Election bannerElection banner
Published:Updated:

அள்ளித்தரும் கனகதாரா யாகம்!

அள்ளித்தரும் கனகதாரா யாகம்!

அள்ளித்தரும் கனகதாரா யாகம்!
##~##
ல்லவர்களின் சொல்லுக்கு என்றுமே மதிப்பு உண்டு. அந்த வகையில், ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தை இன்றும் பலர் பாராயணம் செய்து பலன் பெறுவது கண்கூடாக நடந்து வருகிறது. ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரத்தை இயற்றியதே ஓர் அற்புதமான நிகழ்ச்சி.

அப்போது அவருக்கு வயது 8. ஒரு வீட்டுக்கு பி¬க்ஷ கேட்கச் சென்றிருந்தார். அந்த வீட்டில் வாழ்ந்தவர் பெயர் அயாசகன். பெயரைப் பார்த்தாலே புரியுமே... யாரிடமும் எதையும் கேட்க மாட்டார். ஆதிசங்கரர் வந்தநேரம் அவர் வெளியில் சென்றிருந்தார். அவரின் மனைவி மட்டும்தான் வீட்டில் இருந்தாள். அந்த வீட்டுக்குத்தான் ஆதிசங்கரர் சென்று, பி¬க்ஷ கேட்டார். அந்த வீட்டிலோ ஆதிசங்கரருக்கு கொடுக்க எதுவும் இல்லை. அந்த வீட்டுப் பெண்மணி மனம் வருந்தினாள். 'அய்யோ... நேற்று ஏகாதசி ஆயிற்றே... இந்தக் குழந்தை விரதம் இருந்திருக்குமே... எதையும் சாப்பிட்டு இருக்காதே... இந்தக் குழந்தைக்கு உணவாக எதையாவது தர என்னால் முடியவில்லையே... எனக்கு கொடுப்பினை இல்லையே...’ என்று வருந்தினாள்.

அள்ளித்தரும் கனகதாரா யாகம்!

பின்பு, தன் வீட்டில் இருந்த இரண்டு நெல்லிக் கனிகளை எடுத்து ஆதிசங்கரரின் பி¬க்ஷ பாத்திரத்தில் போட்டாள். அவளுடைய வறுமையைப் பார்த்த ஆதிசங்கரர், அவர்கள் வீட்டில் செல்வம் வளம் கொழிக்க மகாலட்சுமியை வேண்டிப் பாடினார். அந்தப் பாடல்கள்தான் கனகதாரா ஸ்தோத்திரம். ஆதிசங்கரர் இந்தப் பாடல்களைப் பாடப் பாட... மகாலட்சுமி அந்த வீட்டில் தங்க நெல்லக்கனிகளை மழையாகக் கொட்டினாள். இன்றும் அந்த வீடு கேரளாவில் 'ஸ்வர்ணத்து மனை’ என்று இருக்கிறது.

இவ்வளவு சிறப்புமிக்க கனகதாரா ஸ்தோத்திரத்தை இன்றும் பாராயணம் செய்து பலன் பெறுவோர் நிறைய உண்டு. அந்தப் பலன், எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக கொடைக்கானல் தாலுகாவில் பூம்பாறை என்கிற கிராமத்தில் உள்ள ஸ்ரீபூங்காவனம் ஸ்ரீமகாலட்சுமி கோயிலில் 1.8.12 அன்று புதன்கிழமை காலையில் கனகதாரா சிறப்பு ஹோமம் நடைபெற உள்ளது. இந்த யாகத்தில் கலந்துகொள்வோருக்கும் லட்சுமி கடாட்சம் கிட்டும். நீங்களும் பூம்பாறை ஸ்ரீமகாலட்சுமி கோயிலுக்குச் சென்று, லட்சுமி கடாட்சம் பெற்று வாருங்களேன்...!

-  விவேகநந்தா

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு