Published:Updated:

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

Published:Updated:
கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்
கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

'உங்க அமெரிக்கப் பயணத்தில் மறக்க முடியாத அனுபவம் எது?’ என்று நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'அமெரிக்காவுக்கு இப்போது நான் நாலாவது முறையாகச் சென்றாலும், இந்த முறை என் துணைவியாரும் என்னோடு வந்ததுதான் மறக்க முடியாத அனுபவம். நாங்கள் தங்கியிருந்த நாட்களில் அங்கே அதிகம் போன இடம் கோயில்கள்தான்!' என்று நான் சொன்னபோது, 'என்னது... அமெரிக்காவில் இந்துக் கோயில்களா?' என்று நண்பரும், உடன் இருந்த எல்லோரும் வியந்தார்கள்.

##~##
'ஆமாம்! அமெரிக்காவில் இருக்கின்ற 53 மாநிலங்களிலும் சேர்த்து 500-க்கும் மேற்பட்ட இந்துக் கோயில்கள் இருப்பதாக ஒரு தமிழ் நண்பர் சொன்னார். நியூஜெர்ஸி பகுதியில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளனவாம். அங்கே தமிழ்ச் சங்கக் கூட்டங்களைக் கோயில்களில் வைப்பதன் மூலம் பக்தியும் தமிழும் கைகோப்பதை என்னால் பார்க்க முடிந்தது. இன்னொரு அதிசயம் என்ன தெரியுமா? அமெரிக்காவில் நான் பார்த்த அளவில் புல்வெளிகள், சோலைகள் ஆகியவற்றில் இருந்த அணில்கள் நம்மூர் முயல்கள்போல இருந்தன. அவற்றின் முதுகில் கோடுகள் இல்லை!' என்றேன்.

'அப்ப அது அணிலே இல்லை' என்றார் ஒருவர். 'கோடுகள் இல்லாத அணிலா?' என்று இன்னொருவர் கவலைப்பட்டார்.  'அட, விடுய்யா! நம்ம ஊர்ல இதுக்கு ஒரு கதையே உண்டு. ராமர் இலங்கைக்குப் போக பாலம் கட்டுறப்போ அணில் உதவினதால, நன்றியோட அதன் முதுகுல தடவுனாராம்; அதனால கோடு விழுந்துச்சாம். ராமர்தான் அமெரிக்கா போயிருக்கமாட்டார்ல... அதனாலதான் அங்கே கோடு இல்லாத அணில்' என்று ஒருவர் விளக்கம் தந்தார். எல்லோரும் கைதட்டினார்கள்.

'இவர் சொல்லுறதுகூட நல்லாதான் இருக்கு'' என்று பாராட்டிய நான், ''அணில் முதுகுல இருக்குற கோட்டுக்கு ராமர்தான் காரணம் என்பதை வெச்சு ஒரு புதுக்கவிதை வந்திருக்கு, தெரியுமா?' என்று கேட்டேன். 'தெரியுமே..! 'இந்த அரசாங்க ஆட்கள் எதைத் தொட்டாலும் வரிதான்!’ என்று சட்டென எங்கள் நண்பர் கவிதைப் பித்தன் தாடியை வருடியபடி சொல்ல, எல்லோரும் அவருக்கு சபாஷ் சொன்னோம்.

பேச்சு வேறெங்கெங்கோ திசைதிரும்பிற்று. 'அமெரிக்காவில் இருக்கிற மாநிலங்கள் எத்தனை என்பதை ஈஸியா நினைவில் வெச்சுக்க ஒரு 'ஐடியா’ இருக்கு, தெரியுமா?' என்று புதிர் போட்டார் வரலாற்றுத்துறை பேராசிரியரான நண்பர்.

'மேப்பைப் பார்த்து தெரிஞ்சுக்க வேண்டியதுதானே?' என்று ஒருவர் அலுப்புடன் கேட்க, 'அது தேவையே இல்லை. அமெரிக்கக் கொடியில் நட்சத்திரங்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்தானே? அந்த நட்சத்திரங்களின் எண்ணிக்கைதான் அமெரிக்க மாநிலங்களின் எண்ணிக்கை' என்று அவர் சொன்னபோது எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.

அந்த நேரத்தில் ஜில்ஜில் ஜிகர்தண்டா குளுமையான மணத்தோடு ஐஸ்கிரீம் கப்புகளில் வந்து சேர, அத்தனை பேரும் அமெரிக்காவை மறந்து ஜிகர்தண்டாவில் ஐக்கியமானார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism