Published:Updated:

’சொந்தமாக வீடு கட்டணும்!’

’சொந்தமாக வீடு கட்டணும்!’

’சொந்தமாக வீடு கட்டணும்!’

’சொந்தமாக வீடு கட்டணும்!’

Published:Updated:
’சொந்தமாக வீடு கட்டணும்!’
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

க்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை, கடந்த 17.7.12 அன்று ஈரோடு மாவட்டம் பவானி ஸ்ரீசங்கமேஸ்வரர் கோயிலில் நடந்தேறியது. சக்தி விகடன் நடத்தும் 91-வது விளக்கு பூஜை இது!

பவானி, ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், திருச்செங் கோடு எனப் பல ஊர்களில் இருந்தும் வாசகிகள் ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டனர்.

''நான் சக்தி விகடன் வாசகின்னு சொல்லிக்கறதுல பெருமைப்படுறேன். சென்னைல குடியிருந்தப்ப கலந்துக்கவே முடியலை. ஆனா திடீர்னு சேலத்துக்கு குடிவரவேண்டியதாயிருச்சு. பார்த்தா... இங்கே பக்கத்துல விளக்குபூஜைன்னு அறிவிப்பு. இது, எனக்காகவே இங்கே நடந்த மாதிரி ஒரு உற்சாகம்'' என உருகி உருகிப் பேசுகிறார் வாசகி ராதாபாய்.

''எல்லாரும் நல்லாருக்கணும். இதுதான் என் பிரார்த்தனை'' என்று வாசகி தேவகி தெரிவித்தார். ''என் குழந்தைகள் நல்லாப் படிக்கணும். கணவரின் வியாபாரம் நல்லபடியா நடந்து, கடனெல்லாம் அடைச்சு, நிறைவா இருக்கணும்'' என்று வேண்டிக் கொண்டதாகத் தெரிவித்தார் காளிங்கராயன்பாளையம் வாசகி பரமேஸ்வரி.

''மேற்படிப்பை நல்லவிதமா முடிக்கணும்'' என்று வாசகி ரேகாவும், ''கடையில நல்லபடியா வியாபாரம் நடந்து, சொந்தமா வீடு கட்டணும்'' என்று வாசகி அம்சவேணியும் பிரார்த்தித்தனர். 'கல்யாண வரன் கைகூடணும்'' என்று வாசகி சுகன்யாவும் ''பையனுக்கு நல்ல வேலை கிடைக்கணும்'' என்று வாசகி கலைவாணியும் வேண்டிக் கொண்டனர்.

சங்கமேஸ்வரர் சந்நிதியில் சொல்லிவிட்டீர்கள்தானே... சங்கடங்கள் யாவும் தீர்ந்துவிடும், கவலையை விடுங்கள்!

- மு.கார்த்திகேயன்,
படங்கள்: க.ரமேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism