வாசகர் தகவல்கள்
அன்பின் பலம்!

##~## |
மறுநாள் இன்னொரு கிராமத்துக்கு குருநானக்கும் அவரது சீடர்களும் சென்றனர். அன்பு, பாசம் என்றால்... இதுவல்லவோ என்று சொல்லும் அளவுக்கு அங்கிருந்த எல்லோரும் பாசத்தோடும் நட்போடும் பழகினர். அவர்க ளுக்கு மத்தியில் உபதேசம் செய்த குருநானக், 'நீங்கள் எல்லோரும் இந்த ஊரிலேயே இருந்துவிடக்கூடாது. ஒவ்வொரு ஊராக எல்லோரும் பிரிந்துசென்று வாழ வேண்டும்'' என்றார்.
உபதேசம் முடிந்ததும் குருநானக்கிடம் அவரது சீடர்கள், 'ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்பவர்களை அந்த ஊரிலேயே இருக்குமாறும், அன்போடு பழகியவர்களை பிரிந்து சென்று வாழுமாறும் நீங்கள் சொன்னது ஏன் என்று எங்களுக்கு புரியவில்லை' என்றனர்.
அதற்கு குருநானக், 'எதற்கெடுத்தாலும் பிரச்னை செய்பவர்கள், மற்ற இடங்களுக்குச் சென்றால் அங்கேயும் பிரச்னை செய்வார்கள். அதனால், அவர்களை அந்த ஊரிலேயே இருக்கும்படி சொன்னேன். நல்லவர்கள் எங்கே பிரிந்து சென்றாலும், அங்குள்ளவர்களையும் நல்லவர்களாக்கிக் கொள்வார்கள் என்பதால், அவர்களை பல ஊர்களுக்கு பிரிந்து சென்று வாழுமாறு கேட்டுக் கொண்டேன்' என்றார்.
மன்னிப்பின் பெருந்தன்மை!

மகான் ராகவேந்திரர் ஒரு ஊருக்கு உபதேசம் செய்ய சென்றபோது, பக்தன் ஒருவன் அவரது காலில் விழுந்து கதறி அழுதான்.
'சுவாமி! நான் செய்த ஒரு தவறுக்காக என்னை இந்த ஊரைவிட்டே ஒதுக்கி வைத்து விட்டார்கள். யாரும் என்னிடம் பேசக் கூட மறுக்கிறார்கள். துஷ்டனைப் பார்ப்பது போன்று என்னைப் பார்க்கிறார்கள். நீங்கள்தான் எனக்கு பாவ விமோசனம் தரவேண்டும்...' என்றான்.
அந்த பக்தனை தனது பூஜையில் பங்கேற்கச் செய்த ராகவேந்திரர், சங்கு தீர்த்தத்தை அவன்மீது தெளித்து, அவன் செய்த பாவம் நீங்கிவிட்டதாகச் சொன்னார். ஆனால், ஊர் மக்களால் அதை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அப்போது அவர்களிடம் பேசிய ராகவேந்திரர், 'தவறு செய்தவன் யாராக இருந்தாலும், அதற்காக வருந்தி மன்னிப்புக் கேட்டால் அவனை மன்னிப்பதுதான் பெருந்தன்மை' என்று உபதேசம் செய்ததோடு, ஊரார் ஒதுக்கிய பக்தனை ஊரோடு சேர்ந்துவாழ வழிவகை செய்தார்.
தொகுப்பு: குபேர ஆனந்த்