Published:Updated:

கேரள திவ்ய தேசங்கள்!

கேரள திவ்ய தேசங்கள்!
News
கேரள திவ்ய தேசங்கள்!

பக்தியில் பாமரர்களாகிய நாம், அரிதிலும் அரிதான இந்த முக்குணங்களை வளர்ப்பது சாத்தியமா?

கேரள திவ்ய தேசங்கள்!
கேரள திவ்ய தேசங்கள்!
கேரள திவ்ய தேசங்கள்!
கேரள திவ்ய தேசங்கள்!
கேரள திவ்ய தேசங்கள்!
கேரள திவ்ய தேசங்கள்!

ண்டபகிரண்டம் யாவையும் தன்னுள்ளே கொண்டு, அவை அனைத்தையும் ரட்சிக்கும் ஸ்ரீமந்நாராயணனை,  நமக்குள்ளும் எழுந்தருளச் செய்ய... மூன்று எளிய வழிகளைச் சொல்லித் தந்தார்கள் பெரியோர்கள்.

அவை: பரபக்தி, பரஞானம், பரம பக்தி!

திருமாலை அனுபவிக்கவேண்டும் என்ற பேராவல்- பரபக்தி; அவரை அடைதல் என்பது பரஞானம்; மென்மேலும் அவரையே நினைத்துருக வேண்டும் என்று ஆவல் கொள்வது பரம பக்தி.

இந்த மூன்று குணாதிசயங்களும் இருந்துவிட்டால் போதும்... இரண்யகசிபுவின் அரண்மனைத் தூணிலும், கோசலையின் மணிவயிற்றிலும், மதுரா மாநகர் சிறையில் தேவகியின் கருவிலும் உதித்த பரம்பொருள்... நம் மனக்கோயிலிலும் எழுந்தருளும்!

பிறகென்ன... மறுமை மட்டுமின்றி பொன்-பொருளும், மனதுக்கு இனிய மண பாக்கியமும், சந்தானச் செல்வமும் செழித்தோங்க, பதினாறும் பெருக இம்மையும் சிறக்கும் அவனருளால்!

சரி... பக்தியில் பாமரர்களாகிய நாம், அரிதிலும் அரிதான இந்த முக்குணங்களை வளர்ப்பது சாத்தியமா?

சாத்தியம்தான்!

'திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும் அருக்கண் அணிநிறமும் கண்டேன்...’ என்று காண்பதற்கரிய கருப் பொருளை - ஸ்ரீஹரியை கண்டுணர்ந்து பாடிப் போற்றினார்களே ஆழ்வார் பெருமக்கள்?! அவர்களின் அடியற்றி, அவர்கள் பாடிவைத்த திவ்யதேசங்களுக்குப் பயணித்து, கலியுகம் சிறக்க அந்தத் திருத் தலங்களில் அர்ச்சாவதாரமாய் எழுந்தருளியிருக்கும் நாராயண மூர்த்தியை நாளும் தரிசிக்க நலம் யாவும் கூடிவரும்!

திவ்யதேசங்கள் 108. அவற்றுள் திருப்பரமபதம் மற்றும் திருப்பாற்கடலை நிலவுலகில் தரிசிக்க இயலாது. மீதமுள்ள 106 திருப்பதிகளில்... பரசுராம க்ஷேத்திரமாம் கேரளத்தில் மட்டும் 13 திருத்தலங்கள் உண்டு.

மகத்துவமான அந்த மலைநாட்டு திருப்பதிகள் உங்களுக்காக...

கருமா ணிக்க மலைமேல் மணித்தடம் 
தாமரைக் காடுகள் போல்
திருமார்வு வாய்கண் கைஉந்தி கால்உடை
     ஆடைகள் செய்யபிரான்
திருமால் எம்மான் செழுநீர் வயல்குட்ட
     நாட்டுத் திருப்புலியூர்
அருமாயன் பேரன்றிப் பேச்சிலர் அன்னையீர்!
     இதற்குஎன் செய்கேனோ?

- நம்மாழ்வார் (திருவாய்மொழி)

பொருள்: கரிய மாணிக்க மலையிலே அழகிய தடாகத்திலே தாமரைப் பூக்கள் மலர்ந்தாற் போன்று திருமாலாகிய எம்பெருமான் காட்சி தருகிறான். அவன் திருமார்பும், வாய், கண்கள், கைகள், கொப்பூழ், திருவடிகள், ஆடைகள் ஆகியவை அழகுடன் பொலிகின்றன. குட்டநாட்டில் திருப்புலியூரில் எழுந்தருளியுள்ள எங்கள்

பெருமானின் திருப்பெயரை அன்றி வேறு எதையும் எங்கள் தலைவி பேசவில்லை அன்னையரே! இதற்கு என்ன செய்வேனோ?.

கேரள திவ்ய தேசங்கள்!
கேரள திவ்ய தேசங்கள்!

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 115 கி.மீ. தொலைவில், ஆலப்புழை மாவட்டத்தில் செங்கண்ணூர் என்ற நகரம் இருக்கிறது. பஞ்ச பாண்டவர்கள் உருவாக்கி வழிபட்ட 'அஞ்சம்பலம்’ எனப்படும் ஐந்து தலங்களுடன், திருவல்லபபுரம்-ஸ்ரீவல்லபப் பெருமாள் ஆலயமும் சேர்ந்து மொத்தம் 6 திவ்ய தேசங்கள் செங்கண்ணூரைச் சுற்றியே, சில கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளன.

அவற்றுள் பீமன் நிர்மாணித்து வழிபட்ட தலம்- திருப்புலியூர். செங்கண்ணூர் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே சுமார் 6 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்தத் தலம். இதனை 'பீம க்ஷேத்திரம்’ என்றும் சொல்வர். குருக்ஷேத்திரப் போரின் 15-வது நாள், துரோணர் மிக ஆவேசமாகப் போரிட்டார். அவரை அப்படியே விட்டால் பாண்டவ சேனை மொத்தத்தையும் அழித்துவிடுவார் என்று எண்ணிய கிருஷ்ணன், ஏதேனும் சூழ்ச்சி செய்தாவது துரோணர் தமது ஆயுதத்தை கீழே போடுமாறு செய்யவேண்டும் என்று சித்தம் கொண்டார். மகன் அஸ்வத்தாமன் மீது அவருக்கு உயிர். அவனுக்கு ஏதேனும் ஆபத்து என்றால் செயலிழந்து போவார் என்பதை அறிந்த கண்ணபரமாத்மா, 'அஸ்வத்தாமா இறந்துவிட்டதாக எவரேனும் பொய் சொல்ல வேண்டும்’ என்று திட்டமிட்டார். அவ்வாறு சொல்லும்படி தருமனைப் பணித்தார்.

ஆனால், தருமனோ பொய் சொல்ல ஒப்புக்கொள்ளவில்லை. மாளவ தேசத்து அரசனிடம் அஸ்வத்தாமா என்ற பெயருடைய யானை ஒன்று இருந்தது. கண்ணனின்

திட்டப்படி அந்த யானையை பீமன் கொன்றான். இந்தச் செய்தியை சத்தமாக கூறும்படி தருமனைப் பணித்தார் கிருஷ்ணர். தருமனும் உரக்கக் கத்தினான். தருமன் கூவிய வார்த்தைகளில் 'அஸ்வத்தாமா கொல்லப்பட்டான்’ என்பது மட்டுமே துரோணரின் காதுகளில் விழுந்தது. இடி தாக்கியது போன்று அதிர்ந்தார் துரோணர். மேற்கொண்டு எதுவும் செய்யத் தோன்றாமல் துவண்டு நின்றிருந்த அந்த ஆச்சார்யரை எளிதில் வீழ்த்தினான் அர்ஜுனன்.

கேரள திவ்ய தேசங்கள்!
கேரள திவ்ய தேசங்கள்!

எனினும், அவரது மரணத்துக்கு பீமனும் ஒரு காரணம் அல்லவா? அந்தப் பாவம் நீங்குவதற்காக திருப்புலியூருக்கு வந்து ஸ்ரீமாயபிரான் கோயிலைக் கட்டி வழிபட்டதாகச் சொல்கிறது ஸ்தலபுராணம்.

தரை மட்டத்திலிருந்து சற்று உயரமாக அமைக்கப்பட்டுள்ளது திருக்கோயில். படிகளில் ஏறிச் சென்றால், சதுர பரப்பளவுடன் பரந்து விரிந்து திகழ்கிறது ஆலயம். கொடிமரத்தை தாண்டிச் சென்றால், சுமார் 10 அடி நீளமுள்ள- கருங்கல்லால் செய்யப் பட்ட பீமனின் கதாயுதத்தை காணலாம். அற்புதமான கலைப் படைப்பு இது.

உள்ளே கருவறையில்... புருஷோத்தம விமானத்தின் கீழ் சங்கு-சக்கரம் ஏந்திய திருக்கரங்களுடன், கிழக்கு நோக்கி சுமார் நான்கரை அடி உயரத்துடன், நின்ற கோலத்தில் அருள்கிறார் ஸ்ரீமாயபிரான். 'திருப்புலியூர் அருள்மாயன்’ என்று நம்மாழ்வார் போற்றிப் பரவுவது இவரைத்தான். தாயாரின் திருநாமம் ஸ்ரீபொற்கொடி நாச்சியார்.

சப்த ரிஷிகளுக்கும் அருள் வழங்கிய திருத்தலம் இது என்கிறது ஸ்தலபுராணம். சூரிய குலத்தில் தோன்றிய சிபிச் சக்கரவர்த்தியின் மகன் விருட்சதர்பி. இவனது காலத்தில் நாட்டில் கடும் பஞ்சம். அரசாங்க கஜானா காலியாக ஆரம்பித்தது. மன்னனின் அக்கிரமமான ஆட்சியே இதற்குக் காரணம் என்று முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் தெரிந்திருந்தது.

கேரள திவ்ய தேசங்கள்!
கேரள திவ்ய தேசங்கள்!

இந்த நிலையில், ரிஷிகளுக்கு தர்மம் செய்தால் பஞ்சம் நீங்கும் என மன்னன் நினைத் தான். எனவே,  இந்தப் பகுதியை ஒட்டிய வனத்தில் வசித்த சப்தரிஷிகளான அத்ரி, வசிஷ்டர், காச்யபர், கௌதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர்,  ஜமதக்னி ஆகியோரை வரவழைத்து, அவர்களுக்கு ஏராளமான செல்வங்களை அளிக்க முன்வந்தான். ஆனால், ரிஷிகள் அதற்கு சம்மதிக்கவில்லை. எனினும் எப்படியாவது ரிஷிகளை ஏமாற்றி அவர்களுக்கு செல்வத்தை தானம் வழங்க விரும்பிய விருட்சதர்பி, பழங்களுக்குள் பொன்னை மறைத்துவைத்து கொடுக்கத் திட்டமிட்டான். ஆனால், இதை ஞானதிருஷ்டியால் அறிந்த முனிவர்கள், அவன் தந்த பழங்களையும் ஏற்க மறுத்துவிட்டனர்.

இதனால் கோபம் கொண்ட மன்னன், அவர்களைக் கொல்வதற்கு முடிவெடுத்தான். அதற்காக ஒரு யாகம் வளர்த்து, அதிலிருந்து தோன்றிய 'கிருத்தியை’ எனும் அரக்கியை, ரிஷிகளைக் கொல்ல ஏவினான். ரிஷிகளோ ஸ்ரீமகா விஷ்ணுவிடம் சரண் புகுந்தனர்.

ரிஷிகளை ரட்சிக்க திருவுளம் கொண்டார் திருமால். அரக்கியரை அழித்து முனிவர்களை காக்கும்படி இந்திரனுக்கு உத்தரவிட்டார். இந்திரன் புலியாக உருவெடுத்து வந்து அரக்கியை அழித்து ரிஷிகளைக் காப்பாற்றினான் (இந்திரன் புலியின் மீது அமர்ந்து வந்து போரிட்டதாகவும் ஒரு கதை உண்டு). ஆகவே இந்த ஊரை 'புலியூர்’ எனவும், மூலவர் ஸ்ரீமாயபிரானை 'திருப்புலியூரப்பன்’ எனவும் அழைக்கலாயினர்.

தங்களுக்கு வரவிருந்த ஆபத்து நீங்கியதால் மகிழ்ந்த சப்த ரிஷிகளும் ஸ்ரீமகாவிஷ்ணுவை போற்றித் துதித்தனர். பெருமாள் சப்தரிஷிகளுக்குக் காட்சி தந்ததுடன், அவர்களுக்கு முக்தியும் தந்து தம்மிடம் அழைத்துக்கொண்டார்.

ஸ்தலபுராண கதையைக் கேட்க கேட்க பரவசத்தால் பூரிக்கிறது நம் மனம். இந்தப் பகுதி மக்களுக்கெல்லாம் கண்கண்ட தெய்வம் திருப்புலியூரப்பன்தான்.

''ஸ்ரீமாயபிரான் குறித்து நம்மாழ்வார் 11 பாசுரங்களும் (திருவாய்மொழி), திருமங்கை ஆழ்வார் ஒரு சிறிய திருமடலுமாக மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள். மயிலாடுதுறை அருகே கொல்லுமாங்குடியில் சிறுபுலியூர் என்று ஒரு தலம் இருப்பதால், வேறுபடுத்திக் காட்டுவதற்காக இந்தத் தலத்தை 'குட்ட நாட்டுத் திருப்புலியூர்’ என்று நம்மாழ்வார் பாடியிருக்கிறார்.

கேரள திவ்ய தேசங்கள்!
கேரள திவ்ய தேசங்கள்!

பஞ்ச பாண்டவர்கள் கட்டிய ஐந்து கோயில்களில் ஒன்று இது. இவை தவிர, காயங்குளம் எனும் தலத்தில் குந்திதேவி கட்டிய ஒரு கோயில் இருக்கிறது. ஆனால், அது திவ்யதேசப் பட்டியலில் இல்லை. இந்தப் பெருமாளை நம்பிக்கையுடன் வழிபடுவோருக்கு, எதிரிகளின் மாயச் சதிகள் எல்லாம் முறியடிக்கப்பட்டு வெற்றி கிட்டும்; பாவ விமோசனம் கிடைக்கும். பீமனைப் போல புஜ பல பராக்கிரமம் பெறலாம் என்பது நம்பிக்கை!'' என்கிறார் கோயிலின் அருகிலேயே வசிக்கும் சிவப்பிரகாச வாரியர் எனும் பக்தர்.

''மூலவர் மாயபிரான் பெருமாளுடன் தாயார் பொற் கொடி நாச்சியார் உறைந்திருப்ப தாக ஐதீகம். ஆனால், தாயாருக்குப் பிரதிஷ்டை கிடையாது. பிராகாரச் சுவரில் ஸ்ரீகணபதி,  ஸ்ரீசிவன், ஸ்ரீசாஸ்தா ஆகியோருக்கு மாட சந்நிதிகள் உள்ளன. நாகராஜன், நாக யக்ஷி ஆகிய அனைவருமே உபதேவதைகளாக அருள்கின்றனர். அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, காலை 11 மணிக்கு சாத்தப்படுகிறது. மீண்டும் மாலை 5 மணிக்கு திறந்து இரவு 8 மணிக்கு சாத்துக்கிறோம்.

இங்கு 'சதுர் சத’ வழிபாடு விசேஷம்! சதம் என்றால் 100. சதுர் என்றால் 4. அதாவது 4 ஜ் 100 = 400 தேங்காய், 400 வாழைப்பழம், அரிசி, சர்க்கரை என்று எல்லாவற்றையும் 400 என்ற அளவில் சேர்த்து பாயசம் செய்து பெருமாளுக்கு நைவேத்தியம் செய்கிறோம் மனதில் பக்தர்கள் எண்ணுகிற காரியங்கள் ஸித்தியாக வேண்டி, பாயசம் தயாரித்துப் பகவானுக்கு அர்ப்பணித்து, பின் பக்தர்களுக்கு அது விநியோகிக்கப்படுகிறது.

இந்தப் பெருமாள், பீமனால் பூஜிக்கப்பட்டவர். பீமனுக்கு உடல் பலமும், மன தைரியமும், போரில் சத்துரு ஜெயமும் கிடைத்த மாதிரி, இந்தப் பெருமாளைப் பூஜித்து வழிபடுகிறவர்களுக்கும் கிடைக் கும் என்பது பக்தர்களின் அழுத்தமான நம்பிக்கை!'' என்று மன நெகிழ்வுடன் விவரிக்கிறார் ஆலயத்தின் மேல்சாந்தியான (தலைமை அர்ச்சகர்) ஸ்ரீதரன் நம்பூதிரி.

தரிசனம் தொடரும்...
படங்கள்: ரா.ராம்குமார்