Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

Published:Updated:
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

த்திராடம் நட்சத்திரத்தை 'உத்திராஷாடம்’ என்கிறது வேதம். இதன் தேவதை  விச்வே தேவர்கள். 'எனது வேண்டுகோளை காது கொடுத்துக் கேட்கவேண்டும். நான் செய்யும் வேள்வியில் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும். வேள்வித் தலைவன் வேண்டும். பசுக்களை அளிக்கவேண்டும். எனது பயிர்த்தொழிலை வளமாக்க அவ்வப்போது மழை பொழிந்து உதவ வேண்டும். பயிரும் பயிரைக் காக்க மழையும் தந்து எனது வாழ்க்கையை வளமாக்க வேண்டும்’ எனும் வேண்டுகோள் வேதத்தில் உண்டு. (தன்னோவிச்வே உபச்ருண்வந்து தேவா:..).

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முதலில் சந்திப்பது சூரிய தசை. அது 6 வருடங்கள் நீடிக்கும். கிருத்திகை மற்றும் உத்திரத்துக்கும் இது பொருந்தும். சூரியனுக்கு ஆன்மகாரகன் என்ற பெயர் உண்டு. கிரக நாயகன் சூரியன். அவன் ஆரம்ப தசையாக இருப்பது சிறப்பு. சூரியனிடமிருந்து கிடைக்கும் ஆரோக்கியம், செல்வாக்கு போன்றவற்றை இந்த நட்சத்திரக்காரர்கள் எளிதில் பெற்றுவிடுவார்கள். ஆண்மையும், ஆளுமையும், தன்னம்பிக்கையும் தசாநாதனின் சேர்க்கையில் வலுப்பெற்றுவிடும்.

சூரிய கிரணங்கள் தண்ணீரை ஈர்த்து மேகமாக்கி, மழை பொழிந்து பயிர் வளரக் காரணமாகின்றன. நாட்டின் செழிப்புக்கு ஆதாரமான மழையைத் தந்து உதவும் சூரியனின் தசையில், நட்சத்திரத்தோடு இணைந்த விச்வே தேவர்களின் ஒத்துழைப்பால், வாழ்வின் அடித்தளம் நிலைபெற்று விளங்கும் தகுதியைப் பெறுவார்கள், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.

தனுர் ராசியில் ஒரு பாதமும் மகரத்தில் மூன்று பாதமுமாகப் பரவியிருக்கும் இந்த நட்சத்திரம். குருவும் சனியும் இரண்டு ராசிகளுக்கும் அதிபதியாக இருப்பதால், இருவரது இயல்பும் அவர்களிடம் தென்படும். முதல் பாதத்துக்கு அதிபதி குரு; மற்ற இரண்டு பாதங்களுக்கு சனி; கடைசி பாதத்துக்கு குரு. எனவே, குருவும் சனியும் தமது பங்கை சரிபாதியாக அளிப்பர். ராசி புருஷனின் பாக்யம், கர்மம், லாபம், வியயம் (அதாவது எதிர்பாராத வரவு, செயல்பாடு, சேமிப்பு, இழப்பு) ஆகிய நான்கிலும் இந்த நட்சத்திரத்தின் தொடர்பு உண்டு. கால புருஷனின் தொடைகளிலும் மூட்டுகளிலும் பரவியிருக்கும் இந்த நட்சத்திரம், அந்த அங்கங்களின் செழிப்பை வரையறுக்கும்.

உத்திராடத்தில் பிறந்தவனிடம் இயல்பாகவே அடக்கமும் பணிவும் இருக்கும். அறத்தைப் பின்பற்றுவதில் ஆர்வம், நண்பர்களுடன் பழகுவதில் மென்மை, உதவியை மறவாமல் உதவியவரை அணைத்துக் கொள்ளும் பாங்கு,  எல்லோரிடமும் பாகுபாடின்றி பிரியமாகப் பழகும் பக்குவம் ஆகிய அத்தனையும் உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவனிடம் காணலாம் என்கிறார் வராஹமிஹிரர்.

