Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

Published:Updated:
ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ந்த இடத்தில் கோயில் கொண்டிருந்தாலும் சிவப்பரம்பொருளின் கீர்த்தி அங்கே நிறைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனாலும், சிவத்திருமேனிக்கு உகந்த வில்வமரங்கள் அடர்ந்த பகுதியில் அவர் குடியிருப்பது இன்னும் கூடுதல் விசேஷங்களைக் கொண்டது!

வில்வமரங்கள் சூழ்ந்த வனப்பகுதியை கூவாளம் என்றும் சொல்வார்கள். வில்வாரண்ய க்ஷேத்திரம் எனப் போற்றப்படும் அந்தத் திருத்தலத்துக்கு ஏகப்பட்ட விசேஷங்கள்! வில்வ மரங்கள் சூழ்ந்த அந்தப் பகுதியில் சிவனாருக்குக் கோயில் கட்டப்பட... அவருக்கு ஸ்ரீவில்வவனநாதர் என்றே திருநாமம் சூட்டினர், மன்னர் பெருமக்கள்.

ராஜேந்திர சோழ மன்னன் காலத்தில் ஏராளமான திருப்பணிகள் இங்கே செய்யப் பட்டுள்ளன. ராஜகேசரி வர்மன் காலத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கோயிலுக்கு நிலங்களைத் தானமாக வழங்கியதைத் தெரிவிக்கும் கல்வெட்டுகளை இங்கு காண முடிகிறது.

ஞானப்பழத்துக்காக அண்ணனும் தம்பியும் போட்டி போட... மயிலில் ஏறி உலகைச் சுற்றிவர தம்பி கிளம்ப, 'அம்மையும் அப்பனுமே உலகம். உங்களைச் சுற்றினால், உலகத்தையே சுற்றியதாக அர்த்தம்!’ என்று அண்ணன் விநாயகப்பெருமான் அவ்விதமே சுற்றி வலம் வந்து, கனியைப் பெற்றுக்கொண்டார் அல்லவா? அந்த விநாயகப் பெருமான் வீற்றிருக்கும் திருத்தலம் இதுதான்! இப்படி அம்மையையும் அப்பனையும் வலம் வந்து வரம் பெற்றதால், அந்த விநாயகர் குடிகொண்டிருக்கும் திருத்தலம் 'திருவலம்’ என்றே அழைக்கப்படுவதாகச் சொல்வார்கள் அன்பர்கள்.

ஆலயம் தேடுவோம்!

வேலூர் மாவட்டத்தில், வேலூரில் இருந்து சென்னை வரும் வழியில் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது திருவலம். சென்னை- காட்பாடி ரயில் மார்க்கத்தில், திருவலம் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவலம் ஸ்ரீவில்வநாதர் திருக்கோயில். பேருந்துத் தடத்தில், ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் இருந்து திருவலம் செல்வதற்கு டவுன் பஸ்கள் நிறையவே உள்ளன.

தீக்காலி எனும் அவுணன் (அசுரன்), இங்கே வழிபட்டு சிவனாரின் பேரருளைப் பெற்றான். தீக்காலி வலம் வந்து வழிபட்டதால் தீக்காலி வலம் என அழைக்கப்பட்டு, பிறகு அதுவே திருவலம் என மருவியதாகவும் சொல்வர்.

திருவல்லம், திருவலம் என்றெல்லாம் அழைக்கப்படுகிற இந்தத் திருத்தலம், தொண்டை மண்டல திருத்தலங்களில் முக்கியமானதொரு தலமாகப் போற்றப்படுகிறது. இங்கே அம்பாளின் திருநாமம்- ஸ்ரீதனுமத்யாம்பாள். அழகும் கருணையும் கொண்டவள் இவள்.

திருவலம் ஸ்ரீமௌனகுரு சுவாமிகள், இந்தத் தலத்தில் வழிபட்டு சிவனாரின் பரிபூரண அருளைப் பெற்றுள்ளார். அத்துடன் இந்த ஆலயத்துக்கு ஏராளமான திருப்பணிகளையும் செய்துள்ளார்.

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!

அம்மையப்பனை வணங்கி, கனியைப் பெற்றுக்கொண்ட விநாயகர் பிரமாண்டத் திருமேனியில் காட்சி தருகிறார். இவரின் திருநாமம்- ஸ்ரீவரஸித்தி விநாயகர். இவரை வணங்கிவிட்டு எந்தக் காரியத்தைத் தொடங் கினாலும், அது வெற்றியில் முடியும் என்பது ஐதீகம்! அதேபோல், இவரின் தம்பி ஸ்ரீசுப்ரமணியர் கொள்ளை அழகுடன் காட்சி தருகிறார். மிகுந்த சாந்நித்தியத்துடன் திகழும் இவரை அருணகிரிநாதர் வழிபட்டுள்ளார்.

திருஞானசம்பந்தரும், சுந்தரரும் இந்தத் தலத்தையும் இந்தத் தலத்து இறைவனையும் குறிப்பிட்டுப் பாடியுள்ளனர். அந்தப் பாடல் களில் திருவலத்தையும் தீக்காலி எனும் அவுணனையும் குறிப்பிட்டுள்ளனர்.

சேக்கிழார் பெருமான் திருவலத்துக்கு வந்து, தலத்தின் பெருமையில் திளைத்து, விக்கிரகத் திருமேனியின் அழகில் சிலிர்த்து, வியந்து போற்றியிருக்கிறார்.

அதேபோல், பட்டினத்தாரும் இங்கு வந்து சில காலம் தங்கி, சிவனாரையும் ஸ்ரீசுப்ர மணியரையும் வழிபட்டிருக் கிறார் எனத் தெரிவிக்கிறது ஸ்தல புராணம்.

இத்தனைப் பெருமைகள் கொண்ட திருவலத்துக்கு அருகில், சுமார் 5 கி.மீ. தொலைவில் கஞ்சன்கிரி எனும் மலை உள்ளது. மலையேறிச் சென்றால், அங்கே சிவலிங்கத் திருமேனிகள் பலவற்றைத் தரிசிக்கலாம். கஞ்சன் எனும் அரக்கனை நந்தியெம்பெருமான் அழித்து, மக்களையும் இந்திராதி தேவர்களையும் காத்தருளிய அற்புதமான இடமும் இதுவே!

அதனால்தான் திருவலம் கோயிலில் அழகு ததும்ப, பிரமாண்டமாக, விருட்டென்று எழுந்திருக்கிற தோரணையில் காட்சி தருகிறார் நந்தியெம்பெருமான். அற்புதமான சிலா வடிவம். இங்கு வருபவர்கள் நந்தியின் அழகில் சொக்கிப் போவார்கள். அதேபோல், கோயில் தூண் ஒன்றில், கஞ்சன் அரக்கனைத் தன் கொம்பால் குத்தி, நந்தியானது தூக்கி நிற்பது போலான சிற்பத்தையும் இங்கு பார்க்க முடிகிறது.

ஆலயம் தேடுவோம்!

ஞானத்தையும் மோட்சத்தையும் அருளக்கூடிய திருத்தலம், திருவலம். இங்கு வந்து, ஸ்ரீவில்வவனநாதருக்கு உங்களால் முடிந்த அளவு வில்வார்ச்சனை செய்து வழிபட்டால்... குருவருளையும் திருவருளையும் ஒருசேரப் பெறலாம்; ஞானமும் மோட்சமும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்!

இங்கே... வடக்கில் இருந்து தெற்காக ஓடுகிற நீவா நதியும் ரொம்பவே விசேஷம்! தேரோடும் வீதியுடன் தெரிகிற பிரமாண்ட கோபுரமும், அதன் நுழைவாயிலும் கொள்ளை அழகு! உள்ளே நுழைந்ததும், திருச்சுற்று மாளிகையும் விஸ்தாரமான பிராகாரங்களும் நம்மை வியக்க வைக்கின்றன.

அர்த்த மண்டபமும் மகா மண்டபமும் இருக்க... உள்ளே லிங்க வடிவில் ஸ்ரீவில்வவனநாதரைத் தரிசிக்கும்போதே, நம் மொத்த பாவமும் பாரமும் எங்கோ காணாமல் போய்விட்ட உணர்வை நன்றாகவே உணரமுடிகிறது.

கஞ்சன் எனும் அரக்கனின் அங்கம் நந்திதேவரால் குத்தித் தூக்கி வீசப்பட்டபோது, அவனின் லாடம் (மண்டைப் பகுதிகளில் ஒன்றான நெற்றி) விழுந்த இடம், லாடப்பேட்டை என அழைக்கப்பட்டு, பிறகு லாலாப்பேட்டை என மருவியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். அந்த அரக்கன் இறந்துபோகும் தருணத்தில், சிவனாரிடம் கேட்டுக்கொண்டபடி, தை மாதத்தில் லாலாப்பேட்டைக்கு வந்து அனைவருக்கும் தரிசனம் தருவாராம் சிவனார்.

ஆலயம் தேடுவோம்!

இப்படி எத்தனையோ பெருமைகளை ஒருங்கே கொண்டிருக்கும் திருவலம் திருத்தலத்தின் திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஒருகாலத்தில், காசியம்பதிக்கு அஸ்தியைக் கரைப்பதற்காக சிவனடியார் ஒருவர் எடுத்துச் சென்றபோது, இங்கேயுள்ள கௌரி தீர்த்தத்துக்கு அருகில், அஸ்தி அப்படியே நறுமணம் வீசும் மலர்களாக மாறியதாம். எனவே, காசிக்கு நிகரான தலம் என்றும் திருவலத்தைப் போற்றுவர்.

அத்தகைய கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற் கான தருணம் நெருங்கிவிட்டது. இந்தத் திருப்பணியில் நாமும் கலந்துகொண்டால், நம்மால் முடிந்ததைக் கொடுத்து, திருப்பணியாளர்கள் பட்டியலில் இடம் பெற்றால், ஸ்ரீவில்வநாதரின் அருளுக்கு நாமும் பாத்திரமாவோம்.

திருஞானசம்பந்தரும் சுந்தரரும் அருணகிரிநாதரும் பட்டினத்தாரும் தரிசித்துத் திளைத்த இந்த ஆலயத்தின் அம்பிகையும் சிவனாரும் நமக்கும் அருளுவார்கள். குருவருளும் திருவருளும் கிடைக்கப் பெறுவோம்.

குறிப்பாக, ஆலயத் திருப்பணிக்குக் கைகொடுப்பதன் மூலம், திருவலம் ஸ்ரீலஸ்ரீ மௌனகுரு சுவாமிகளின் ஆசீர்வாதத்தையும் பெறலாம். ஆகவே, அள்ளிக் கொடுங்கள் அன்பர்களே!

படங்கள்: ச.வெங்கடேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism