Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தே
சத்தை ஆள்கின்றவர்களுக்கு நண்பர்கள் பற்றியோ, உறவினர்கள் பற்றியோ அதிக சிந்தனைகள் இருக்காது. மனைவி, குழந்தைகள் குறித்தும்... அதாவது மகாராணி, இளவரசர், இளவரசி இவர்கள் குறித்தும் சிந்திக்கமாட்டார்கள். அப்படியானால், தனது தேசத்தில் வாழும் மக்களைப் பற்றியும், அவர்களுக்கான வாழ்க்கைத் தரம் பற்றியும் யோசித்துக்கொண்டு இருப்பார்களா என்று கேட்டால், அதுவும் இல்லை. மன்னர் பெருமக்களின் முழுச் சிந்தனையும் எப்போதும் எதிரிகள் குறித்தே இருக்கும்.

ஒரு தேசத்தைக் கட்டிக் காபந்து செய்வது அவ்வளவு சுலபம் அல்ல. எப்போது வேண்டுமானாலும், எந்த நாட்டில் இருந்து வேண்டுமானாலும் தங்கள் தேசத்தின் மீது படை திரட்டிக்கொண்டு வரக்கூடும் என்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவதிலேயே மன்னர்களின் நேரம் கழியும். மன்னரின் சிந்தனைப்போக்குக்கேற்ப அமைச்சர் பெருமக்களும் தளபதிகளும் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, செவ்வனே தேசத்தைக் காத்து வந்தார்கள்.

அப்படித்தான், சோழ தேசத்திலும் மிகப் பெரிய படைகள் ஆங்காங்கே இருந்தன. தலைநகரான தஞ்சாவூரைச் சுற்றிலும், கடலோரப் பகுதியான நாகப்பட்டினம் துறைமுகம் அருகிலும், இந்தப் பக்கம் திருச்சிராப்பள்ளியிலும், அந்தப் பக்கம் வேதாரண்யம் பகுதியிலும் என பல திசைகளிலும் படைவீரர்கள் முகாமிட்டிருந்தனர்.

ஆலயம் தேடுவோம்!

தஞ்சாவூருக்கு அருகில் அம்மாப்பேட்டை எனும் கிராமம் உண்டு. அந்தக் கிராமத்துக்கு அருகிலும் சோழப் படைவீரர்கள் முகாமிட்டிருந்தனர். சாப்பிடுவது, தூங்குவது என இல்லாமல், சதா காலமும் வில் வித்தையிலும் வாள் வீச்சிலும் பயிற்சி எடுத்துக் கொண்டே இருந்தார்கள். மீதம் இருக்கிற வேளையில், மனத்தை ஒருமுகப்படுத்துவதற்கும், இறையருளைப் பெறுவதற்கும் தோதான ஆலயம் எதுவும் அருகில் இல்லை என்பது அந்த வீரர்களின் ஆதங்கம்.

இது அமைச்சர்களின் மூலம் அரசனுக்குத் தெரிவிக்கப்பட... உடனே, அங்கே சிவலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து, ஆலயம் அமைக்க உத்தரவிட்டான் மன்னன். தினமும் காலை, மாலை இருவேளையும் அங்கே பூஜைகளும் அபிஷேகங்களும் நடத்தப்பட்டன.

அதிகாலையில் எழுந்து, அருகில் உள்ள குளத்தில் குளித்துவிட்டு, சிவனாரை வணங்கி னார்கள் படைவீரர்கள். பிறகு, வாள் பயிற்சியில் ஈடுபட்டார்கள். வயிறாரச் சாப்பிட்டு, நன்றாகத் தூக்கம் போட்டார்கள். பிறகு, மாலையில் மீண்டும் குளத்தில் குளித்துவிட்டு, சிவபூஜை செய்து, மனத்தை ஒருமுகப்படுத்தும் பயிற்சியில் ஈடுபட்டார்கள்.

ஆலயம் தேடுவோம்!

சோழப் படைவீரர்கள் தங்கியிருந்த இடத்தில் எப்போதும் புலிக்கொடி பறந்தபடியே இருக்கும். அதனால், அம்மாப்பேட்டைக்கு அருகில் உள்ள அந்த இடம் 'புலிக்கொடி’ என்றே அழைக் கப்பட்டது. பின்னாளில் அந்த ஊர் புளியக்குடி என மருவியதாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு.

