Published:Updated:

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்
##~##
'கி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ருஷ்ண ஜயந்தி, இந்தியாவில் வடக்கு- தெற்கு பேதமில்லாமல் எங்கும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறதே! அப்படி, அதில் என்ன சிறப்பு இருக்கு?' என்று, அமெரிக்காவில் படித்து வளர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் என்னிடம் கேட்டார்.

'தம்பி! திருமாலின் தசாவதாரங்களில் முழுமைபெற்ற அவதாரம், கிருஷ்ண அவதாரம்தான். அழகு, அறிவு, வீரம், ஆற்றல் என எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்ட அவதாரம் அது. இரண்டாயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த தமிழ் இலக்கிய வரலாற்றில், ஸ்ரீகண்ணனின் அருட்பெருமையைப் போற்றிப் பாடாத புலவர் யார்? சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள் முதல் நம்மோடு வாழ்ந்த  மகாகவி பாரதி, கவியரசு கண்ணதாசன் வரை கண்ணனிடத்தில் மயங்காதவர் யார்?' என்றேன்.

'கண்ணன் பிறந்தது வடநாட்டில்தானே?' என்று இன்னொரு அன்பர் சந்தேகம் எழுப்பினார்.

'ஆமாம். அவன் பெயர் கண்ணன்; ஊர் வடமதுரை; யமுனை ஆற்றங்கரையில் வளர்ந்தவன்; துவாரகைக்கு அரசனாக வாழ்ந்தவன். ஆனாலும், தமிழகம் முழுவதும் கோகுலாஷ்டமி திருநாளை கிராம மக்கள் பெருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். ராமானுஜருக்குப் புகழ் கிடைத்த திருக்கோஷ்டியூரில் வாழும் மக்கள்... தங்கள் இனத்தில், இல்லத்தில் கண்ணன் பிறந்ததால் ஆடிப்பாடி மகிழ்ந்து எண்ணெய் தேய்த்துக் குளிக்க, அதனால் நந்தகோபாலன் மாளிகையே சேறாக மாறிவிட்டதாம். இதனை,

'வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர்;
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தனில்
எண்ணெய் சுண்ணம் எதிர்எதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்தள றாயிற்றே...’

(பெரியாழ்வார் திருமொழி 1:1:1)

என்று பெரியாழ்வார் தம் பாசுரத்தில் சொல்லோவி யமாகப் படைத்துக் காட்டியுள்ளார்' என்று நான் விளக்கிச் சொன்னபோது, எல்லோரும் ரசித்தார்கள்.

'ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பகவத்கீதையை அர்ஜுன னுக்குச் உபதேசிக்கும்போது மட்டும்தான் விஸ்வரூபம் எடுத்தாரா?' என்று வேறு ஒருவர் மெதுவாக என்னிடம் இன்னொரு சந்தேகத்தைக் கேட்டார்.

'இல்லை; அதற்கு முன்பே துரியோதனனிடத்தில் தூது சென்றபோது, அந்தக் கொடியவர்கள் கண்ணனைக் கொல்ல முயன்றார்கள். அப்போதும் விஸ்வரூபம் எடுத்தார். கொடியவர்களாகிய கௌரவர்களைப் பணியவைக்க ஒரு விஸ்வரூபம்; அர்ஜுனன் போன்ற நல்ல வீரனை மன ஊக்கம் கொள்ளவைக்க ஒரு விஸ்வரூபம்; தானத்தையே தானம் தந்த கர்ணனுக்காக, அவனது கடைசி நேரத்தில் ஒரு விஸ்வரூபம்..!' என்று நான் சொல்ல...

'உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காது என்பது வல்லவன் வகுத்ததடா'

என்ற கானம் காற்றிலே தவழ்ந்து வந்து, செவியை இனிக்கச் செய்தது.