##~##
க்ஷேத்திராடனம், தோட்டம் துறவுகள் அமைத்துப் பராமரித்தல், சிற்பம் போன்ற கலைகளை ஆர்வத்துடன் வளர்த்து மகிழ்தல், இன்சொல்லால் மக்களை ஈர்த்து தனது பெருமையை வளர்த்துக் கொள்ளுதல் போன்றவை இந்த நட்சத்திரத்தில் பிறந்தவனிடம் இருக்கும் என்கிறார் பராசரர்.
முதல் பாதத்தில்
பிறந்தவன் மக்கள் தலைவனாகத் திகழ்வான்.
2-வதில்
துஷ்ட சகவாசம் அவனை அலட்டும்.
3-ல்
தற்பெருமையில் கவனம் செலுத்துவான்.
4-ல்
அறநெறியுடன் வாழ்வான் என்கிறது பிரஹத் ஸம்ஹிதை.

இது த்ருவ நட்சத்திரத்தில் (நிலையானது) அடங்கும். அரசர்களின் சாம்ராஜ்ய பட்டாபி ஷேகம், உலகை நடுங்கவைக்கும் உத்பாதங்களை அழிக்க செயல்படும் சாந்தி... அதாவது நில நடுக்கம், பெருவெள்ளம், புயல், எரிமலை, கொள்ளி மீன் போன்ற அழிவிலிருந்து விடுபட செய்யப்படும் சாந்திகர்மா, செடி- கொடிகளை நட்டு வளர்த்தல், கிராமங்கள் மற்றும் நகரங்களை உருவாக்குதல், விதை விதைத்தல், அறிநெறியை வளர்க்கும் செயல்கள் ஆகிய அனைத்திலும் இந்த நட்சத்திரத்தின் இணைப்பு செழிப்பை அளிக்கும் என்கிறார் பராசரர்.

இரண்டு தாரைகளை உள்ளடக்கியது இந்த நட்சத்திரம். இதில் செய்யப்படும் அன்னப்ராசனம் வாழ்க்கை முழுதும் உணவு தட்டுப்பாடு இல்லாமல் செய்துவிடும் என்கிறது ஜோதிடம். முதல் பாதத்தில் பிறந்தவன் தர்ம சாஸ்திரத்தை அறிந்து செயல்படுபவன், கொடையாளியாகவும் அறிஞனாகவும் திகழ்வான். குரு, பிதா, பிதாமஹர் போன்ற பெரியோரை மதிப்பான். தேவ ஆராதனையில் பிடிப்பு இருக்கும். 2-வதில் சொல்வளம் பெற்றவன். தனது செயல்பாட்டை பகிரங்கமாக வெளிப்படுத்த மாட்டான். ஆனால், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படுவான். 3-ல் கட்டான உடல் அமைப்பு, மறைமுகமாக தவறிழைப்பான், ஆசுகோபி, இரக்கமற்றவனாகவும் இருப்பான். 4-ல் அறவழியில் ஆர்வம், உண்மை பேசுபவன். லோகாயத வாழ்வில் பிடிப்பு, குறிப்பிட்ட துறையில் விசேஷ அறிவு பெற்றவன்... இப்படி நான்கு பாதங்களுக்கு பலன் சொல்லும் பலசாரசமுச்சயம்.

முக்காலும் காலுமாக இரண்டு ராசிகளில் பரவியிருக்கும் நட்சத்திரங்களில் இதுவும் ஒன்று. இரண்டு ராசிகளின் பலனும் இதில் தென்படும். இரண்டும் கலந்த கூட்டு பலனாக அனுபவத்துக்கு வரும். கிருத்திகைக்கும் உத்திரத்துக்கும் இது பொருந்தும். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவையும் முக்காலும் காலுமாக இரண்டு ராசிகளில் இணைந்தாலும் வேறுபாடு உண்டு. அதாவது கிருத்திகை, உத்திரம், உத்திராடத்தை எடுத்துக்கொண்டால்... முதல் ராசியில் முதல் பாதம்; இரண்டாவது ராசியில் மூன்று பாதங்கள். புனர்பூசத்துக்கு... முதல் ராசியில் 3 பாதங்கள்; இரண்டாம் ராசியில் ஒரு பாதம் என்கிற பாகுபாடு உண்டு. அதிக இடத்தில் பரவியிருக்கும் ராசி பலன் விகிதாசாரப்படி பலன் தென்படும். தனுசில் முதல் பாதம் இருந்தாலும் அதிக பாதங்கள் மகரத்தில் இருப்பதால் மகர ராசியின் பலனையும் இணைத்து பலனின் மாறுபாடு இருக்கும்.

