. சை.வம் தழைத்து ஓங்கிய சோழ தேசத்தில், வைணவம் மெள்ள மெள்ள வளர்ந்துகொண்டு இருந்த காலம் அது! சோழ நாட்டின் முக்கிய ஊர்களில் திருமாலுக்குக் கோயில்கள் கட்டப்பட்டு, மிகச் சிறப்பாக பூஜைகளும் வழிபாடுகளும் நடந்து வந்தன..
கும்பகோணம், மாயவரம், ஆடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், சீர்காழி எனப் பல ஊர்களிலும் மிகப் பிரமாண்டமான கோயில்கள் கட்டப்பட்டன. இவை தவிர, அடுத்தடுத்த முக்கிய கிராமங்களிலும் ஆலயங்கள் எழுப்பப்பட்டு, அந்த ஆலயத்தில் வழிபாடுகள் குறையற நடைபெற வேண்டும் என்பதற்காக, நிலங்களும் ஆடு- மாடுகளும் வழங்கப்பட்டன.

மக்களிடையே சைவ- வைணவ பேதங்கள் இல்லை. அவர்கள் சிவாலயங்களுக்குச் சென்று விபூதி தரித்து வந்தார்கள்; திருமால் கோயில்களுக்குச் சென்று, பெருமாளைக் கண்ணாரத் தரிசித்து, சிரசில் சடாரி ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டு, துளசி தீர்த்தத்தைச் சாப்பிட்டு, கோவிந்த நாமத்தைச் சொல்லியும் வந்தார்கள்.

மகா சிவராத்திரி நாளில் சிவனாருக்காகவும், வைகுண்ட ஏகாதசி நன்னாளில் பெருமாளுக்காகவும் விரதம் இருந்து, விடிய விடியக் கண் விழித்து, அதிகாலையில் குடும்பத்துடன் ஆலயங்களுக்குச் சென்று ஸ்வாமி தரிசனம் செய்து வந்தனர்.

சுழித்துக்கொண்டு ஓடும் காவிரி நதி, சோழ தேசத்தின் மிகப் பெரிய சொத்து. பாய்ந்தோடுகிற காவிரி நதியின் பேரழகும், விவசாயத்தைச் செழிக்க உதவும் அதன் அற்புதமான கொடையும் சோழ நாட்டுக்கு அழகு சேர்த்தன; பெருமையைத் தேடித் தந்தன.

சோழ தேசத்தில், காவிரியின் வடகரையிலும் தென்கரையிலும் உள்ள திருத்தலங்கள் ஏராளம். அதேபோல், காவிரியில் இருந்து கிளை பிரிந்து சென்ற ஆற்றின் கரையிலும் ஆலயங்கள் எழுப்பப்பட்டன. காவிரியில் இருந்து கிளை பிரிந்த நதியான முடிகொண்டான் ஆற்றுக்கு அருகிலும் ஓர் ஆலயம் அமைக்கப்பட்டது. வைணவக் கோயிலான அதில் வழிபாடுகளும் பூஜைகளும் திருவிழாக்களும் கோலாகலங்களும் எப்போதும் குறைவின்றி நடந்து வந்தன. மிகப் பெரிய சாந்நித்தியத்துடன் திகழ்ந்த ஆலயத்துக்கு இந்தப் பக்கம் தஞ்சாவூரில் இருந்தும், அந்தப் பக்கம் திருவாரூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து ஸ்வாமியைத் தரிசித்துச் சென்றனர். அந்தத் திருக்கோயில் அமைந்திருந்த திருத்தலம்... நன்னிலம்!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது நன்னிலம். திருவாரூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்தத் திருத்தலத்தில், கோயில் கொண்டிருக்கும் நாயகனின் திருநாமம் ஸ்ரீவரதராஜ பெருமாள். ஸ்ரீதேவி- ஸ்ரீபூதேவி சமேதராகக் காட்சி தரும் ஸ்ரீவரதராஜபெருமாளைத் தரிசித்தபடியே இருக்கலாம். அவ்வளவு அழகும் சாந்நித்தியமும் நிறைந்த திருமேனி!

சனிக்கிழமைகளிலும் புதன் கிழமைகளிலும் ஸ்ரீவரதராஜரைத் தரிசிக்க மாட்டு வண்டி கட்டிக் கொண்டு வருவார்களாம், நன்னிலத்துக்கு! புரட்டாசி மாதத்தின் ஒவ்வொரு நாளும் மிகச் சிறப்பாக பூஜைகள் நடைபெறும். சந்நிதி கொள்ளாத அளவுக்கு நைவேத்தியங்கள் படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும்.

இதனால் சோழ தேசம் இன்னும் இன்னும் செழித் தது. இதையடுத்து வந்த சோழ மன்னர்களும் கோயிலுக்கு வந்து வழிபட்டு, நிலங்களையும் பொன்னையும் பொருட்களை யும் தந்து மகிழ்ந்தனர். கோயிலுக்கு அர்த்த மண்டபம், முன் மண்டபம் என எழுப்பித் திருப்பணிகள் பல மேற் கொண்டனர்.

இந்தக் கோயிலில் எப்போதும் வழிபாடுகள் நடந்து கொண்டே இருக்க வேண்டும், வருடம் முழுவதும் விழாக்கள் கொண் டாட்டமாக நடந்தேற வேண்டும் என்பதற்காக, கோயிலில் உத்ஸவ மூர்த்தியாக ஸ்ரீவேணுகோபால ஸ்வாமியின் திருமேனியை அமைத்துக் கொடுத்து வழிபட்டு வந்தான் சோழ மன்னன் ஒருவன். இதனால் திருவிழாக்கள் என்ன, திருவீதியுலாக்கள் என்ன, திருமஞ்சனம் என்ன... என ஊரே எப்போதும் தேர்க்கூட்டம் திருவிழாக் கூட்டம் என திக்கு முக்காடிப் போனது!

