Published:Updated:

முருகா... மாயோன் மருகா!

யாமிருக்க பயமேன்!

முருகா... மாயோன் மருகா!

யாமிருக்க பயமேன்!

Published:Updated:
முருகா... மாயோன் மருகா!
##~##
'அ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ப்பாவோட வீட்டுக்குப் போயிட்டு வரேன்னு சொல்லிட்டுதான் ஒவ்வொரு முறையும் இந்தக் கோயிலுக்கு வந்துட்டு இருக்கேன். நாம நினைக்கிற ஒவ்வொரு வேண்டுதலையும் தள்ளிப்போடாம உடனே நிறைவேற்றி வைக்கிறதுதான் இவரோட ஸ்பெஷல்!'' என்று, தனது அனுபவத்தை ஆனந்தமும் பூரிப்புமாக பக்தை கற்பகம் சொல்வதில் இருந்தே, நங்கநல்லூரில் கோயில் கொண்டிருக்கும் திருமால் மருகனின் சாந்நித்தியத்தை உணரமுடிகிறது.

கற்பகத்துக்கு மட்டுமல்ல, இந்தப் பகுதியில் வசிக்கும் பெரும்பாலான பக்தர்களின் கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறார் திருமால் மருகன்.  

சென்னை, பழவந்தாங்கல் ரயில் நிலையத்துக்குத் தெற்கே சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருமால் மருகனின் ஆலயம். மருகன் என்றால் மருமகன் என்று பொருள். பாற்கடல் வாசனாம் திருமாலின் சகோதரி பார்வதிதேவி. எனில், பார்வதியின் மைந்தன் முருகப் பெருமான் திருமாலுக்கு மருமகன்தானே?! ஆகவேதான் இவருக்குத் 'திருமால் மருகன்’ என்று திருப்பெயர்.

திருத்தணி மிதியா பாதமும், திருப்பதி வணங்கா முடியும் 'பாழ்’ என்பார்கள் ஆன்மிக ஆன்றோர். அந்த இரண்டு தலங்களிலும் உறையும் தெய்வங்களை ஒருங்கே தரிசிக்கும் வாய்ப்பைத் தருகிறது இந்தத் திருத்தலம். இங்கே மாலுக்கும் மருகனுக்கும் இடையே கொலுவீற்றிருக்கும் அமிர்தகணேச நாயகனாம் ஆனைமுகனும் கொள்ளை அழகு!

முருகா... மாயோன் மருகா!

திருமாலுக்கு மார்கழி முப்பது நாளும் விசேஷம்! வைகுண்ட ஏகாதசியின்போது செய்யப்படும் புஷ்பப் பந்தல் அலங்காரத்தைத் தரிசிக்கப் பெருங்கூட்டம் கூடுமாம். இந்தக் கோயிலின் மற்றொரு சிறப்பம்சம் ஸ்ரீகருடபகவான் தரிசனம். இவரைப் பிரார்த்தித்து அர்ச்சனைகள் செய்து வழிபட, திருமணத் தடை நீங்கும்; குழந்தை இல்லாத தம்பதிக்கு பிள்ளைச்செல்வம் வாய்க்கும் என்கிறார்கள். ஸ்ரீஐயப்பன், ஸ்ரீராமர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி மற்றும் நவக்கிரகங்களையும் இங்கே தரிசிக்கலாம். இங்கே குடியிருக்கும் துர்கையம்மனும் வரப்ரசாதியானவள். இந்தத் தேவிக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் சந்தனக்காப்பு; ஆடிப்பூரத்தன்று வளையல் சாத்துதல் சிறப்பாக நடைபெறுகிறது.

முருகா... மாயோன் மருகா!

திருமால்மருகனாம் முருகப்பெருமானுக்கு செவ்வரளி சார்த்தி வழிபடுவது விசேஷம். அத்துடன், தேன் கலந்த தினைமாவும், ரவா கேசரியும் சமர்ப்பித்து, நெய் விளக்கு ஏற்றி வைத்து இவரை வழிபட, நோய்நொடிகள் குணமாகும்; சகல பிரச்னைகளும் தீரும் என்கின்றனர் பக்தர்கள்.

ஆடி கிருத்திகையில் காவடி உத்ஸவம் கோலாகலமாக நடைபெறுகிறது. வெளிநாட்டில் வசிக்கும் பக்தர்களும் வேண்டுதல் நிறைவேறியதும் ஆடி கிருத்திகைக்கு இங்கு வந்து, அழகன் முருகனுக்குக் காவடி எடுத்துப் பிரார்த்தனை செலுத்துகிறார்கள். தவிர, அலகு குத்திக்கொண்டும், பாற்குடம் எடுத்து வந்தும் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள் பக்தர்கள். தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் ஆகிய திருநாட்களும் இங்கே வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

இந்த வருடம் ஆடி மாதம் 28-ஆம் தேதி (ஆகஸ்ட்-12, ஞாயிற்றுக்கிழமை) காவடி உத்ஸவம். அன்று நாமும் நங்கநல்லூர் நாயகனை வணங்கி வரம்பெற்று வருவோம்.

       - க.பிரபாகரன்
படங்கள்: ரா.மூகாம்பிகை  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism