியாக இங்கு (புரட்டாசி மாதம்) கொண்டாடப்படும் தசரா விழா புகழ் பெற்றது. பொதுவாக அம்மை நோயை முத்துப் போட்டதாக கிராமப்புறங்களில் சொல்வார்கள். அதன்படி, முத்துக் கண்டவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அம்மை நோய் குணமாவதைக் கண்கூடாகக் காணமுடிகிறது.

சேலம் மாவட்டம்- தாரமங் கலம் கண்ணனூர் மாரியம் மன் கோயிலில் ஒரே பீடத்தில் ஸ்ரீமாரியம்மனும், ஸ்ரீகாளியம்மனும் அமர்ந்த கோலத்தில் அருள்கின்றனர். அபூர்வமான தரிசனம் இது.

இங்கு ஆடி மாதத்தில் நடக்கும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் பெண் பக்தர்கள் வித்தியாசமான நேர்த்திக் கடன் ஒன்றை செலுத்துகிறார்கள். பூக்குழியின் நடுவே நின்றுகொண்டு, அம்மனுக்கு பூஜை செய்த பாலை குழந்தைகளுக்குப் புகட்டுவதுதான் அந்த நேர்த்திக்கடன்! தங்களின் குழந்தைகள் நலனுக்காகவும், குழந்தைப் பாக்கியம் கிடைத்ததற்காகவும் இப்படியரு நேர்த்திக்கடன் இங்கே நிறைவேற்றப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் சோழபுரம் என்னும் இடத்தில் உள்ளது வெட்காளியம்மன் கோயில். இங்கே, அம்மன் 10 கரங்களுடன் அருள் பாலிக்கிறாள். இந்த அம்மனை தரிசிக்க 18 படிகளை கடந்து செல்ல வேண்டும். ஸ்ரீஐயப்பன் கோயிலைப் போன்று அமைக்கப்பட்டுள்ள இந்தக் கோயிலில் அம்மனுக்கு பாசிப் பயறு, கம்புப் பயறு ஆகியவற்றை முளைக்க வைத்து வழிபாடு செய்கிறார்கள். அதுவே பக்தர்களுக்குப் பிரசாதமாக தரப்படுவது கூடுதல் சிறப்பு.

தொகுப்பு: மதுவர்ஷா, சென்னை
கோவீ. இராஜேந்திரன், மதுரை