ஸ்ரீராதா கல்யாணம், கோகுலாஷ்டமி, உறியடி உத்ஸ வம், நவராத்திரி, கருடசேவை என விழாக்களால் எப்போதும் களை கட்டியிருந்தது கோயில். பிற்பாடு, ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீராமச்சந்திர பாகவதர் முதலானோர் வருடந்தோறும் இங்கு வந்து ஸ்ரீராதா கல்யாண உத்ஸவம் மற்றும் உபந்யாசத்தைச் சிறப்புற நடத்தி வந்தனர். புரட்டாசியில் நடைபெறும் திருவீதியுலாவுக்கு வந்து தரிசித்து விட்டுப் பின்பு வயலில் இறங்கி விதைத்ததால், தை மாதத்தில் மிக அருமையான விளைச்சலைக் கண்டனர் சோழ தேசத்து மக்கள் எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர் ஊர்மக்கள்.

ஆனால், இன்று இவை எல்லாம் பழங்கதையாகிப் போனதுதான் மிகப் பெரிய வருத்தம். பல வருடங்களாக சிதிலமுற்ற நிலையில், வழிபாடுகளும் மெள்ள மெள்ளக் குறைந்துவிட்ட பரிதாபத்தை என்னவெனச் சொல்வது?

நஞ்சையையும் புஞ்சையையும் கட்டிக் காத்தருளிய நன்னிலம் ஸ்ரீவரதராஜபெருமாள், வழிபாடு களும் பூஜைகளும் இன்றிப் பல வருடங்களாகக் காத்துக் கிடந்தார்! உத்ஸவங்கள் குறைந்தன; உபன்யாசங்கள் நடக்கவே முடியாத நிலை. ஸ்ரீவரதருக்கும் ஸ்ரீவேணுகோபாலனுக்கும் எந்த வைபவமும் நடைபெறாத துயரத்தில் இருந்த கிராம மக்கள், 'ஸ்ரீவரதராஜ பெருமாள் கைங்கர்ய சபா’ என்றொரு கமிட்டியை அமைத்து, ஆலயத் திருப்பணிகளில் ஈடுபட்டனர். அன்பர்களின் பெரு முயற்சியால், திருப்பணிகள் மெள்ள நடைபெறத் துவங்கின. மிக அழகாக, கருடாழ்வாருக்கும் ஸ்ரீஅனுமனுக்கும் திருச்சந்நிதிகள் அமைக்கப்பட்டன. முன் மண்டபமும் அர்த்த மண்டபமும் எழுப்பப்பட்டன. ஸ்ரீவரதராஜ பெருமாள் சந்நிதி சீரமைக்கப்பட்டது.

கிட்டத்தட்ட முக்கால்வாசி திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில்... மீதமுள்ள பணிகளை முடித்து, கும்பாபிஷேக விழாவை விமரிசையாக முடிக்க வேண்டிய நிலையில்... போதிய நிதியின்மை காரணமாக கோயில் புனரமைப்புப் பணியில் மறுபடியும் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது என வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர் கைங்கர்ய சபாவினர்.

''வருகிற புரட்டாசி மாதத்தில் பழையபடி உத்ஸவமும் வைபவமும் நடத்திவிட வேண்டும் என்று ஆசைப்பட்டு, ஜூலை மாதத்தில் (8-ஆம் தேதி) கும்பாபிஷேகத் தேதி கூட குறித்துவிட்டோம். திருப்பணிகள் முக்கால்வாசி நிறைவுற்ற வேளையில், முதலில் சம்ரோக்ஷணம் எனப்படும் கும்பாபிஷேகத்தை எப்படியேனும் நடத்திவிடவேண்டும்; பிறகு, மிச்சசொச்சப் பணிகளைச் செய்துவிட வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளோம்'' என்று நம்பிக்கையும் ஆர்வமும் மேலிட, கைங்கர்ய சபாவினரும் நன்னிலம் கிராம மக்களும் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீவரதராஜரும் ஸ்ரீவேணுகோபால ஸ்வாமியும் குடிகொண்டு அருள்பாலிக்கும் ஆலயத்துக்கு, நம்மால் முடிந்த கைங்கர்யத்தைச் செய்ய வேண்டாமா? நஞ்சை, புஞ்சை என வயல்களையும் நெல்மணிகளையும் செழிக்கச் செய்த பெருமாளின் கோயிலுக்கு, நாம் கொட்டிக் கொடுக்காவிட்டாலும் கொஞ்சமாவது தந்து அவருடைய பேரருளுக்குப் பாத்திரமாக வேண்டாமா?

சோழ தேசம் என்றாலே நம் நினைவுக்கு வரும் மாமன்னன் ராஜராஜப் பெருவுடையார்தான்! அவரின் திருநட்சத்திரமான சதய நட்சத்திர நாளில், இந்தக் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இது, சிறப்புக்குரிய ஒன்று.

நன்னிலம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் திருப்பணியில் பங்கெடுப்போம்; நல்லன எல்லாவற்றையும் தந்தருள்வார் ஸ்ரீவரதராஜ பெருமாள்!

படங்கள்: இ.ராஜவிபீஷிகா