Published:Updated:

வாசகர் தகவல்கள்

வாசகர் தகவல்கள்

வாசகர் தகவல்கள்

வாசகர் தகவல்கள்

Published:Updated:

கோகுலாஷ்டமி கொண்டாடும் விதம்

வாசகர் தகவல்கள்

கோகுலாஷ்டமியன்று நம் இல்லத்தைத் தூய்மைப்படுத்தி, வாசல்படியில் இருந்து பூஜை அறை வரை ஸ்ரீகண்ணனின் திருப்பாதங்களைப் பச்சரிசிக் கோல மாவால் அழகாக வரைந்து மகிழ்வார்கள். இதன் அர்த்தம்... ஸ்ரீகண்ணனே தன் திருப்பாதங்களைப் பதித்து நடந்து வந்து, பூஜை அறையில் நாம் வைத்துள்ள நைவேத்திய பட்சணங்களை ஏற்றுக்கொள்கிறார் என்பதாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பூஜை அறையில் கண்ணன் படம் அல்லது விக்கிரகம் வைத்து அலங்காரம் செய்து, இருபுறமும் குத்துவிளக்கேற்றி, நடுவே பூஜைப் பொருட்களான தேங்காய், வெற்றிலைப் பாக்கு, பூ, பழம் வைக்க வேண்டும். இவற்றுடன் நைவேத்திய பட்சணங்களும் இடம்பெற வேண்டும்.

வெல்லச்சீடை, உப்புச் சீடை, கைமுறுக்கு, தேன்குழல், லட்டு, மைசூர்பாகு, பால்கோவா, அவல், வெல்லம், தயிர், பால், வெண்ணெய், திரட்டுப்பால், பர்பி, பூரி மற்றும் பழ வகைகளான நாவற்பழம், கொய்யாப்பழம், விளாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்யலாம்.

அன்று காலையில் இருந்து ஸ்ரீமத் பாகவதம், கிருஷ்ணாஷ்டகம், ஸ்ரீகிருஷ்ணன் கதைகள் படிக்க வேண்டும். கிராமங்களில் மாலை வேளையில்தான் கிருஷ்ண ஜயந்தி பூஜை செய்வார்கள். வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்தபிறகு, அருகே உள்ள ஸ்ரீகண்ணன் ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி, அங்கு நடத்தும் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் ஆகியவற்றைக் கண்டு மகிழ்வது சிறப்பு.

கிருஷ்ண ஜென்ம பூமியான மதுரா வாழ் மக்கள், அன்று இரவு முழுவதும் கண் விழித்திருந்து பூஜை செய்வார்கள். யமுனை நதியின் ஒரு கரையில் மதுராவும், மறு கரையில் கோகுலமும் அமைந்துள்ளது. அதனால், அன்று யமுனைக்கு ஆரத்தி காட்டி பூஜை செய்வார்கள்.

தொகுப்பு: உ.ராமதாஸ், புதுச்சேரி

அதிசய ஸ்ரீகண்ணன் விக்கிரகங்கள்

##~##
தி
ருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஸ்ரீவேணுகோபாலன் ஆலயத்தில் அருள்புரியும் ஸ்ரீகண்ணனின் விக்கிரகம், நேபாள நாட்டில் பாயும் கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்ராமக் கல்லினால் ஆனது.

கேரள மாநிலம் குருவாயூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீஉன்னிகிருஷ்ணன், பாதாள அஞ்சனம் மற்றும் மூலிகையினால் உருவானவர்.

சென்னை மயிலாப்பூரில் ரங்கா சாலையில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீகண்ணனின் விக்கிரகம், தங்கத்தை உரசிப் பார்க்கும் 'டச்-ஸ்டோன்’ என்று சொல்லப்படும் ஒரு வகைக் கல்லினால் ஆனது.

- டி.ஆர்.பரிமளம், சென்னை

ருக்மிணி நேசித்த கண்ணன்!

வாசகர் தகவல்கள்

ர்நாடக மாநிலத்தில் உள்ள திருத்தலம் உடுப்பி. இங்கே அருள்பாலிக்கும் ஸ்ரீகிருஷ்ணர் விக்கிரகம், ருக்மிணியால் பூஜிக்கப்பட்ட சிறப்புபெற்றது.

ஒருமுறை ருக்மிணிக்கு, ஸ்ரீகிருஷ்ணர் பாலகனாக இருந்தபோது எப்படி இருந்தார் என்பதைக் காணும் ஆவல் ஏற்பட்டது. தனது ஆசையை தேவசிற்பியான விஸ்வகர்மாவிடம் கூறினாள். விஸ்வகர்மாவும் சாளக்ராம கல்லில், வலது கையில் தயிர் மத்தும், இடது கையில் வெண்ணெயும் வைத்த நிலையில் ஸ்ரீபாலகிருஷ்ணன் விக்கிரகத்தை உருவாக்கினார்.

அதை ஆசையோடு வாங்கிய ருக்மிணி, அதன் அழகில் மெய்ம்மறந்து போனாள். அந்த விக்கிரகத்தை தன்னுடனேயே வைத்திருந்து பூஜித்து வந்தாள். ருக்மிணிக்கு பின் அர்ஜுனன் அந்த விக்கிரகத்தை பூஜித்தான் என்பது ஐதீகம். இப்போது... நாம் உடுப்பியில் அவரை தரிசித்து மகிழ்கிறோம்.

புண்ணியம் சேர்க்கும் தீர்த்தம்

டுப்பி கிருஷ்ணர் கோயிலில் உள்ள மத்வ புஷ்கரணி அதிசயம் நிறைந்த தீர்த்தக்குளமாக திகழ்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை கங்கை தீர்த்தம் இதில் கலப்பதாக ஐதீகம். இந்த புஷ்கரணியில் இருந்து தீர்த்தம் எடுத்துதான் ஸ்ரீகிருஷ்ணர் விக்கிரகத்துக்கு தினமும் அபிஷேகம் செய்கிறார்கள்.

இந்த தீர்த்தத்துக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அதாவது, மத்வ தீர்த்தத்தின் பெயரைச் சொன்னாலே புண்ணியம் வந்து சேரும் என்பதுதான் அது!

தொகுப்பு : எஸ்.எம்.ஆனந்த், சென்னை-100

மாயக்கண்ணன் தூங்குகிறான்... தாலேலோ!

வாசகர் தகவல்கள்

துவாரகையில் கோயில்கொண்டிருக்கும் கண்ணனுக்கு துவாரகாதீசன் என்று திருப்பெயர். ஜகத் மந்திர் என அழைக்கப்படும் இந்த ஆலயத்தின் பிரதான வாசலுக்கு, சுவர்க்க துவாரம் என்று பெயர். எந்த நேரமும் திறந்திருக்கும் இந்த வாசலைத் தாண்டிச் சென்றால், மோட்ச துவாரம் எனும் வாயில். அதையும் கடந்து சென்றால் ஸ்ரீகண்ணனின் தரிசனம் கிடைக்கும். இந்த இரண்டு வாயில்களுக்கும் இடையே தேவகி, பலராமன், ராதை, சத்யபாமா, லட்சுமி, சரஸ்வதி, காயத்ரி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. ருக்மிணிதேவிக்குத் தனிக்கோயில் உள்ளது.

உத்தரப்பிரதேசம்- மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனத்தில், ஸ்ரீகிருஷ்ண பக்தர்கள் தரிசிக்கவேண்டிய இடம் வம்சீவட். கண்ணன் தனது புல்லாங்குழல் இசையால் கோபியரைக் கவர்ந்த இடம் இது. 'வம்சீ’ என்றால் புல்லாங்குழல்; 'வட்’ என்றால் ஆலமரம் என்று பொருள். இங்கு (பிருந்தாவனம்) அருள்பாலிக்கும் மூலவரின் திருநாமம் வம்சீவட விஹாரி.

கண்ணன் பல வடிவங்கள் எடுத்து, கோபியர் ஒவ்வொருவருடனும் லீலை புரிவதைச் சித்திரிக்கும் ஓவியங்களையும் இந்தக் கோயிலில் தரிசிக்கலாம். மேலும், நான்கு புறமும் வரிசைப்படி ஸ்ரீராமானுஜர், மத்வர், விஷ்ணு ஸ்வாமி ஆகியோரின் விக்கிரகங்களையும் சேவிக்க முடியும்.

நாகர்கோவிலுக்கு அருகே உள்ள ஊர் அழகியபாண்டியபுரம். இங்குள்ள அருள்மிகு அழகிய நம்பிகோயிலில் அருளும் குழந்தைக் கண்ணன் தூங்கிக்கொண்டிருப்பதாக ஐதீகம். அவரது தூக்கம் கலையாமல் இருக்கும் பொருட்டு நாகஸ்வரம், தவில் போன்ற வாத்தியங்கள் இங்கே இசைக்கப்படுவது இல்லையாம். பூஜையின்போது புல்லாங்குழல் இசை மட்டுமே ஒலிக்கப்படுகிறது.

மதுராவில் தேவகி- வசுதேவருக்கு 8-வது மகனாக ஸ்ரீகிருஷ்ணன் அவதரித்த இடம் சிறைச்சாலை. தற்போது அந்த இடத்துக்கு மேல் ஸ்ரீகத்ரகேஷப் தேவ் எனும் கிருஷ்ணர் கோயில் எழுப்பப்பட்டுள்ளது.

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

வாசகர் தகவல்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism