Published:Updated:

அம்பிகையைக் கொண்டாடுவோம்!

SATTANATHAN N
அம்பிகையைக் கொண்டாடுவோம்!

முப்பெரும் தேவியரைப் படங்களில் மட்டுமே நாம் ஒருசேரப் பார்த்திருப்போம். ஆனால், தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் கோயிலில் இவர்கள் மூவரும் கிரிகுஜாம்பிகை சந்நிதியில் ஒன்றாக காட்சி தருகின்றனர்.

இந்தத் திருத்தலத்துக்கு வந்து தரிசனம் செய்தால் தோஷங்கள் எதுவும் அண்டாது என்பது ஐதீகம். எங்கு திரும்பினாலும் கோடி புண்ணியம் என்ற கணக்கில், ஏழு கோடி புண்ணியத்தை ஒரேநேரத்தில்பெற தேவியர் இங்கே வந்ததாக ஐதீகம். அதனால், இங்கு வரும் பக்தர்களும் ஏழு கோடி புண்ணியம் பெறுவர் என்கிறார்கள். இந்தக் கோயிலில் உள்ள சூரிய புஷ்கரணி குளத்தில் நீராடினால் குஷ்டநோய் கூட தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.

ம்மனை வழிபடும்போது, பழங்களால் அபிஷேகம் செய்தால் சிறந்த பலன் கிடைக்கும். வாழைப்பழ அபிஷேகம் செய்தால்... சாகுபடி செய்த பயிர்கள் நல்ல மகசூல் தரும். பலாப்பழ அபிஷேகம் செய்தால்... நினைத்தது நடக்கும். மாம்பழ அபிஷேகம் செய்தால்... குழந்தை பாக்கியம் கிட்டும். மாதுளம்பழ அபிஷேகம் செய்தால்... கோபம் தீரும். எலுமிச்சம்பழம் அபிஷேகம் செய்தால்... பகைவர் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.

கோவை மாவட்டம் சூலக்கல் என்ற ஊரில் கோயில் கொண்டுள்ள மாரியம்மன் தானாகத் தோன்றியவள். இந்த அம்மன் சூல வடிவில், தன்னை மிதித்த பசுவின் கால் தடத்துடன் காட்சி தருவது சிறப்பு. இவரை வழிபட்டால் கண் நோய், அம்மை நோய் நீங்கும் என்கிறார்கள்.

சிவகங்கை அருகே அமைந்துள்ள பிள்ளைக்காளி அம்மன் கோயில் மிகவும் விசேஷமான திருத்தலம். குழந்தை பாக்கியம் தாமதமாகும் தம்பதியருக்கு அந்தப் பாக்கியத்தை, தேடி வந்து வழிபட்ட மாத்திரத்திலேயே இந்த அம்மன் வழங்குவதால் அந்தப் பெயர்! ஆனி மாதக் கடைசி வெள்ளிக்கிழமை இங்கு திருவிழா நடத்தப்படுகிறது. அப்போது, பனை ஓலையைக் கொண்டு செய்யப்பட்ட தேரில் அம்பாள் வீற்றிருக்க... அதை இரண்டு காளை மாடுகள் இழுத்து வருவது முக்கிய நிகழ்ச்சியாகும்.

மிழகத்தில் அம்மை நோய் தீர மாரியம்மன் வழிபாடு செய்வது வழக்கம். அதேபோல், காசியில் அம்மை நோய் கண்டவர்கள் ஒரு அம்மனுக்கு தயிர், பால் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். அந்த அம்மனின் பெயர்- சீதளாதேவி.

தொகுப்பு: இரா.பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு
எஸ்.விஜயலட்சுமி, சென்னை-88
தேனி முருகேசன்