
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி, குன்றக் குடி, தேவகோட்டை, கோட்டையூர் என பல ஊர்களில் இருந்தும் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டனர் வாசகிகள். ''என் பேத்திக்கு என்னை விட்டா யாரும் இல்லீங்க. நான் நல்லா இருக்கும்போதே அவளுக்கு நல்லவிதமா கல்யாணத்தை பண்ணிப் பார்த்துடணுங்கற ஒரே வேண்டுதல்தான் எனக்கு!'' என நா தழுதழுக்கத் தெரிவித்தார் சாந்தி எனும் வாசகி.
''இதோ... இந்த சிவகங்கைல ரொம்ப வருஷமா இருக்கோம். ஆனா எங்களுக்குன்னு சொந்த வீடு இன்னிவரைக்கும் இல்லீங்க. எங்களுக்கே எங்களுக்குன்னு ஒரு வீடு வாங்கணும்.
பசங்களுக்கு கண்ணுக்கு நிறைவா, கல்யாணம் செஞ்சு பாத்துடணும். இதைவிட வேற பிரார்த்தனை இல்லீங்க'' என்று வாசகி அன்பு தெரிவித்தார். ''சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஆகவேண்டும் என்பதே என் வேண்டுதல்'' என்று 9-ஆம் வகுப்பு மாணவி செல்வ பாரதியும், வெளிநாட்டில் வேலை செய்யும் மகன் நோய் நொடியின்றி சௌக்கியமாக இருக்கவேண்டும் என்று வாசகி மணிமேகலையும் வேண்டிக் கொண்டனர். அனைவரின் வேண்டுதலும் இனிதே நிறைவேற... ஸ்ரீசனீஸ்வர பகவான் நிச்சயம் அருள்பாலிப்பார்.
- சு.ராம்குமார்
படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்