Published:Updated:

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாசி மாதத்துக்கு அப்படி என்ன மகத்துவம்? அதன் ஆன்மிகச் சிறப்புகளை விவரியுங்களேன்..!

- எம்.சத்தியப்ரியா, வந்தவாசி

மாதங்களில் சிறப்பில்லாதது எதுவும் இல்லை. ஆன்மிகம் தொடாத பண்டிகைகளும் இல்லை. ஆடியிலும் மார்கழியிலும்கூட பண்டிகைகள் நிரம்பி வழியும். நம் உடல், ஆன்மாவுடன் இணைந்தது. நம் உள்ளம் உலக சுகத்துடன் நிற்காமல், ஆன்மாவையும் தேடும். நமது செயல்பாடுகள் அனைத்தும் ஆன்ம சம்பந்தத்தோடு இருக்கும்.

மாசியும் மகத்துவமானதே! இந்த மாதத்தில் மாக ஸ்நானம் என்கிற விசேஷ நீராடல் உண்டு. மாசி மகம் கோலாகலமாகக் கொண்டாடப்படும். மாசி மாத எல்லையில் (கடைசியில்) காரடையான் நோன்பு கடைப்பிடிப்பார்கள். உபநயனத்துக்கும் மாசி மாதம் சிறப்பானது. அதேபோல் மகா சிவராத்திரி, பீம ஏகாதசி ஆகிய வைபவங்களும் மாசி மாதத்தை அலங்கரிக்கும். இப்படி, பண்டிகைகளும் வழிபாடுகளும் நிறைந்த மாசியை நீங்களும் கொண்டாடுங்கள்; மகத்துவம் கிட்டும்.

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

சைனஸ் பிரச்னை காரணமாக, அடிக்கடி தலைக்குக் குளிக்க இயலவில்லை. கோயிலுக்குச் செல்லும்போது, தலைக்குக் குளிக்காமல் செல்லலாமா?

- என்.ராமச்சந்திரன், சென்னை-23

##~##
தலைக்குக் குளித்தால், உடல்நலம் குன்றிவிடும் எனில், அதற்கான சில நடைமுறை களை சாஸ்திரம் பரிந்துரைக்கிறது. உடலுக்குக் குளிக்கலாம், ஈரத்துணியால் தலை முதல் கால் வரை துடைத்துக் கொள்ளலாம், தண்ணீரை மந்திரத்துடன் தெளித்துக் கொள்ளலாம், நெற்றியிலும் மற்ற இடங்களிலும் திருநீறு அல்லது திருமண் அணியலாம், உடம்பில் கதிரவனின் கதிர்களை ஏற்கலாம், ஒருவனை நீராட வைத்து அவனைத் தொட

வைக்கலாம் (அதாவது 10 தடவை நீராடச் சொல்லி, பத்து தடவை தொடவைக்கலாம்)...  இதில், ஏதாவது ஒன்றை நடைமுறைப்படுத்தலாம். அதேநேரம், 'சைனஸ் இருப்பவர் தலைமுழுகத் தேவையில்லை’ என்கிற பரிந்துரை எல்லோருக்கும் பொருந்தாது. மருந்து எண்ணெயை தலையில் தேய்த்துக் கொண்டு நீராடினால் உடம்புக்கு ஒன்றும் ஆகாது. பழக்கப்பட்டுவிட்டால் உடம்பு ஏற்றுக் கொள்ளும். ஆயுள் முழுக்க தலைக்கு குளிக்காமல் இருப்பதாலேயே சைனஸ் மறைந்துவிடாது. சிறந்த மருத்துவரை அணுகுங்கள். ஆரோக்கியத்துக்கு உதவும் அன்றாடக் குளியலைத் தவிர்ப்பதையே சிகிச்சை முறையாக்கிவிடக்கூடாது!

ஆலயங்களில் சில தெய்வங்களுக்கு தைலக்காப்பு மட்டுமே செய்விக்கிறார்கள்; அபிஷேகம் பண்ணுவதில்லை. ஆகம ரீதியாக இதற்கான காரணம் என்ன? தைலக்காப்புக்கு பக்தர்களும் எண்ணெய் சமர்ப்பிக்கலாமா?

- வீ.வீரபத்திரன், காரைக்குடி

மண் அல்லது மரம் ஆகியவற்றால் உருவான இறை உருவங்களுக்கு அபிஷேகம் இருக்காது. கல்லால் ஆன விக்கிரகத் திருமேனிகளுக்கு அபிஷேகம் உண்டு. ஆனால், வேறு ஏதோ காரணங்களால் அபிஷேகம் விடுபட்டு, தைலக்காப்புடன் நின்றுபோவதை, சிறப்புப் பெயருடன் நடைமுறைப்படுத்துவதில் ஆகமத்துக்கு உடன்பாடில்லை. ஜபம், ஹோமம், அர்ச்சனை, அபிஷேகம் ஆகியவற்றை சாஸ்திரம் ஏற்கிறது (ஜபஹோமார்ச்சனாபிஷேகவிதிம்...).

அபிஷேகத்தில் தண்ணீருக்குச் சிறப்புண்டு. தைலக்காப்புக் குப் பிறகு தண்ணீர் அபிஷேகம் உண்டு. பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, எலுமிச்சம் பழச்சாறு, இளநீர், சந்தனம் ஆகிய அபிஷேகங் களில், தண்ணீர் அபிஷேகமும் சேர்ந்து வரும். அதே நேரம்... வழிவழியாக பக்தர்களால் கூறப்படும் கதை, கோயில் வரலாறு ஆகியவற்றையட்டி, சம்பிரதாயமாக ஏற்றுச் செயல்படுவதாக இருந்தால், தைலக்காப்புடன் நிறுத்திக் கொள்ளலாம். தாங்களும் தைலம் (எண்ணெய்) அளித்து, அதில் பங்கேற்கலாம்.

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ஏழரைச் சனியை மங்கு சனி, பொங்கு சனி, மரணச் சனி எனக் குறிப்பிடுவார்கள். அதேபோல், 'அஷ்டமத்து சனி’க்கும் விசேஷ நாமகரணம் உண்டா? அதன் பலாபலன்கள் எப்படி?

- ஆடுதுறை கோ.ராமதாஸ்

ஜாதகத்தில் சனியின் அமைப்பை பொறுத்து 8-ல் வரும் சனி எதிரிடையான பலனைத் திணிக்கும். சில நேரம்... 4, 7 மற்றும் 10-ல் சனி உலாவும் வேளையிலும் நெருடல்கள் ஏற்படலாம். கல்விப் பருவத்தில் வரும் சனி... அதாவது, மனதில் எண்ணங்கள் உதிக்காத அந்தப் பருவத்தில் சனியின் பாதிப்பு மந்தமாகவே செயல்படும். பொதுவாக, இளமையில் இன்ப- துன்பங்கள் தலைதூக்குவதால், வளம் பொங்கவும் அதை அனுபவிக்கவும் வாய்ப்பு உண்டு; உடல்பலத்தை இழந்த முதுமையில், வாழ்க்கையின் எல்லையை எட்டவைக்கும். தசாபுக்தி அந்தரங்கங்கள், அந்தந்த காலத்தில் உரிய பலாபலன்களை நிகழ்த்திவிடும். சனியின் பலனும் அதை ஒட்டியே நிகழும். சந்திர சாரப்படி சொல்லும் பலனை மிகைப்படுத்திக் கூறுவது சரியல்ல. சுதந்திரமாகப் பலன் அளிக்கும் தகுதி அதற்கு இல்லை. உலகம் தோன்றிய நாள் முதல், விண்வெளியில் ஒரு வரையறையுடன் உலவிக்கொண்டிருக்கும் கிரகங்கள், அவரவர் ராசிகளில் இருந்து மாறுபட்ட இடங்களில் தென்படவே செய்யும். உடனே அதற்கு முன்னுரிமை அளித்து, அதன் பலன்தான் நடைமுறைப்படுத்தப்படும் என்ற முடிவுக்கு வருவது, ஜாதகப் பலனைப் பொய்யாக்கி விடும்.

தசாநாதன், புத்திநாதன், அந்தர நாதன் ஆகியோர் ஒருவனது வாழ்வை முடித்துவைக்க இயலாமல் போனால், சனி எச்சரிக்கையுடன் செயல்பட்டு முடித்து விடுவான் என்ற தகவல் ஜோதிடத்தில் உண்டு. (நிஹந்தா பாபக்ருச்சனி:). ஆயுள் முடியும் வேளையில் அவன் செயல்படுவான். மாறாக, சனியின் செயல்பாட்டால் ஆயுள் முடிந்துவிடும் என்று நினைக்கக் கூடாது. ஒருவனது ஆயுள், தாயின் கர்ப்பத்தில் அவன் இருக்கும்போதே, நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. எனவே அவனது ஆயுளை முடித்துவைக்கும் வேலை சனி பகவானுக்கு இல்லை!

அதேபோல், சனி சாரத்தின் பலனையே இறுதி முடிவாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அங்கும் தசாபுக்தி அந்தரங்கங்களின் பலன், சனி சாரத்துடன் இணைந்து, சில மாறுதலுக்கு உட்பட்டு அனுபவத்துக்கு வரும்!

அமாவாசை தர்ப்பணத்தின்போது, அன்றே நனைத்து உலர்த்திய மடி வஸ்திரத்தைதான் அணிய வேண்டுமா அல்லது ஏற்கெனவே சலவை செய்த வஸ்திரத்தையோ புது வஸ்திரத்தையோ அணிய வேண்டுமா?

- வி.வெங்கட்ராமன், செகந்திராபாத்-9

முதல் நாள் நனைத்து காய்ந்த வஸ்திரத்தைப் பயன்படுத்தலாம். அன்றே நனைத்துக் காய வைத்ததையும் பயன்படுத்தலாம். சில நொடிப்பொழுதுகளில் நனைத்துக் காய வைக்கும் வசதி இன்று இருக்கிறது!

சலவை செய்தவை பளிச்சென்று இருக்கும்; ஆனால் மடி அல்ல. பளிச்சென்று இருப்பது வேறு, தூய்மை வேறு. கோடியாக இருந்தாலும் நனைத்துக் காய வைத்தால் மட்டுமே மடியாக மாறும். வஸ்திரம் உருவாகும் வேளையில் சில பொருட்களைப் பயன்படுத்துவார்கள். உதாரணமாக 'கஞ்சி’ போட்டு துணியின் தோற்றத்தை வசீகரமாக்குவது உண்டு. இதை மனதில் கொண்டு, சிராத்த தினங்களில் கோடியை நனைத்து உலர வைத்துப் பயன்படுத்தினார்கள் முன்னோர்கள்.

பளிச்சென்று இருப்பது... அதாவது, ஆங்கிலத் தில் சொல்லும் 'க்ளீன்’ என்பது வேறு; சாஸ்திரத்தில் சொல்லும் மடி என்பது வேறு. அப்பழுக்கற்றுத் தூய்மையாக இருப்பது 'க்ளீன்; வஸ்திரத்தை உடுக்கும் தகுதியை நிறைவு செய்வது மடி. யதார்த்தத்துடன் சொல்வதானால்... நனைத்துக் காய வைத்த வஸ்திரம், மடியுடனும் உடம்போடு இணைந்து உடுத்தும் பாங்குடனும் திகழும்!

நாம ஜபம் எழுதிய காகிதங்களைச் சுருட்டிக் கோக்கப்பட்ட மாலைகளை, தெய்வங்களுக்கு அணிவிக்கலாமா?

- கே.பரமேஸ்வரன், வள்ளியூர்

பக்தி முற்றிப்போனால், சூழலை மறந்து எதையும் செய்வான் பக்தன். அதை எல்லாம் பணிவிடைகளில் ஒன்றாகச் சேர்த்துக்கொண்டால், முன்னோர் பரிந்துரைத்த தரமான பணிவிடை நியதிகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துபோகும். பக்தி முற்றிப்போகும் பக்தன் ஒருவனின் மனம், இறைவனில் ஒன்றியிருப்பதால், அவனது செயல் பாடுகள் அவனையும் அறியாமல் நிகழும்.

நமக்கு எது இன்பத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்குமோ அதைத்தான் பணிவிடையில் சேர்க்க இயலும். ஐம்புலன்களையும் ஈர்க்கும் பொருட்கள் மட்டுமே பணிவிடையில் தென்படும்.

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

நாம ஜபம் எழுதியிருப்பதால்,அதை உயர்ந்ததாக நாம் எண்ணலாம். நாமஜபம் என்பது சொல்லில் இருக்க வேண்டும்;ஏட்டில் இருந்தால் போதாது. நம் மனம் தரமான இன்பத்தைத் தேடும். அப்படியிருக்க, இறைவனுக்கு ஏட்டுச் சுரக்காயை அளிப்பது சரியில்லை. காகிதத்தில் எழுதிப் படிப்பது என்பது, குறிப்பிட்ட மந்திரத்தை மனதில் உள்வாங்கிக் கொள்ள உதவும்; அவ்வளவே! மற்றபடி, மனதிலும் வாக்கிலும் தென்பட வேண்டிய நாம ஜபத்தை காகிதத்தில் இறக்கி வைப்பது சரியா? சிந்தியுங்கள்!

மணமகனைவிட மணப்பெண் வயதில் குறைந்தவளாக இருக்க வேண்டும் என்பது ஏன்?

- வி.ஜி.சத்தியநாராயணன், சென்னை-61

  திருமணம் என்பது இனப் பெருக்கத்துக்காக மட்டும் நிகழும் சடங்கு அல்ல. இல்லறத்தில் இருவரும் இணைந்து அறத்தை நடை முறைப்படுத்தி, இன்பத்தை முழுமையாக சுவைத்து மகிழ்ந்து, நல்ல வாரிசுகளை வார்த்தெடுப்பது சிறப்பு என்ற நோக்கிலேயே பெண் வயது குறைவாக இருக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம் (...அனன்யபூர்வாம்யவீயஸும்).

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

திருமணத்துக்கு... பெண் 17 வயதையும்; ஆண் 25 வயதையும் எட்டவேண்டும். இப்படிப்பட்ட தம்பதியின் இணைப்பு, ஆரோக்கியம், மகிழ்ச்சி, குழந்தைச் செல்வம் ஆகியவற்றில் நிறைவைத் தரும் என்று ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் (பூர்ணஷோடசவர்ஷாஸ்த்ரீபஞ்சலிம்சேன...). 17 வயதில் கர்ப்பம் ஏற்கும் வளர்ச்சியை அடைகிறாள் பெண். ஆண், 25-வது வயதில் முதிர்ச்சியடைந்த திறமான சுக்லத்தைப் பெற்றிருப்பான். ஆண்-பெண் இருவருக்கும் வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வு இருக்கும் என்கிறது ஆயுர்வேதம். குறிக்கோளை மாற்றிக்கொண்டால், வயதில் பெரியவளான பெண்ணையும் ஏற்கலாம். அதேநேரம், வாரிசுகளில் தென்படும் குறையையும் ஏற்கவேண்டி வரும். காலப்போக்கில் திருப்தியில்லாத நிலையும் உருவாகலாம்! ஆக, பண்பைக் கட்டிக் காக்கும் பழைய நடைமுறைக்கு என்றும் மவுசு உண்டு!

- பதில்கள் தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism