Published:Updated:

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

Published:Updated:
தெரிந்த புராணம்... தெரியாத கதை!
தெரிந்த புராணம்... தெரியாத கதை!
தெரிந்த புராணம்... தெரியாத கதை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ண்மையான பக்தன், பகவானிடமிருந்து வேறுபட்டவன் அல்ல.

நாம சங்கீர்த்தனம் செய்பவர்கள் பெரும்பாலும் ஒரு நாமத்தை சுவையோடு பாடுவார்கள். அது, 'ராதே கிருஷ்ணா’ அல்லது 'ராதே ஸ்யாம்’ என்கிற நாமம். கிருஷ்ண நாமத்தை முந்திக்கொண்டு ஒலிக்கும் இந்த ராதை, ஸ்ரீகிருஷ்ணனுடைய நிழல் என்று சொல்லலாம்.

ராதையும் கிருஷ்ணனும் ஒன்றாய் இணைந்தவர்கள். அவர்களுக்குள் பேதம் கிடையாது. பிரேம பக்தியின் வெளிப்பாடே ராதா கிருஷ்ண தத்துவம். ஓவியங்கள், சிற்பங்கள், கவிதைகள் எல்லாவற்றிலுமே ராதா கிருஷ்ண வடிவம் பிரேம பக்தியை விளக்குவதாகவே சித்திரிக்கப்படுகிறது. இந்து தர்மத்தின் புராண இதிகாசங்கள் எல்லாமே இறைவனோடு, சக்தியின் வடிவத்தை இணைத்தே பெருமைப்படுத்திக் கூறுகின்றன. அந்த வகையில், ஸ்ரீகிருஷ்ணனின் மொத்த சக்தி வடிவம்தான் ராதை. சூரியனும் சூரிய வெளிச்சமும் போல இணைபிரியாதவர்கள்தான் ராதையும் கிருஷ்ணனும்! கிருஷ்ண ப்ரேமை அல்லது கிருஷ்ண பக்தியின் வடிவமே ராதை. சரி... யார் இந்த ராதை?

ராதாகிருஷ்ணனின் பெருமையை ஸ்ரீமத் பாகவதமும், 'கீதகோவிந்தம்’ எனும் ஜெயதேவரின் அஷ்டபதியும் தெளிவாக விளக்குகின்றன. வைணவ புராணங்கள், ஸ்ரீமகாலட்சுமியின் அவதாரமாகத் தோன்றியவள் ராதை என்று குறிப்பிடுகின்றன. கிருஷ்ணனையே தன் பக்தியால் கட்டி வைத்திருந்த ராதை பற்றி பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகையில், 'அவள் பிரேம பக்தியின் ஆதார வடிவம். சக்தியின் பிரதி பிம்பம்’ என்கிறது.

ஸ்ரீமத் பாகவதமும், மகாபாரதமும் ஸ்ரீகிருஷ்ணனின் வாழ்க்கையை 3 பகுதிகளாகப் பிரித்துக் கூறுகின்றன. மதுராவிலும் பிருந்தாவனத் திலும் வாழ்ந்த பாலகிருஷ்ணன், துவாரகை மன்னன் ஸ்ரீகிருஷ்ணன், கீதாசார்யன் கிருஷ்ணன் என்பன இந்த மூன்று பரிமாணங்கள்.

ஸ்ரீகிருஷ்ணர் மதுராவில் கம்ஸனின் சிறையில் பிறந்தார். பிருந்தாவனத்தில் ஆயர்பாடி எனும் கோகுலத்தில் யசோதை மகனாக வளர்ந்தார். கோகுலத்து பாலகர்களுடனும் கோபியர்களுடனும் அன்பும் நட்பும் கொண்டு பால லீலைகள் புரிந்தார். இந்தக் காலகட்டத்தில் கோபியர்களில் ஒருத்தியாக இருந்து, ஸ்ரீகிருஷ்ணனிடம் பக்தி செலுத்தியவள்தான் ராதை. பிருந்தாவனத்துக்கு அருகில் வர்ஷனா அல்லது ராவால் என்று அழைக்கப்பட்ட கிராமத்தில் விருஷயினி, கமலாவதி தம்பதியின் மகளாகப் பிறந்தவள் ராதை எனும் ராதா. ஸ்ரீகண்ணன் பிறந்தது போலவே இவள் பிறந்ததும் அஷ்டமி திதியில்தான்!

கண்ணனை நேசித்து, அன்பு காட்டி அவனுக்குச் சேவை செய்வது ஒன்றே ராதையின் லட்சியமாக இருந்தது. குழந்தைப் பருவம் முதலே சதா சர்வகாலமும் 'கிருஷ்ணா... கிருஷ்ணா...’ என்ற நாமத்தை இடையறாது ஜபித்துக் கொண்டிருந்தாள் அவள்.

கௌடிய வைணவ நூல், ராதையை 'ஹல்தினி சக்தி’ என்று குறிப்பிடுகிறது. அதாவது, ராதை, 'கிருஷ்ணனின் ஆத்ம சக்தி’ என்பது சித்தாந்தம். ராதையின் அவதார காரண கதையையும், அவளது கிருஷ்ண பக்தியின் தாத்பர்யத்தையும் விளக்க, ராமாயணத்தில் ஒரு சம்பவம் நிகழ்கிறது.

சீதை மற்றும் லட்சுமணனுடன் வனவாசம் செய்த காலத்தில், பல மகரிஷிகளைச் சந்திக்கிறான் ஸ்ரீராமன். அந்த மகரிஷிகளை ஸ்ரீராமன் நமஸ்கரித்தபோதெல்லாம் அவர்கள் ஸ்ரீராமனை

நெஞ்சாரத் தழுவிக் கொண்டார்கள். இந்தப் பேரானந்தம் நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். ஆனால் ஸ்ரீராமனோ ஓரிடத்தில் தங்காமல், வனத்தில் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தான்.

தெரிந்த புராணம்... தெரியாத கதை!
##~##
ஒருநாள், சில மகரிஷிகள் ஒன்றுகூடி ஸ்ரீராமனுடன் இணைந்து வாழ்ந்து, அவன் அருளைப் பெறப் பிரார்த்தனை செய்தார்கள். அப்போது ஸ்ரீராமன், 'எனது அடுத்த அவதாரத்தில் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்’ என வாக்களித்தான். அவர்களே பிருந்தாவன கோபியர்களும், கோபாலர்களும்! கோபிகளுக்கும் கண்ணனுக்கும் இடையே இருந்த உறவு புனிதமானது. அதில், குரு-சிஷ்ய பாவம் இருந்தது. கண்ணன் கடவுளின் அவதாரம் என்றால், கோபியர்கள் அந்தக் கடவுளை அடையச் சாதனை புரியும் தவசீலர்கள். கோபியர்களின் பிரேம பக்தியைத் தீவிரமாக்க, அவர்களுடனேயே ஒரு கோபியாக வாழ்ந்த ராதை, கண்ணனின் சங்கல்பத்தில் தோன்றிய சக்தி வடிவமே!

ராதையும் கண்ணனும் இணைபிரியாமல் வாழ விரும்பினர். கோபியர்களுக்கும் கண்ணனைப் பிரிய மனமில்லை. ஆனால், ஒருநாள் கண்ணன் அவர்களைப் பிரிய நேர்ந்தது. அதாவது, கம்ஸ ஸம்ஹாரத்துக்காக கண்ணன் பிருந்தாவனம் விட்டு மதுரா செல்ல நேர்ந்தது. அப்போது கோபியர்கள், கண்ணன் சென்ற தேர்ச் சக்கரத்தைப் பிடித்து நிறுத்தி, அவனைப் போகவேண்டாம் என்று கெஞ்சினர். ராதை தேரின் முன்னால் நின்று கதறி அழுது, கண்ணனைத் தடுத்தாள். ஆனால், கண்ணன் அவர்களைச் சமாதானம் செய்து, தன் கடமையைச் செய்ய அனுமதிக்கும்படி மன்றாடினான். ராதைக்கு, அவன் இனி பிருந்தாவனம் வரமாட்டான் என்பது புரிந்தது. அவள் மன உறுதியோடு கண்ணனை அணுகினாள். ''கண்ணா! உன் சக்திகள் அனைத்தையும் உனது புல்லாங்குழலில் ஆவாஹனம் செய்து என்னிடம் கொடுத்து விடு. அதிலிருந்து வரும் குழலோசையில் உன்னைக் கண்டு, உன் பிரிவை மறந்து நாங்கள் வாழ வழி செய்!'' என்று கேட்டாள். கண்ணனும் தன் புல்லாங்குழலில் தன் சக்தியின் ஒரு பகுதியை ஆவாஹனம் செய்து ராதையிடம் கொடுத்தான்.

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

இவ்வாறு தனது ஒரு அம்ஸத்தை ராதையிடம் கொடுத்துவிட்டுத்தான் பிருந்தாவனத்தில் இருந்து புறப்பட்டான் கண்ணன். அதன் பிறகு, அவன் பிருந்தாவனம் திரும்பவே இல்லை. புல்லாங்குழல், ராதையின் பிரேம பக்திக்கு கண்ணன் தந்த பரிசு! கண்ணன் இல்லாத பிருந்தாவனத்தில் அந்தக் குழலை இசைத்து, கண்ணன் பிரிவால் வாடும் கோபியர்களுக்கும் கோபாலர்களுக்கும் ஆறுதல் தந்தாள் ராதை.

கண்ணன் மதுரா சென்று கம்ஸனை ஸம்ஹாரம் செய்து, வசுதேவர், தேவகி மற்றும் தனது தாத்தா ராஜா உக்ரசேனரையும் சிறையிலிருந்து விடுவித்து, உக்ரசேனருக்குப் பட்டம் சூட்டினான். பின்னர், துவாரகை சென்று மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். அதன் பிறகு ருக்மிணி, சத்யபாமா உள்ளிட்ட எட்டுப் பெண்களை மணந்து கொண்டான். அவர்கள் 'அஷ்டசகிகள்’ எனப்படுவர்.

ஸ்ரீகண்ணன் பாண்டவர்களுக்காகப் போராடி, குருக்ஷேத்திரப் போரில் வென்ற தர்மனுக்கு முடிசூட்டினான். இந்தக் கால கட்டங்களில் கண்ணன் ராதையைச் சந்தித்ததாகவோ, அவளை நினைத்து ஏங்கியதாகவோ எந்த நூலிலும் எந்த நிகழ்ச்சியும் குறிப்பிடப்படவில்லை. கவிசூரதாஸ் பாடிய ராதாகிருஷ்ணனைப் பற்றிய கவிதைகளில், 'பஞ்சபூதங்களில் ராதை- பூமி, கண்ணன்- ஆகாயம். வானம் பூமியைத் தொடுவதுபோல் தோன்றும். ஆனால், அவை தொட்டுக்கொள்ளாது. ராதாகிருஷ்ணன் என்பது ஒரு தொடுவானம். வானமும் பூமியும் தொடுவதுமில்லை; பிரிவதுமில்லை. அதுபோலத்தான் ராதையும் கிருஷ்ணனும்!’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருமுறை, கண்ணனுக்கும் ராதைக்கும் இடையே ஒரு சம்பாஷணை நிகழ்ந்தது. ''சதா சர்வகாலமும் என் நாமத்தையே ஜபித்து, என்னையே எண்ணிக் கொண்டிருக்கிறாயே... இதனால் என்ன ஆனந்தத்தை அடைகிறாய்?' என்று ராதையிடம் கேட்டான் கண்ணன். அதற்கு ராதை, ''கிருஷ்ணா... இதற்கு என்னால் பதில் கூற முடியாது. இதைத் தெரிந்து கொள்ள விரும்பினால், நீயே ராதையாக மாறி, அந்தக் கிருஷ்ணனைத் தேடிப் பார்'' என பதிலளித்தாள். ராதையின் வார்த்தைகள் உண்மையாயின!

கலியுகத்தில் ஸ்ரீகிருஷ்ணனே ராதையின் அம்ஸத்துடன் ஸ்ரீகிருஷ்ண சைதன்யராக அவதரித்தார். வாழ்நாள் முழுவதும் கிருஷ்ண பக்தியை நாமசங்கீர்த்தனத்தால் உலகெங்கும் பரப்பினார். கலியுகத்தில், ஆண்டவனை அடையச் செய்யும் எளிய முறை நாம சங்கீர்த்தனம் மட்டுமே என்று எடுத்துக்காட்டினார்.

சிவசக்தி வடிவம்- அர்த்த நாரீஸ்வரர். அவர்களைப் பிரித்துக் காண முடியாது. அதுபோலத்தான் ராதாகிருஷ்ணன். ராதா என்ற சப்தத்துக்கு பிரேமபக்தி என்று பொருள் கூறினால், அது தவறாகாது!

- இன்னும் சொல்வேன்...