
திருச்சி- கல்லுக்குழி ஸ்ரீஆஞ்சநேயர் கோயில்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வாயுமைந்தனாம் ஸ்ரீஆஞ்சநேயர் குடிகொண்டிருக்கும் திருச்சி- கல்லுக்குழி ஆலயத்தில் சக்தி விகடனின் 52-வது திருவிளக்கு பூஜை, 18.1.11 அன்று நடைபெற்றது. சக்தி விகடனும் நயஹாவும் இணைந்து நடத்துகிற விளக்கு பூஜை இது.
''சக்தி விகடன் நடத்தற விளக்கு பூஜைல தொடர்ந்து கலந்துக்கிட்டு வரேன். மனசுக்கு நிறைவைத் தர்ற பூஜைல, இது வரைக்கும் எதையுமே வேண்டிக் காமதான் இருந்தேன். ஆனா, இப்போ வீட்டுல எனக்கு வரன் பார்த்துக்கிட்டு இருக்காங்க. அன்பான கணவரும் ஆதரவான மாமியாரும் கிடைக்கணும்கற பிரார்த்தனைதான் ஓடுது, உள்ளுக்குள்ளே!'' என்று சிரிப்பும் வெட்கமும் கலந்தபடி சொன்னார் சேலம் வாசகி கிருஷ்ணவேணி.
''கல்யாணமாகி நாலு வருஷ மாகியும் குழந்தை பாக்கியத்தை மட்டும் தரலை கடவுள். சக்தி விகடன் விளக்கு பூஜைல கலந்துக்கிட்டு வேண்டிக்கிட்டா, நல்லதுன்னு சொன்னாங்க. வீட்ல தொட்டில் சத்தம் கேக்கும்னு இப்ப நம்பிக்கையே வந்துருச்சு'' என்று நெகிழ்ந்தார், திருச்சி வாசகி மங்கையர்க்கரசி.
##~## |
'வீட்ல பசங்க பரீட்சைல நல்ல மார்க் எடுக்கணும்’ என்று விஜயாவும், 'எங்க பிசினஸ் சீரும் சிறப்புமா வளரணும்’ என்று முத்துலட்சுமியும் வேண்டிக் கொண்டனர்.
''எங்க ரெண்டு பொண்ணுங் களுமே மாசமா இருக்காங்க. அவங்களுக்கு சுகப்பிரசவம் ஆகணும். ஜாம் ஜாம்னு பேரனையோ பேத்தியையோ தரப் போறாங்க, பாருங்க'' என்று கண் களில் நம்பிக்கைச் சுடர்விடத் தெரிவித்தார் வாசகி சுகந்தா.
''வாசகியரின் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுவது உறுதி; கல்லுக்குழி ஸ்ரீஆஞ்சநேயர் எவரையும் கைவிட மாட்டார்'' என்றார் கோயிலின் பட்டாச்சார்யர்.
அஞ்சனை மைந்தன் இருக்க, அஞ்சேல்!
- ச.ஸ்ரீராம்
படங்கள்: ப்ரீத்தி கார்த்திக்