நட்சத்திரத்துக்கு பலன் சொல்லும் விஷயத் தில், அது இருக்கும் ராசிநாதனோடு நிற்காமல் அம்சக நாதனையும் சேர்த்து பலன் சொல்ல வேண்டியிருப்பதால், கிரகங்களின் பலனும் சேர்ந்துதான் நட்சத்திர பலன் நிறைவுபெறும். எல்லா கிரகங்களும் நட்சத்திரத்துடன் சார வேளையில் இணைந்திருப்பதால், அத்தனை கிரகங்களின் தாக்கமும் நட்சத்திர பலனில் மாறுபாட்டை விளைவிக்கும்.

நற்பலனை சுவைக்கவும் கெடுதலை அறவே அழிக்கவும் வழிபாடு உதவும். பரம் பொருளின் சைதன்யத்தில் நட்சத்திரம் ஒளிமயமாக விளங்குகிறது. நட்சத்திர வடிவில் பரம்பொருளின் பணிவிடையே நிகழ்கிறது. 'விம் விச்வேப்யோ தேவேப்யோ நம:’ என்று சொல்லி வணங்க வேண்டும். 16 உபசாரங்களையும் முறையாகச் செய்ய வேண்டும்.'விச்வேப்யோ தேவேப்யோ நம: என்று சொல்லி அடிபணிந்து வணங்கலாம். 'ஸமந்ஜந்து விச்வேதேவா:...’ என்கிற மந்திரம் ஓதி வழிபடலாம். அல்லது 'ஆனோவிச்வே அஸ்க்ரா’ என்கிற மந்திரத்தைச் சொல்லி 12 நமஸ்காரங்களைச் செய்யலாம்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

கைகளில் புஷ்பங்களை அள்ளி அளித்து, 'உத்திராஷாட நஷத்திர தேவதாப்யோ நம:’ என்று அடிபணியலாம். 'விச்வான் தேவான் நமஸ்யாமி ஸர்வ காம பலப்ரதான் குர்வந்து ஸபலம் கர்ம குர்வந்து ஸததம் சுபம்’ - என்ற செய்யுளைச் சொல்லி வணங்கலாம். வணங்க முடியாத சூழலில், மனதில் அந்த செய்யுளை அசை போடலாம். ஏதாவது ஒரு முறையில் தேவதையின் தொடர்பு மனதில் இருக்க வேண்டும். மனம் ஈடுபட்டு இருந்தால் மட்டுமே வழிபாட்டின் பலன் இறுதி பெறும். செயல்பாடு மட்டுமே பயன்படாது. அதோடு மனம் நிச்சயம் இணைந்திருக்க வேண்டும்.

பெயரும் உருவமும் அற்றது பரம்பொருள். பரம்பொருளை சுட்டிக்காட்டப் பயன்படும் கருவிகள் பெயர்கள். ஆகாசத்தில் இருக்கும் சந்திரனை சுட்டிக்காட்ட, மறைத்துக் கொண்டிருக்கும் மரக்கிளையின் இடைவெளியைப் பயன்படுத்தி, 'அதோ பார் அந்த கிளையின் மேல் சந்திரன் இருக்கிறான்’ என்று சொல்வதுண்டு. 'இந்த உருவம்’ 'இந்த பெயர்’ பரம்பொருளை புலப்படுத்துகிறது என்று பொருள். குழந்தை பிறக்கும்போது பெயர் இல்லை; நாம் பெயர் சூட்டுகிறோம். பெயர் சொல்லில் இல்லை. மனம் உணருகிறது; அந்த உணர்வு வெளிவர சொல் பயன்படுகிறது. உண்மையான பெயர் இல்லாத

தால் பெற்றோர்களும் உற்றார்- உறவினரும் ஒருவனை பல பெயர்களில் அழைப்பார்கள். 'புனைபெயர்’ என்ற பெயரிலும் புதுப்பெயரை ஏற்பது உண்டு. சிறு வயதில் சூட்டிய பெயர் மறைந்து புனை பெயர் நிலைத்துவிட்டவர்களும் உண்டு. வக்கீலின் அஃபிடவிட்டில்... தற்கால சூழலில் பெயர் மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது.

இறைவனின் குணாதிசயத்தை வைத்து இறை உருவங்களுக்கு அஷ்டோத்திரம், ஸகஸ்ரநாமம் என்று பல பெயர்கள் சொல்வது உண்டு. எல்லா பெயர்களும் அவன் பெயர். நம்மைப் போல் அவனுக்குத் தனிப் பெயர் சொல்ல இயலாது. மனதில் குடி கொண்ட இறையுருவத்தின் வெளிப்பாடு - பெயர். புளிய மரம், மாமரம், பலா மரம் - இந்தப் பெயர்கள் அத்தனையும் மரங்களில் இல்லை. மனதில் இருக்கும் எண்ணத்தின் வெளிப்பாடு!

கண்கள் இறையுருவத்தைப் பார்க்கட்டும், நாக்கு பெயரைச் சொல்லட்டும், மனம் எண்ணட் டும், கைகள் புஷ்பத்தை அள்ளிப் போடட்டும், காதுகள் அவன் பெயரை கேட்கட்டும். கால்கள் அவன் ஆலயத்துக்குச் செல்லட்டும், மூக்கு அவனது பாதம் பட்ட துளசியை முகரட்டும், தலை அவனை வணங்கட்டும் என்று பல பெயர்களைச் சொல்லி உடலுறுப்புகளை இணைப்பார் குலசேகரப் பெருமாள் (ஜிஹ்வே கீர்த்தய...). இங்கெல்லாம் உடலுறுப்புகளை பரம்பொருளுடன் இணைக்க, ஒரு கருவியாக பெயர் பயன்பட்டது. உறுப்புக்கு உகந்தவாறு பெயரிலும் மாறுதல் தென்பட்டது. கவனத்தை நம் பக்கம் திருப்புவதற்கு பெயர் பயன்படுகிறது. ஆக, பெயரே இறையுருவம் ஆகாது. பெயரை உச்சரிக்குமுன் அவன் மனதில் இருப்பதால், பெயரே அவன்தான் என்று நாம் சொல்கிறோம். அதாவது மனதில் இருப்பது வாக்கில் வரும். (யத்தி மனஸாத்யாயதிதத்வாசாவததி).

கிளிப்பிள்ளை பகவானின் நாமாவைச் சொல் லும். ஆனால் அது மனதில் அவனை எண்ணாது. பெயருக்கும் இறையுருவத்துக்கும் இருக்கும் தொடர்பு, ஆறாவது அறிவுக்கு மட்டுமே எட்டும். தொடர்பை உண்டுபண்ணுவது ஆறாவது அறிவு. அந்தத் தொடர்பு நமது செயல்பாடு. ஆகவே திருநாமமே இறையுருவம் ஆகிவிடாது. பெயரானது இறையுருவத்தை ஞாபகப்படுத்தி மனதில் இருக்க வைப்பதால், பெயரை இறைவனாக நினைக்கிறோம். 'இறை நாமமே இறுதி பலனை உறுதி யாக அளிக்கும்’ என்கிறோம்.

நெய் ஆயுளை வளர்ப்பதால் நெய்யை ஆயுள் என்று சொல்வோம். நாம மஹாத்மியத்தைச் சொல்ல வந்த ஹனுமான் ஸ்ரீராமனை விட அவரின் நாமா சகல பாக்கியங்களையும் அளிக்கும் வல்லமை பெற்றது என்பார் (கல்யாணானாம் நிதானம்....) அர்த்தத்துக்கும் சப்தத்துக்கும் இருக்கும் தொடர்பை மனம் நிர்ணயிக் கிறது. பெயர் உயிரோட்டத்துடன் செயல் பட மனதின் தொடர்பு வேண்டும். வேத சப்தங்கள் எப்போதும் அர்த்தத்துடன் இணைந்து வெளிவரும் (ஒளத்பத்தி கஸ்து சப்தஸ்ய அர்த்தே னஸஹஸம்பந்த:). ரிஷிகளின் சொற்களை ஒட்டி அர்த்தம் இணைந்துவிடும். நாம் அர்த்தத்தை ஒட்டி சொற்களை உருவாக்குவோம் (லௌகிகானாம்து சாதுனாம..).

வேதம் சப்தப்ரதானம்; புராணங்கள், அதை ஒட்டிய இலக்கியங்கள் அர்த்தப்ரதானம் என்பர் (யத்வேதாத் ப்ரபு ஸம்மிதாததிததம் சப்தப்ரதானாச்சிரம், யச்சார்த்த ப்ரவணாத்). நாம் சொல்லும் சப்தத் துக்கு, நம் மனதில் இருக்கும் எண்ணம்தான் அர்த்தம் (விவஷாபரதந்த்ரத்வாத் லௌகிதவாகி யானாம்). இறைவனின் நினைவுடன் வெளி வரும் சொற்களுக்குத்தான் பெருமை உண்டு. ஆகையால், விச்வே தேவரை மனதில் இருத்தி, விச்வேப்யோ தேவேப்யோ நம:’ என்று சொல்வது தகும்.

- வழிபடுவோம்