Published:Updated:

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

திருப்பட்டூர் அற்புதங்கள்!

Published:Updated:
திருப்பட்டூர் அற்புதங்கள்!
திருப்பட்டூர் அற்புதங்கள்!

ற்புதங்கள் கொட்டிக் கிடக்கிற தலம்; ஆச்சரியங்களும் பரவசங்களும் நிறைந்த பூமி; அமானுஷ்யங்களுக்குக் குறைவில்லாத இடம் என திருப்பட்டூர் திருத்தலம் குறித்து முதல் அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தத் திருத்தலத்தின் மகிமையை லட்சக்கணக்கான வாசகர்களுக்கும் சென்று சேர்க்கும் வகையில் 'இதோ... ஒரு இனிய மினி தொடர்’ என்று அதில் குறிப்பிட்டிருந்தோம். ஆனால், மினி தொடர் என்பது மெகா தொடராக, 37 அத்தியாயங்களாக மலர்ந்ததும் திருப்பட்டூர் அற்புதங்களில் ஒன்று என்பதாகவே உள்ளுணர்வு சொல்கிறது.

##~##
இந்த ஒன்றரை வருட காலங்களில்... இந்தத் தொடரைப் படித்துவிட்டு, அந்தத் தலத்துக்குச் சென்று தரிசித்தவர்கள், தங்களின் அனுபவங்களைச் சொல்லச் சொல்லப் பூரித்துப் போகிறது மனம்; நெகிழ்ந்து, நெக்குருகி, நிறைந்து போகிறது!

''என் கணவருக்கு 70-வது பிறந்தநாள் வந்தப்ப, குடும்ப சகிதமா திருக்கடையூர் போயிருந்தோம். திரும்பும்போது, திருப்பட்டூருக்கு வந்து, அய்யனாரையும் ஸ்ரீகாசிவிஸ்வநாதரையும் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரையும் தரிசிச்சோம். நிறையப் பேர் தங்களோட ஜாதகங்களையும் வியாபாரக் கணக்கு நோட்டுகளையும் ஸ்ரீபிரம்மாவின் திருப் பாதத்துல வைச்சு, வேண்டிக்கிட்டு எடுத்துட்டுப் போனாங்க. 'எங்க எல்லாருக்கும் ஒரு குறையும் வராம நீதாம்பா காப்பாத்தணும்!’னு நாங்களும் வேண்டிக்கிட்டு வந்தோம். அதுக்கு அடுத்ததா, என் கொழுந்தனாருக்கு காசிக்குப் போற வாய்ப்பு கிடைச்சுது. போயிட்டு வந்ததும், ராமேஸ்வரத்துக்குப் போயிட்டு வந்தார். அங்கே திடீர்னு வி.ஐ.பி. தரிசனம் கிடைச்சதை இப்பவும் பெருமையா சொல்லிக்கிட்டே இருக்கார்'' என்று திருப்பூர் எஸ்.பெரியபாளையம் வாசகி இந்திராணி பாலசுப்ரமணியம் உணர்வு பொங்கத் தெரிவித்தார்.

''என் அக்காவோட பேரன், மூணு மாசக் குழந்தை. எப்பப் பார்த்தாலும் காய்ச்சல், வாந்தி பேதின்னு ரொம்பவே கஷ்டப்பட்டுட்டு இருந்தான். அவனுக்காக நாங்க அம்பாள் சந்நிதில 36 நெய்தீபமேற்றி வேண்டிக் கிட்டோம். அடுத்த வாரமே குழந்தை பரிபூரணமா குணமாயிட்டான். திருப்பட்டூருக்கு இனி வருஷத்துக்கு நான்கைந்து முறையாவது வந்து தரிசனம் பண்ணணும்னு அப்பவே முடிவு பண்ணிட்டோம்'' என்று நெகிழ்ச்சிக் கண்ணீருடன் தெரிவிக்கிறார் இந்திராணி.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

இதுபோன்ற பிரார்த்தனைகளும், அந்தப் பிரார்த்தனை யின்படி அவர்கள் வாழ்வில் நடந்தேறிய நல்ல நல்ல மாற்றங்களும் திருப்பட்டூர் திருத்தலம் நோக்கிய பயண ஆர்வத்தை பக்தர்களுக்குள்ளே தூண்டி வருகிறது. அந்தத் தலத்தின் சூட்சும சக்தி இப்படியாக எங்கோ இருப்பவர்களையும் தட்டி உசுப்பிவிடும். இந்தத் தலத்துக்கு வரச் செய்து, அவர்களின் தலையெழுத்தையே மாற்றி அருளும்.

''திருப்பட்டூர் அற்புதங்கள் தொடர்ல வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர், ஸ்ரீகாசி விஸ்வநாதர், ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர், ஸ்ரீபிரம்மான்னு விரிவா சொல்லிட்டே வந்தப்பக்கூட வாய்ப்பு கிடைக்கும் போது ஒருமுறை போய் தரிசனம் பண்ணிட்டு வரலாம்னுதான் நினைச்சுக்கிட்டிருந்தோம். ஆனா, இறைச் சக்தியானது முருகப் பெருமான் ரூபத்துல, எங்களை உடனே அங்கே போகத் தூண்டுச் சுங்கறது இப்ப வரைக்கும் ஆச்சரியமா இருக்கு'' என்று பரவசம் மாறாமல் சொல்கிறார் வாசகி உமா.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

மதுரை திருமங்கலத்தில் வசிக்கும் உமாவும், அவர் கணவர் பாக்கியசாலியும் அதே பரவசத்துடன் நம்மிடம் பேசினார்கள்.

''சாதாரண நடுத்தரக் குடும்பம்தான் எங்களது. எல்லாரையும்போல எங்க பொண்ணைக் கஷ்டப்பட்டுக் கட்டிக்கொடுத்தோம். பையனை பி.ஈ. படிக்க வைச்சோம். அவன் இப்ப சென்னைல வேலை பாக்கறான். இன்னும் கொஞ்ச வருஷத்துல வீடு - வாசல்னு

செட்டிலாயிடணும்னு நினைச்சுட்டிருக்கும்போதுதான், எங்களுக் குச் சேரவேண்டிய எங்க அப்பாவோட சொத்து ஒண்ணு திண்டுக்கல்ல இருக்குன்னு விவரம் தெரிய வந்துது. ஆனா, அதுக்கான ஆதாரமோ பத்திரமோ எதுவும் எங்ககிட்ட இல்லை. அது மிகப் பெரிய பலா மரத்தோப்பு. கிட்டத்தட்ட 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தத் தோப்பு, எட்டு கோடி ரூபா மதிப்பு போகும்னு கேள்விப்பட்டப்ப... 'இது நமக்கு கிடைக்குமா’ங்கற தவிப்பும் பயமும் அதிகமாயிடுச்சு. பல வருஷங்களா முட்டி மோதிப்

பார்த்தாச்சு; கோயில் குளம்னு கும்பிட்டும் வந்தாச்சு. ஆனா, அது எங்க சொத்துதான்கிறதுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கலை.

இந்தத் தருணத்துலதான், 'திருப்பட்டூர் அற்புதங்கள்’ தொடர்ல ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயில்ல இருக்கிற ஸ்ரீமுருகக்கடவுள் பத்தி வந்திருந்தது. 'குரு பிரம்மாவும் குரு விஷ்ணுவும் குரு பரமேஸ்வரனும் தரிசனம் தந்து அருளும் இந்தத் தலத்தில், அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையாவும், அதாவது பிரணவ மந்திரத்தை எடுத்துரைத்த ஞானகுருவான கந்தக் கடவுளும் அவர்தம் அருட்கடாட்சத்தையும் சாந்நித்தியத்தையும் முழுமையாகத் தந்தருள்கிறார் இங்கே!’ன்னு அதுல (29.11.11. இதழ்) போட்டிருந்துது.

'கந்தக் கடவுள், ஞானகுரு. பூமிகாரகன். செவ்வாய்க்கு அதி தேவதையும் இவரே! எனவே, இங்கு செவ்வாய்க்கிழமையில் வந்து, ஸ்ரீவள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணியருக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சார்த்தி வணங்கி, வெண் பொங்கல் அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால், மனை தொடர்பான சிக்கல்கள் விரைவில் விலகிவிடும். நிலம் தொடர்பான வழக்கு இருப்பின், சீக்கிரமே சாதகமான தீர்ப்பு வரும். வீடு வாங்கும் யோகம் கிட்டும்’னு இருந்த வாசகங்கள் ஏதோ எனக்காகவே எழுதின வாசகங்களா தோணிச்சு. அதைப் படிக்கப் படிக்க, மனசுல ஒரு நம்பிக்கையும் தெம்பும் கூடினது நிஜம்.

அதே இதழ்லேயே, நம்மளோட நட்சத்திர நாள்ல, அங்கே தரிசனம் பண்றது கூடுதல் விசேஷம்னு எழுதியிருந்தாங்க. உடனே காலண்டரை எடுத்துப் பார்த்தேன். டிசம்பர் 6-ஆம் தேதி என்னோட ரேவதி நட்சத்திரம். தவிர, அன்னிக்கு முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்க்கிழமையும்கூட! கேட்கணுமா... அந்த நாள்ல திருப்பட்டூர் போறதுன்னு முடிவாகி, கணவரோட கிளம்பினேன்.

அபிஷேகம் பண்ணி, வஸ்திரங்கள் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செஞ்சு, எல்லாருக்கும் விநியோகிச்சு, அப்படியே ஸ்ரீபிரம்மாவையும் தரிசனம் பண்ணிட்டுத் திரும்பினோம். அதையடுத்து டிசம்பர் கடைசில... என்ன ஆச்சரியம்..! சொல்லும்

போதே சிலிர்க்கிறது எனக்கு. அந்தப் பலாமரத் தோப்பு என் அப்பாவின் பேர்லதான் இருக்குங்கறதுக்கான ஒரு முக்கிய ஆதாரம் எங்களுக்குக் கிடைச்சுது!

அதையடுத்து நடந்ததெல்லாம் நல்லவிதமாவே நடந்தது. அப்படி நல்லது நடக்கும்போதெல்லாம், ஒரு நடை திருப்பட்டூருக்குக் காலைல போயிட்டு மத்தியானம் வரைக்கும் இருந்து தரிசனம் பண்ணிட்டு வர்றதை வழக்கமா வைச்சுக்கிட்டோம். ஏதோ ஒரு சுமாரான வீட்ல காலம் தள்ளிட்டு இருக்கிற எங்களுக்கு அந்த 20 ஏக்கர் தோப்பு சொந்தம்னு தீர்ப்பு வந்தாச்சு இப்ப! எங்களோட இந்தப் பிறப்பையே, வாழ்க்கையையே, தலையெழுத்தையே மாத்தி அமைச்சது... சத்தியமா சொல்றேன், திருப்பட்டூர் தலம்தான்!'' என்று கண்களில் கரகரவென வழிந்த கண்ணீரைப் பொருட்படுத்தாமல் சொல்கிறார் உமா.

திருப்பட்டூர் அற்புதங்கள்!

''திருப்பட்டுர் அற்புதங்கள் தொடர் படிச்சுட்டு, உமாதான் எங்கிட்ட புலம்புவாங்க. அந்தக் கோயிலுக்குப் போகணும்கறதும் அவங்க எடுத்த முடிவுதான்! போயிட்டு வந்த அடுத்தடுத்த நாட்களும் தடதடன்னு, ஏதோ சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது மாதிரி நல்லதாவே நடந்துச்சு. எந்த அர்த்தத்துல எனக்கு வீட்டுல அப்படிப் பேரு வைச்சாங்களோ... உண்மையிலேயே நான் பாக்கியசாலிதான்!'' என நெகிழ்ந்து உருகுகிறார் உமாவின் கணவர் பாக்கியசாலி.

அற்புதங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக நடந்தேறும். ஒவ்வொருவரின் மூலமாகக் காட்டியருளப் படும்.  மந்த்ராலய மகான் ஸ்ரீராகவேந்திர சுவாமிகளை, தாத்தா தாத்தா என்று சொல்லி உருகுகிற, அந்த அளவுக்கு அவர் மீது பக்தி வைத்திருக்கிற சென்னையைச் சேர்ந்த பத்மா எனும் பெண்மணிக்கு அந்த மகான்தானே இந்தத் திருத்தலத்தைக் காட்டி அருளினார்! இங்கே... உமா எனும் பெண்மணியை அழைத்து வந்து, தலையெழுத்தையே மாற்றி அருளுவதற்கு, முருகப்பெருமான் சூட்சும ரூபமாக ஏதோ செய்திருக்கிறார்.

சென்னை, மயிலாப்பூர் யோகி ராம்சுரத்குமார் சத்சங்கத்தில் இருந்த அந்தப் பக்தருக்கும் அவ்விதமே நிகழ்ந்தது.

''ஒரு வியாழக்கிழமை நாளில், திருவண்ணாமலை மகான் சத்குரு யோகி ராம்சுரத்குமாருக்கு வீட்டில் பூஜை நடந்தது. சத்சங்க உறுப்பினர்கள் பலரும் வந்து அந்த மகானைப் பரவசத்துடன் பாடிக்கொண்டிருந்தனர். பூஜை முடிந்ததும், அங்கே இருந்த ஒரு தம்பதியை அழைத்து, 'இந்த முறை கோயில்களுக்குச் செல்லும்போது, அப்படியே திருப்பட்டூருக்கும் சென்று, ஸ்ரீபிரம்மாவை தரிசித்து வாருங்கள்’ என்று சொன்னேன். அப்படியே செய்தார்கள். அவர்களுக்கு நல்லதே நடந்தது. அவர்கள் குறை தீர்ந்தது!''

என்கிறார் எழுத்தாளர் பால குமாரன்.

அவர்கள் டாக்டர் மகேஷ்- பூர்ணிமா தம்பதி. திருமணமாகி இரண்டு மூன்று வருடங்களாகியும் குழந்தை பாக்கியமே இல்லாதிருந்த அவர்கள் திருப்பட்டூர் போய் வந்த அடுத்த இருபதாவது நாள், பூர்ணிமா கருத்தரித்தார். ''குரு பிரம்மாவின் கருணை, பெருங்கருணை!'' எனச் சொல்லிப் பூரிக்கிறார் டாக்டர் மகேஷ்.

எங்கே இருக்கிறது?

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர். சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து டவுன் பஸ் வசதி உண்டு; ஆனாலும் குறைவுதான்!

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூர் எனும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பட்டூருக்கு, ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோவிலும் செல்லலாம்.

அவர்கள் மட்டுமா? அவர்களுடன் தனியார் கம்பெனியின் துணை மேலாளரும், தென்னக ரயில்வேயில் பணிபுரியும் அவரின் மனைவியும் திருப்பட்டூர் சென்றனர்; தரிசித்தனர்; அங்கே அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டனர். 40 வயதை நெருங்கிக்கொண்டு இருக்கும் அந்தப் பெண்மணியும் இப்போது சூல் கொண்டிருக்கிறார். மிக ஆரோக்கியமாகத் தன்னுள் கரு வளர்ந்து வருவதைச் சிலிர்ப்பு மாறாமல் விவரிக்கிறார்.

இந்த உலகின் மிக உயர்ந்த செல்வம் பிள்ளைப் பேறுதான், இல்லையா? உத்தியோகம், திருமணம், குழந்தைச் செல்வம் என அமையாமல் தவித்து மருகுபவர்கள் எத்தனை பேர்? நல்லவிதமாக அமையவில்லையே எனக் குறைப்பட்டுக் கொள்பவர்களும் உண்டுதானே?

திருப்பிடவூர், திருப்படையூர், திருப்பட்டூர் என்றெல் லாம் சொல்லப்படுகிற இந்தத் தலத்துக்கு வந்து, சிரம் தாழ்த்தி, கரம் குவித்து, மனம் ஒருமித்து வேண்டுவோர் அனைவரின் குறைகளையும் போக்கி, அவர்களை மனமகிழ்ச்சியோடு வாழ வைத்தருளும் அற்புதம் இங்கே இடையறாது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.

'திருப்பட்டூர் அற்புதங்கள்’ எனும் தொடர் இதோ, இந்த இடத்தில் நிறைவுறுகிறது. ஆனால், அந்தத் தலத்தின் மகிமைகளும் அற்புதங்களும், அங்கே வருகிற அன்பர்களுக்குள் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டே இருக்கும்!

குருர் ப்ரம்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மகேஸ்வர:
குருர் சாக்ஷ£த் பரப்ரம்மா தஸ்மை ஸ்ரீகுரவே நம:

(நிறைவுற்றது)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism