Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

Published:Updated:
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

த்திரட்டாதி நட்சத்திரத்தை, 'உத்திரப்ரோஷ்டபதா’ என்கிறது வேதம். அதன் தேவதை அஹிர்புத்னியன். குறை இல்லாத இயல்பு, முதல் படைப்பில் தோன்றியவர் என்கிற பெருமை உண்டு. தனது ஆற்றலில் உலகம் முழுதும் பரவியிருப்பவர். தேவர்கள், மனிதர்கள்- இவர்களுக்குள் மிக உயர்ந்தவர். வேள்வியில் ஈடுபடும் வேதம் ஓதுபவர்களும், உத்திரப்ரோஷ்டபதா நட்சத்திரமும் இவரை எப்போதும் வணங்கி வழிபடுகிறார்கள்.

நான்கு உருவங்களை உள்ளடக்கிய நட்சத்திரம் இது. வேள்வியில் தோன்றும் இந்த தேவதை, உத்திரட்டாதியுடன் இணைந்து, வேள்வித் தலைவனின் வேண்டுகோளை நிறைவு செய்து மகிழ வைக்கும் என்ற தகவல் வேதத்தில் உண்டு. வேதம் நட்சத்திர வேள்வியை அறிமுகம் செய்தது. வேள்வியில் கலந்து வேண்டுவன அளிக்கும் தகுதியும் தேவதையுடன் இணைந்த நட்சத்திரத்துக்கு உண்டு. கிரகங்களுடன் இணைந்து தனி மனிதனின் இன்ப - துன்பங்களை வரையறுக்கும் தகுதியும் உண்டு. சந்திரன் மறைந்திருக்கும் வேளையில் உலகுக்கு ஒளியூட்டி உதவுவதும் உண்டு. நட்சத்திரத்தைக் கொண்டு பெயர் வைக்கும் முறை பண்டைய நாளில் உண்டு. பிறந்த குழந்தையின் காதில் அவனது நட்சத்திரத்தை ஓதுவது உண்டு. மனித இனத்துக்கு ஜோதிடத்துடனான இணைப்பு, நட்சத்திரம் வாயிலாக இருப்பதை தகப்பன் உறுதி செய்வான்.

மீன ராசியில் முழுமையாகப் பரவியிருக்கும் நட்சத்திரம் இது. ராசிக்கு அதிபதி குரு. சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய நால்வரும் 4 பாதங்களில் இணைந்து கர்ம வினையின் பயனை வெளியிட கிரகங்களுக்கு உதவுவர். பண்பாடும், செல்வாக்கும், திறமையும், சுறுசுறுப்பும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவனிடம் பளிச்சிடும் என்கிறது ஜோதிடம். முதலில் சனி தசையை சந்திப்பான். இந்த தசை 19 வருடங்கள் நீண்டிருக்கும். பூசத்துக்கும், அனுஷத்துக்கும் அது பொருந்தும். ராசி புருஷனின் கர்மம், லாபத்துக்கு பொறுப்பாக இருப்பவர் சனி.

தொழிலில் நிரந்தரம், செழிப்பை உறுதி செய்வார். புக்தியிலும் அந்தரத்திலும் மற்ற கிரகங்களுடன் இணைந்து, பலதரப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்து, தொழில் துறையில் ஏற்றம் பெறச் செய்து, வாழ்க்கையின் எல்லையை எட்ட உதவுவார். சனி துயரத்தை அளிப்பவர் என்ற வாதம் ஜோதிடக் கண்ணோட்டத்தில் தவறு. அவர், உயர்வுக்கு ஊக்கம் அளித்து பெருமைப்படுத்தவும் செய்வார்.

லோகாயத வாழ்க்கையில் பெரும்பங்கு வகிப்பவர் களில், இந்த மூன்று நட்சத்திரத்தை உடையவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதைக் காண லாம். தொழில்மயமாக மாறி வளரும் உலகுக்கு, இவனது ஒத்துழைப்பு வெற்றிக்கு உதவும். சிந்தனை உழைப்புடன் இணையும்போது, முழுப் பலனை எட்டவைக்கும். செயல்பாடு மனிதனின் இயல்பு. அதை செம்மைப்படுத்த சனி பகவானின் ஒத்துழைப்பு தேவைப்படும்.

27 நட்சத்திரங்களில்... 9-ஆல் வகுக்கப்பட்ட மூன்று 9 வரிசைகளில், எண்ணிக்கையில் ஒப்பான நட்சத்திரத்துக்கு 'ரஜ்ஜு’ என்று பெயர் உண்டு. முதல் 9-ல் முதல் நட்சத்திரம் அச்வினி. இரண்டாவது மற்றும் மூன்றாவதில் முதல் நட்சத்திரங்கள் முறையே மகம், மூலம். ஆக அச்வினி, மகம், மூலம் ஆகிய மூன்றும் ரஜ்ஜுவாகக் கருதப்படும். முதல் 9-ல் எட்டாவது நட்சத்திரம் பூசம். இரண்டாவது மற்றும் மூன்றாவதில் 8-வது நட்சத்திரமாக இருப்பவை அனுஷமும் உத்திரட்டாதியும். எட்டாவது என்ற எண்ணிக்கை நட்பையும் குறிக்கும் (மைத்ரம்). ராசியில் 8-வது இடம் ஆயுளையும் குறிக்கும். அழிவும் ஆக்கமும் உண்டு.

'மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் - இந்த ரஜ்ஜுவில் செவ்வாய் அதிபதியாக இருப்பார். பரணி, பூரம், பூராடம் - இந்த ரஜ்ஜுவில் சுக்கிரன் அதிபதியாக இருப்பார். பரணி 2-வது நட்சத்திரம். மிருகசீர்ஷம் 5-வது நட்சத்திரம்.

'2’ குடும்பம், வாக்கு போன்றவற்றை வரையறுக்கும். '5’ பூர்வபுண்ணியம், சிந்தனைச் செல்வம் ஆகியவற்றை வரையறுக்கும். '8’ ஆயுள் ஆபத்து, மனக்கசப்பு, துயரம் ஆகியவற்றை வரையறுக்கும். ஆசையில் அளவு கடந்த ஆர்வம், சிந்திக்காமல் செயல்படும் இயல்பு, கீழ்த்தரமான செயல் களில் ஈடுபடுவதில் தயக்கமின்மை ஆகியன சுக்கிரன், செவ்வாய், சனி ஆகிய மூன்று கிரகங்களால் நிகழ வாய்ப்பு உண்டு. தாம்பத்தியத்தில் இணைய விரும்பும் இருவரில் இவை மேலோங்கி இருந்தால், இன்பத்தை விட துன்பத்தைச் சந்திக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். இருவரது நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரனாகவோ, சனியாகவோ, செவ்வாயாகவோ இருந்தால்... அவர்கள் இயல்பில் இந்த மூன்றும் கலந்திருந்தால், இடையூறைச் சந்திக்க வாய்ப்பு உண்டு. ஆகவே, ரஜ்ஜுவைத் தவிர்த்தனர். கேரள மக்கள் குறிப்பாக இம்மூன்று ரஜ்ஜுவை மட்டும் 'மத்யம ரஜ்ஜு’ என்று பெயர் சூட்டி ஒதுக்கி விடுவர். நேரடி சிந்தனையை பாதித்து, பிடிவாதமாக செயல்பட வைத்து, தம்பதிகளில் பிரிவு- சண்டைச் சச்சரவு தோன்றக் காரணமாகிவிடும் என்பதால், பொருத்தத்தில் ரஜ்ஜுவுக்கு முதலிடம் அளித்தார்கள்.

பரணியும் அனுஷமும், பூசமும் பூராடமும், பூரமும் உத்திரட்டாதியும். மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் - இவற்றில் ரஜ்ஜுவுடன் வேதையும் ஷஷ்டாஷ்டகமும் சேர்ந்து இருப்பதால், விலக்க வேண்டிய பொருத்தத்தில் ரஜ்ஜுவும் வேதையும் ஷஷ்டாஷ்டகமும் சேர்ந்துவிட்டது. 6, 8 ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத ஸ்தானங்கள். வேதையிலும் ஷஷ்டாஷ்டகம் இணைந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆகையால் தொடர்பை உறுதி செய்ய முற்படும் பொருத்தங்களில், தொடர்பை வெட்டிவிடும் பொருத்தங்கள் ஏற்கத் தகுதியற்றனவாக ஆகிவிடுகின்றன.

ரஜ்ஜு, வேதை, ஷஷ்டாஷ்டகம் போன்ற பொருத்தங்கள் பொருள் படைத்தவை. நட்சத் திரத்துக்கு மட்டுமாக பொருள் சொல்லாமல், நட்சத்திர வரிசை எண், அதன் அதிபதிகள், அவர்கள் அமர்ந்த ராசிநாதனின் ஸ்தானம் (வீடு) அத்தனையும் சேர்த்து நட்சத்திரப் பொருத்தத்தில் தென்படுவதால், முனிவர்களது பொருத்தப் பகுதியானது பொறுப்புள்ள செயல் என்று புலனாகிறது. பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியன வாழ்க்கையில் ஆதாரத்தை வரையறுப்பதால் பெருமைபெற்று விடுகின்றன. ஆக்கலும் அழித்தலும் சனிபகவானிடம் இருக்கும். வாழ்வை செம்மையாக்கவும் வேண்டும்; துயரத்தை அழிக்கவும் வேண்டும்.

பத்துப் பொருத்தங்கள் அத்தனை யிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நட்சத்திரத்தின் தொடர்பு இருக்கும். ராசி, ராசிநாதன், வசியம் என்ற மூன்று பொருத்தங்களில் நட்சத்திரங்கள் ராசி வழியாக பலன் அளிக்கும். மற்ற 7 பொருத்தங்களில் நட்சத்திரங்கள் நேரடியாகப் பங்கு பெறும். தள்ள வேண்டிய பொருத்தங்கள் ரஜ்ஜு, வேதை, ஷஷ்டாஷ்டகம் ஆகியன; ஏற்க வேண்டியவை மற்ற ஏழு பொருத்தங்கள் என்ற பாகுபாடும் உண்டு. பொருத்தங்கள் அத்தனையும் சான்றில்லாத நம்பிக்கையில் ஏற்பட்ட முடிவல்ல என்பது, பொருத்தத்தை ஊடுருவி ஆராய்ந்தால் தெரியவரும். இணைப்பில் ஏற்படும் இன்பத்தைச் சுவைத்து மகிழ பொருத்த சாஸ்திரம் பயனுள்ளதாக இருக்கும். அதற்கு அடிப்படை நட்சத்திரங்கள் என்பதால், ஜோதிடத்தில் அதன் பெருமை உயர்வாக இருக்கிறது.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

தேவதைகள் குடியிருக்கும் இடம் நட்சத்திரம் என்கிறது வேதம் (தேவகிருஹாவை நக்ஷத்திராணி). மனிதன் பிறக்கும் வேளையில், தேசத் துடன் நக்ஷத்திரத்தின் இணைப்பு நிகழ்வதால், அதன் தொடர்பு வாழ்நாள் முழுவதும் இருக்கும். ஒருவன் தான் செய்யும் கடமைகளில் தன்னை அறிமுகப்படுத்த நட்சத்திரத்தைப் பயன்படுத்துகிறான். கடவுளுக்குப் பணிவிடை செய்யும் தருணத்தில் தன்னை இணைத்துக் கொள்ள நட்சத்திரத்தைப் பயன்படுத்துகிறான். பிரபஞ்சத்துடன் அவன் இணைப்பை நட்சத்திரம் வரையறுக்கிறது.

நட்சத்திர வழிபாடு இயற்கை வழிபாடாக... நம்முள் நட்சத்திர வடிவில் உறைந்திருக்கும் இறைவன் வழிபாடாக மாறுகிறது. வெளியே இருக்கும் இறையுருவத்தை மனதில் பதிய வைத்து வழிபட வேண்டியிருக்கும். பிறக்கும்போது காலத்துடன் இணைந்து நம் உள்ளத்தோடு ஒட்டிக்கொண்டிருக்கும் நட்சத்திர வழிபாடு சுலபமானது. எந்த இக்கட்டான சூழலிலும், உள்ளே இருக்கும் நட்சத்திர தேவதையை நினைக்க இடையூறு இருக்காது.

சொல்வளம், சுவையை சுவைத்து மகிழ்தல், மழலைச் செல்வங்களுடன் பெருமிதம் அடைதல், எதிரிகளை முறியடித்தல், கடமைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் ஆகிய அத்தனையும் தென்படும் என்கிறார் வராஹமிஹிரர். அரசாங்க மரியாதையை ஏற்றல், எண்ணிக்கையில் அதிகமான மக்கள் செல்வம், கொடை வழங்கும் பாங்கு, தண்ணீரில் பயம் ஆகியன இந்த நட்சத்திரத்தில் பிறந்தவனிடம் இருக்கும் என்கிறார் பராசரர். முதல் பாதத்தில் பிறந்தவன் அரசன் அல்லது தலைவனாகத் திகழ்வான். 2-வதில் பிறர் சொத்தை தனதாக்கிக் கொள்வான். 3-வதில் மழலைச் செல்வங்களை பெற்று மகிழ்வான். 4-வதில் துயரம் தொடாத வாழ்க்கை யைத் தழுவுவான் என்று பிரஹத்ஸம்ஹிதை வரையறுக்கும். பண்போடு பழகுவான். வள்ளலாகத் திகழ்வான். அறிவும் ஆராய்ச்சியும் இருக்கும். செல்வச்சீமானாக வளைய வருவான் என்கிறது ஜாதக பாரிஜாதம்.

