Published:Updated:

வாசகர் தகவல்கள்

வாசகர் தகவல்கள்

வாசகர் தகவல்கள்

வாசகர் தகவல்கள்

Published:Updated:

ஜகம் புகழும் மாசி மகம்

வாசகர் தகவல்கள்

மாசி மாதம் வரும் மக நட்சத்திரத்தில் கும்பகோணத்திலும், மற்ற ஊரின்  கோயில் குளங்களிலும், புண்ணிய நதிகளிலும், சமுத்திரத்திலும் ஸ்நானம் செய்வதை இந்துமத புராணங்கள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டு  கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்’

என ஞானசம்பந்தர் மாசி மகத்தைச் சிறப்பிக்கிறார்.

##~##
மாசியில் மக நட்சத்திர ஈர்ப்பு காரணமாக காந்த சக்தி பூமியில் அதிகமாகி நீர்நிலைகளில் புதிய ஊற்றுக்கள் உண்டாகின்றன என்கிறது அறிவியல்.

தேவேந்திரன் இந்நன்னாளில் துங்கபத்திரையில் நீராடி தூயகதி பெற்றான். சாபம் நீக்கி, பாபம் போக்கிய சிவபெருமானைப் போற்றி தீபம் ஏற்றினான் என ஸ்காந்த புராணம் எடுத்துரைக்கிறது.

மாசி மகத்தில் முன்னோர்களுக்குரிய கடனைச் செலுத்தினால், அவர்களின் ஆசி நம் தலைமுறைக்குக் கிடைக்கும்.

மாசி மாதத்தில் உபநயனம் செய்விப்பதை 'மாசிப் பூணூல் மணிப் பூணூல்’ எனப் பாராட்டுகிறார்கள்.

ஒரு நாள் நாம் காணுகின்ற கும்பாபிஷேக வைபவம் எப்படிப் பன்னிரண்டு ஆண்டு தரிசனப் பலனை அளிக்குமோ அப்படி 'மாசி மகத்தின் நீராடல்’ அறுபத்தாறுகோடி தீர்த்தங்களில் நீராடிய பலனை அளிக்கிறது.

மாசி மகத்தில் நீராடி புறத்தூய்மை மட்டுமல்ல, அகத் தூய்மையும் பெற்று ஆனந்தம் பெறலாம்!

- எஸ்.ராஜகோபாலன், சென்னை-44

 சக்கர தீர்த்தத்திலும் நீராடலாம்!

வாசகர் தகவல்கள்

பாவனன் என்பவர், இறந்து போன தன் தந்தையின் எலும்புகளை ஒரு குடத்தில் போட்டு எடுத்துக் கொண்டு கங்கைக்குக் கிளம்பினார். சீடனும் உடன் சென்றான்.

வழியில் கும்பகோணத்தில்,  ஓர் அரச மரத்தடியில் குடத்தை வைத்தவர், சீடனிடம் கூறிவிட்டு காவிரி- சக்கர தீர்த்தத்தில் நீராடச் சென்றார். சீடனுக்கோ  பசி. 'குடத்தில் குருநாதர் சாப்பிட

ஏதாவது வைத்திருப்பார்’ என்ற எண்ணத்துடன் குடத்தைத் திறந்தான். உள்ளே தாமரைப் பூக்கள்! ஏமாந்து போன சீடன் குடத்தை முன்போல் மூடிவைத்துவிட்டான்!

அவர்கள் கங்கைக் கரையை அடைந்ததும், குருநாதர் குடத்தைத் திறந்தார்.  'குரு, பூக்களை என்ன செய்யப் போகிறார்?’ என்ற எண்ணத்துடன் எட்டிப் பார்த்தான் சீடன். இப்போது குடத்துக்குள் எலும்புகள் இருப்பதைக் கண்டவன் அதிர்ந்தான். குருநாதரிடம் கும்பகோணத்தில் நடந்ததை விவரித் தான். உண்மையைத் தெரிந்துகொண்ட குருநாதர், கங்கையில் எலும்புகளைப் போடாமல் குடத்தை மூடிக்கொண்டு கிளம்பினார் கும்பகோணத்துக்கு.

ஆனால், கங்கைக் கரையில் இருந்த வர்களோ, ''கங்கையில் எலும்புகளை போடாமல் போகக் கூடாது!'' என்றனர். அப்போது ஓர் அசரீரி... ''கங்கையைவிட புனிதமானது காவிரி- சக்கர தீர்த்தம். பகவானுடைய சக்கராயுதமே அங்கே நித்திய வாசம் பண்ணுவதே அதற்குத் தகுந்த சாட்சி! இந்த எலும்புகளை இவன் அங்கேயே கொண்டு போகட்டும்!'' என்றது. பிறகென்ன... குருவும் சீடனும் கிளம்பி கும்பகோணம் சக்கர தீர்த்தத்தை அடைந்தனர். அங்கே குடத்தைத் திறந்து பார்த்தபோது, எலும்புகளுக்குப் பதிலாக பூக்கள் இருந்தன. அவற்றைச் சக்கர தீர்த்தத்தில் சேர்த்துவிட்டு, சக்கரபாணியைத் தரிசித்து வீடு போய்ச் சேர்ந்தார் குருநாதர். இந்த நிகழ்ச்சி மாசி மகத்தன்று நடைபெற்றது.

எனவே மாசி மகத்தன்று, கும்ப கோணம் சக்கர தீர்த்தத்தில் நீராடுவதும், முன்னோருக்குத் தர்ப்பணம் செய்வதும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

- சி.குமார், திருச்சி

வாசகர் தகவல்கள்
##~##
'இ
சை கேட்டால் புவி அசைந்தாடும்’ என்பார்கள். வாழும் கலை அமைப்பின் 30-வது ஆண்டு விழாவில் அது நிஜமானதைக் காணமுடிந்தது.

30.1.11 அன்று பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி சாலை, ஸ்ரீராம் கேட்வேயில், 5000 கர்னாடக இசைக் கலைஞர்கள் ஒரே மேடையில் இசைத்த மாபெரும் இசை நிகழ்ச்சியான நாத வைபவத்தை குருஜி ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தலைமையில், வாழும் கலை அமைப்பும் மார்க் பிருந்தாவனும் இணைந்து நடத்தின. அங்கே கூடியிருந்த லட்சக்கணக்கான மக்கள் கர்னாடக இசை வெள்ளத்தில் மூழ்கித் திளைத்தனர்; மெய்சிலிர்த்து ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.

நாத வைபவம் நிகழ்ச்சி வெறுமே இசை அனுபவத்தை மட்டும் கொடுக்கவில்லை; இசையுடன் ஆன்மிக உணர்வையும் சேர்த்து மக்களுக்கு அளித்தது என்றே சொல்ல வேண்டும்.

''பட்சிகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து பாடுகின்றனவே, மனிதர்களாகிய நாம் ஏன் ஒன்று சேர்ந்து பாடக்கூடாது என்று எனக்குள் ஓர் எண்ணம் தோன்றியது. அதன் அடிப்படையில் உருவானதுதான் இந்த நாத வைபவம். இந்த உலகில் பாட்டுப் பாடுவதை விட்டுவிட்டு, படாதபாடு படுகின்றனர் சில மனிதர்கள். நம் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான விஷயங்கள் மூன்று - தியானம், கானம், ஞானம். இந்த மூன்றும் இருந்தால் போதும், வாழ்வில் வெற்றி பெற்று விடலாம்'' என்றார் குருஜி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர். தொடர்ந்து...

''வருங்கால சந்ததியினர் ஆன்மிகச் சிந்தனையுடன் இசை வழிபாடும், சமூகத்தின்மீது அக்கறையும் கொண்டிருக்க வேண்டும். தியானம் செய்வதுபோல, தினமும் காலையும் மாலையும் இறைவனின் திருவுருவத்தின் முன் அமர்ந்து இசை வழிபாடு செய்வதும் முக்கியம். லயமும், தாளமும் இசைக்கு எப்படி முக்கியமோ, அதுபோல ஆன்மிகமும், சமூக சேவையும் வாழ்க்கைக்கு முக்கியம்'' என்று ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சொன்னது இளைய தலைமுறையினர் பின்பற்றவேண்டிய நல்லதொரு அறிவுரை.

- செ.கார்த்திகேயன்
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism