Published:Updated:

வையம் காத்த பெருமாள்... அபயம் அளிக்கும் சுதர்ஸனர்!

ஸ்ரீசக்கரத்தாழ்வார் தரிசனம்!

வையம் காத்த பெருமாள்... அபயம் அளிக்கும் சுதர்ஸனர்!

ஸ்ரீசக்கரத்தாழ்வார் தரிசனம்!

Published:Updated:
வையம் காத்த பெருமாள்... அபயம் அளிக்கும் சுதர்ஸனர்!
##~##
கு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ம்பகோணம்- திருவையாறு சாலையில், கும்பகோணத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவிலும், திருவையாறில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது ஆடுதுறை ஸ்ரீஜகத்ரட்சக பெருமாள் கோயில். தமிழில் வையம் காத்த பெருமாள் என அழைக்கின்றனர், பக்தர்கள்.  

சுமார் 1,800 வருடங்களுக்கு முன்பு, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட... ஏராளமானோர் அதில் சிக்கித் தவித்தனர்; சிலர் வெள்ளப்பெருக்கில் மாட்டிக்கொண்டு உயிர் இழந்தனர். கரையோரத்தில் வசித்து வந்தவர்கள் தங்கள் வீடு வாசல்களை விட்டுவிட்டு, வேறு ஊர்களுக்குக் குடிபெயர்ந்தனர். அப்போது வெள்ளத்தில் இருந்து மக்களை ரட்சித்துக் காப்பதற்கு திருவுளம் கொண்டார் திருமால்.

இந்நிலையில், காவிரியாற்றில் மீன் பிடிக்கச் சென்ற மீனவரின் வலையில் ஏதோவொன்று சிக்கிக்கொள்ள, கரைக்குக் கொண்டு வந்து பார்த்தனர். அது பெருமாளின் அழகிய விக்கிரகத் திருமேனி. அதையடுத்து வெள்ளமும் வடிந்து போகவே, மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். அந்த பெருமாளை 'வையம் காத்த பெருமாள்’ எனப் பூரிப்புடன் அழைத்தனர்.

அதைத் தொடர்ந்து, பெருமாளுக்கு அங்கே அழகிய கோயில் ஒன்று கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இந்த ஊர், 'பெருமாள் கோவில்’ என்ற பெயருடன் இருந்ததாம். பிறகு, இந்த ஊருக்கு அடுத்துள்ள ஆடுதுறை நகரம் விரிவாக்கம் பெற, இந்தப்பகுதியும் ஆடுதுறையின் ஓர் அங்கமானது.

வையம் காத்த பெருமாள்... அபயம் அளிக்கும் சுதர்ஸனர்!

ஸ்ரீதேவி- பூதேவியுடன் உத்ஸவர் ஸ்ரீஜகத் ரட்சகப் பெருமாள் அழகுறக் காட்சி தருகிறார். தாயாரின் திருநாமம்- ஸ்ரீபுஷ்பவல்லித் தாயார். பிரிந்த தம்பதியர், நிம்மதியின்றித் தவிக்கும் தம்பதியர் ஆகியோர் தொடர்ந்து 16 நாட்கள் அல்லது 16 சனிக்கிழமைகள் இங்கு வந்து வெள்ளை மலர் சார்த்தி, கற்கண்டு நைவேத்தியம் செய்து, 16 முறை பிராகார வலம் வந்தால், பிரிந்தவர்கள் விரைவில் ஒன்று சேருவர் என்பது ஐதீகம்!

வையம் காத்த பெருமாள்... அபயம் அளிக்கும் சுதர்ஸனர்!

இந்தத் தலத்தில் ஸ்ரீசக்கரத்தாழ்வார் மிகுந்த விசேஷமானவர் எனப் போற்று கின்றனர் பக்தர்கள். வடக்கு திசை நோக்கி பதினாறு திருக்கரங்களுடன் திகழும் ஸ்ரீசக்கரத்தாழ்வாரை, செவ்வாய்க் கிழமைகளில் இங்கு வந்து 16 நெய் தீபமேற்றி, வெள்ளை நிற வஸ்திரம் சார்த்தி, வெள்ளை நிற மலர்களால் அர்ச்சித்து, தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கடன் தொல்லையில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்; நஷ்டத்தில் இருந்த தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.

நல்ல வேலை, பதவி உயர்வு ஆகியவை வேண்டுவோர், பால் பாயசம் அல்லது சுண்டல் நைவேத்தியம் செய்து, வெள்ளை வஸ்திரம் மற்றும் முல்லை முதலான வெண்மை நிற மலர்கள் சார்த்தி வழிபட்டால்... விரைவில் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்; பதவி உயர்வு கிடைக்கப்பெறுவர் என்பது ஐதீகம்!  

ஸ்ரீஆண்டாள், ஸ்ரீஅனுமன், ஸ்ரீகருடாழ்வார், ஆழ்வார்கள் ஆகியோருக்கும் இங்கு சந்நிதிகள் உள்ளன. வைகாசி பிரம்மோத்ஸ வம், ஐப்பசி பவித்ரோத்ஸவம், மாசி பௌர்ணமி, புரட்டாசி நவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை இங்கு சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன.

''நிலம் மற்றும் வாகன சம்பந்தமான எந்தப் பிரச்னையானாலும் அவற்றை நிவர்த்தி செய்து கொடுப்பார் ஸ்ரீவையம் காத்த பெருமாள். இங்கேயுள்ள ஸ்ரீசக்கரத் தாழ்வாரை வணங்கினால், நம் சங்கடங்களை யெல்லாம் தீர்த்து வைப்பார்'' என்கிறார் கோயிலின் கஸ்தூரிரங்க பட்டாச்சார்யர்.

           - மா.நந்தினி
படங்கள் : இ.ராஜவிபீஷிகா