கால புருஷனின் காலடியை, அதாவது பாதத்தைக் குறிக்கும் மீனம் ராசி. அந்த அவயவத்தின் பெருமை சிறுமைகளை வரையறுக்கும் இந்த நட்சத்திரம். பாதங்கள் நம்மை நடமாட வைக்கிறது. பாதத்தின் வலுவில் உடம்பு லாவகமாக அசைந்து செயல்படுகிறது. இரண்டு தாரைகளை உள்ளடக்கியது இந்த நட்சத்திரம். அசையாத நட்சத்திரம். அதாவது, ஸ்திரமான நட்சத்திரம். அரசர்களது பட்டாபிஷேகம், அரசர்களது விழாக்கள், சமுதாயத்தில் தோன்றும் ஈதிபாதைகளுக்கு அழிவை ஏற்படுத்தும் சாந்தி கர்மா, செடி-கொடிகள், மரங்கள் நட்டு வளர்த்தல், நகரம் கிராமம் ஆகியவற்றை உருவாக்குதல் மற்றும் விவசாயம்- பயிர்த் தொழில் செழிக்க இந்த நட்சத்திரத்தின் இணைப்பு உதவும் என்கிறது ப்ரஹத் ஸம்ஹிதை. சமுதாயத்துக்கு பயனளிக்கும் விவசாயம், வாணிபம், தரமான பொருள்களின் உற்பத்தி, பட்டுவாடா, குடிநீர், பண்டமாற்று, விளையாட்டு, வேடிக்கை, காலட்சேபம் போன்றவற்றில் இதன் இணைப்பு சிறக்கும் என்கிறார் பராசரர்.

கலக்கமுற்ற மனம், திறமை வாய்ந்தவன், தலை வன், கோபத்தால் காரியத்தை கெடுப்பவன், மாறி மாறி சிந்தனையில் ஆழ்ந்து செயல்பாட்டைத் தள்ளிப்போடுபவன் என்று முதல் பாதத்துக்கு பலன் சொல்லும் பலசாரசமுச்சயம். மெலிந்த உடல், கெட்டிக்காரன், எல்லாம் தெரிந்தவன், நல்ல எண்ணம் உடையவன், நல்லவற்றை ஏற்று செயல்படுத்துபவன் என்று 2-வது பாதத்துக்கு பலன் சொல்லும். 3-வதில் சூதுவாது, சண்டை- சச்சரவில் நாட்டம், 4-வதில் எல்லோரையும் பகைத்துக்கொள்வான். அதனாலேயே வெற்றியை எட்ட ஏங்குவான், அப்படி இருந்தாலும் தனக்குக் கிடைத்த பொருளில் ஒரு பங்கை பிறருக்கு அளித்து மகிழ்வான் என்கிறது பலசாரசமுச்சயம்.

அம் அஹயே புத்னியாய நம: என்று சொல்லி 16 உபசாரங்களைச் செய்யலாம். 'உத்தர ப்ரோஷ்டபதா நக்ஷத்ர தேவதாயை நம:’ - என்று சொல்லி இரண்டு கைகளிலும் புஷ்பங்களை அள்ளி இறையுருவத்தில் சொரிந்து, தண்டனிட்டு வணங்கி வழிபடலாம். 'அஹிர்புத்னிய: ப்ரதமான’ என்ற மந்திரம் சொல்லி பணிவிடை செய்யலாம். 'நமோஸ்து அஹயெபுத்னியாய நமஸ்த ருத்ரரூபிணே. நமஸ்தெ கருணாமூர்த்தே பாஹிமாம் பரமேச்வர’ - என்ற செய்யுளைச் சொல்லி வழிபடலாம்.

எந்தப் பணிவிடையும் மனதுடன் இணையும் போது பலனளித்து விடும். எப்போதும் சுணக்கமின்றி நடைமுறைப்படுத்த, பூஜைகள் சுருக்கமாக இருப்பது சிறப்பு. 'விரிவான பூஜையில் விரிவான பலன்’ என்று பலனில் ஏற்றக்குறைவு இருக்காது!

- வழிபடுவோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism