Published:Updated:

ஸ்ரீபாலாம்பிகை சந்நிதியில்... தொட்டில் பிரார்த்தனை!

பலன்... பரிகாரம்... புண்ணிய தரிசனம்!

ஸ்ரீபாலாம்பிகை சந்நிதியில்... தொட்டில் பிரார்த்தனை!

பலன்... பரிகாரம்... புண்ணிய தரிசனம்!

Published:Updated:
ஸ்ரீபாலாம்பிகை சந்நிதியில்... தொட்டில் பிரார்த்தனை!
##~##
தி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து லால்குடி செல்லும் வழியில் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள மாந்துறையின் மையப்பகுதியில் இருந்தபடி, அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறார் ஸ்ரீஆம்ரவனேஸ்வரர்.

திருஞானசம்பந்தர் பாடிப் பரவிய தலம்; அருணகிரிநாதர் வந்து திருப்புகழ் பாடிய ஆலயம். ஆம்ரம் என்றால் மாமரம் என்று அர்த்தம். மாமரங்கள் சூழ்ந்த பகுதியில் கோயில் கொண்டிருப்பதால், சிவனாருக்கு ஆம்ரவனேஸ்வரர் எனும் திருநாமம் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு.  

அழகிய கோபுரத்துடன் கிழக்குப் பார்த்தபடி திகழ்கிறது ஆலயம். உள்ளே நுழைந்ததும் நந்திதேவர்; அருகில் பலிபீடம்! வேறு எங்கும் காண்பதற்கு அரிதானதாக இங்கு இரண்டு நந்திகள் அமைந்திருப்பது சிறப்பு. முற்காலச் சோழர்கள் காலத்தின் கலையம்சத்துடன் திகழ்கிறது ஆலயம்.  

அம்பாளின் திருநாமம்- ஸ்ரீபாலாம்பிகை. கிழக்கு நோக்கியபடி சிவனாரும் தெற்கு நோக்கிய நிலையில் அம்பாளும் அமைந்திருக்கும் இந்தத் திருத்தலம், பிரம்மஹத்தி தோஷம் முதலான சகல தோஷங்களையும் நீக்கி அருளும் தலம் எனப்போற்றுகிறது ஸ்தல புராணம்.

சிவனாரின் அடிமுடியைக் கண்டதாகப் பொய் சொன்னதால், ஸ்ரீபிரம்மனைச் சபித்தார் சிவபெருமான். இந்தத் தோஷத்தில் இருந்து விடுபட, மாமரங்கள் சூழ்ந்த வனத்தில் தவமிருந்தார் ஸ்ரீபிரம்மா. லிங்கத் திருமேனியை அபிஷேகிக்கவும் நீராடவும் ஸ்ரீகாயத்ரிதேவியை வணங்கித் துதித்தார். அவள் அங்கே தண்ணீர் பெருகச் செய்தாள். அந்தத் தீர்த்தத்தைக் கொண்டு நீராடிவிட்டு, லிங்கத் திருமேனியை அபிஷேகித்து பூஜை செய்து வந்தார் பிரம்மா. இதில் மகிழ்ந்த சிவனார், அங்கே அம்பிகையுடன் காட்சி தந்து, சாப விமோசனம் தந்தருளினார்.

ஸ்ரீபாலாம்பிகை சந்நிதியில்... தொட்டில் பிரார்த்தனை!

கோயிலுக்கு அருகில் உள்ள தீர்த்தக் குளத்தின் தண்ணீரை எடுத்துத் தலையில் தெளித்துக்கொண்டு, சிவனாருக்கு வில்வார்ச்சனை செய்து வழிபட்டால், சகல தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறலாம் என்பது ஐதீகம்!

மார்க்கண்டேயன் மரண பயம் இன்றி வாழ, தவம் செய்து வரம் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று என்பர். எனவே, இந்தத் தலத்துக்கு வந்து வணங்கினால், மரண பயம் நீங்கும்; நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம் என்பது நம்பிக்கை! சூரியன் வணங்கித் தொழுததும், இந்திரனின் சாபம் நீங்கியதும் இந்தத் திருத்தலத்தில்தான்.

ஸ்ரீபாலாம்பிகை சந்நிதியில்... தொட்டில் பிரார்த்தனை!

தவிர, மூல நட்சத்திரக்காரர்கள் இங்கு வந்து ஸ்ரீஆம்ரவனேஸ் வரரையும் ஸ்ரீபாலாம்பிகையையும் தரிசித்துப் பிரார்த்தித்தால், திருமண பாக்கியம் கைகூடும்; வாழ்வில் ஏற்றமும் ஜெயமும் நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள்.

ஸ்ரீபாலாம்பிகைக்குப் பாலபிஷேகம் செய்து வேண்டி னால், பிள்ளை பாக்கியம் கிடைக்கும்; குழந்தைகள் நோயில் இருந்து விடுபட்டு ஆரோக்கிய மாக வாழ்வார்கள் எனப் போற்றுகின்றனர் பெண்கள்.

''எங்களுக்குக் குலதெய்வம், இஷ்டதெய்வம் எல்லாமே ஸ்ரீஆம்ரவனேஸ்வரரும் ஸ்ரீபாலாம்பிகை யும்தான். வருடத்துக்கு ஒருமுறையாவது இங்கே வந்து, ஆற அமர தரிசனம் பண்ணிட்டுப் போறது எங்க வழக்கம்!'' என்று தெரிவித்த ஜெயகோபாலன் மும்பையில் இருந்து வந்திருந்தார்.

கோயிலுக்கு வெளியே சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீமதுரைவீரன் சுவாமி மட்டும் என்னவாம்? இங்கேயுள்ள ஆலமரத்தில் தொட்டில் கட்டி வேண்டினால், குழந்தை பாக்கியம் கிடைக்கும்; குழந்தைகளை காத்துக் கருப்பு அண்டாது என்பது ஐதீகம்! இங்கு வழங்கப்படும் ஆலமரத்தடி மண் பிரசாதம் மகிமை மிக்கது எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

- ச.மஞ்சுளா
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism