

சென்னை நங்கநல்லூர் 2-வது மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவப் பெருமாள் கோயிலை, 'மாணவர் கோயில்’ என்றே அழைக்கின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இங்கு வந்து ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவப் பெருமாளை வணங்கித் தொழுதால், கல்வியில் சிறந்து விளங்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வருடந்தோறும் 10 மற்றும் 12-வது படிக்கும் மாணவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என (மார்ச் மாதம் இரண்டு நாட்கள்) சிறப்பு ஹோமம் நடைபெறுவது இந்தக் கோயிலின் தனிச்சிறப்பு. இந்தக் கோயிலின் இன்னொரு விசேஷம்... ஸ்ரீசக்கரத்தாழ்வார். இவருடைய சந்நிதிக்கு வந்து மனதாரப் பிரார்த்திக்க, கவலை கள் பறந்தோடும்; நிம்மதியும் சந்தோஷமும் மலரும் என்கின்றனர் பக்தர்கள்.
##~## |
அன்று மாலை, சிறப்பு அலங்காரத்துடன் ஸ்ரீசக்கரத்தாழ்வாரின் திருவீதியுலாவைக் காணக் கண்கோடி வேண்டும். ஸ்ரீஹயக்ரீவரை ஒரு கோடி சந்திரனுக்குச் சமமானவர் என்றும், ஸ்ரீசக்கரத்தாழ்வாரை ஒரு கோடி சூரியனுக்குச் சமமானவர் என்றும் சொல்வர். இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீஹயக்ரீவப் பெருமாளையும் ஸ்ரீசக்கரத் தாழ்வாரையும் தரிசித்து அன்னதானம் செய்தால், சூரிய- சந்திர பலத்தையும் சகல ஐஸ்வரியங் களையும் பெறலாம்!
- சா.வடிவரசு,
படங்கள்: ராபின்மார்லர்