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டைக்கு அருகில் உள்ளது புளியக்குடி கிராமம். சோழ வீரர்கள் வணங்கிய அந்தக் கோயில் இன்றைக்கும் இருக்கிறது. அப்போது சிறிய ஆலயமாக இருந்தது அடுத்தடுத்த காலகட்டங்களில் விஸ்தரிக் கப்பட்டது. சந்நிதிகள் அமைக்கப்பட்டு, பிராகார மண்டபமும் மதிலும் கட்டப்பட்டன. ஸ்வாமிக்கு ஸ்ரீகயிலாசநாதர் என்றும், அம்பாளுக்கு ஸ்ரீகற்பூரவல்லி என்றும் திருநாமங்கள் சூட்டப்பட்டதாகச் சொல்கின்றனர் ஊர்க் காரர்கள்.

வெற்றியையும் மனோதைரியத்தையும் தரும் தலமாகத் திகழும் புளியக்குடி ஸ்ரீகயிலாச நாதர் கோயிலுக்கு வந்து தரிசிக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்தானே?! வந்தால், சிதிலமடைந்து, சுவர் விழுந்து, புல்லும் முள்ளும் முளைத்த கோயிலைப் பார்த்துக் கதறி விடுவீர்கள். கும்பாபிஷேகம் நடந்து, சுமார் 100 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. வழிபாடுகளே இல்லாமல், பூஜைகளும் நடைபெறாமல் இருந்த ஆலயத்தைச் சில வருடங்களுக்கு முன்புதான் மெள்ளச் சீர்படுத்தியிருக்கிறார்கள். சமீபத்தில் கோயிலில் பாலாலயம் செய்து, ஸ்ரீகயிலாசநாதர் நற்பணி மன்றம் அமைத்து, திருப்பணியில் ஈடுபட்டுள் ளனர், நல்ல உள்ளம் படைத்த அன்பர்களும் ஊர்க்காரர்களும்.

சிவ சந்நிதியில் கண்மூடி நின்றால், மனத்தில் இனம் புரியாத நிம்மதி பரவுவதையும், மனம் உள்ளே அமிழ்ந்து ஒருமுகப்படுவதையும் நன்றாகவே உணரமுடிகிறது. மிகுந்த சாந்நித்தியம் கொண்ட இறைவன், சோழ தேசத்தையே காத்தருளிய ஈசன் அல்லவா ஸ்ரீகயிலாசநாதர்! அம்பாள், நம் கண்ணே பட்டுவிடும் எனும் அளவுக்குக் கொள்ளை அழகு! அவளின் திருநாமம்- ஸ்ரீகற்பூரவல்லி. தமிழகத்தில் ஸ்ரீகற்பூரவல்லி எனும் திருநாமத்துடன் அம்பாள் காட்சி தரும் ஆலயங்கள் வெகு குறைவு.

பாடகச்சேரி மகான் ஸ்ரீராமலிங்க சுவாமிகள் இந்தத் தலத்தின் அருமையை உணர்ந்து, கோயில் திருப்பணிகளை ஆகம முறைப்படி செய்துள்ளதை சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர், ஊர்ப் பெரியவர்கள்.

ஆலயம் தேடுவோம்!

இத்தனை பெருமைமிக்க கோயிலில் கன்னிமூலை கணபதி, அழகு கொஞ்சும் ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீதுர்கை, ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆகியோரும் அழகுற தரிசனம் தருகின்றனர். இங்கேயுள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் பேரருளால் கல்வியில் சிறந்து விளங்கி, இன்றைக்கு உயர் அதிகாரிகளாக, கை நிறைய சம்பளத்துடன் வெளியூர்களில் பணிபுரியும் அன்பர்கள் பலர், இந்தக் கோயிலின் திருப்பணிகளில் பங்கெடுத்து வருகின்றனர்.

புலிக்கொடி பறந்த ஊரில், படைவீரர்கள் தங்கிய கிராமத்தில், ஸ்ரீகயிலாசநாதர் அருளாட்சி செய்கிற ஆலயத்தை பொலிவுறச் செய்வது, மனோதிடம் வேண்டுகிற நம் ஒவ்வொருவரின் கடமை அல்லவா?  வெற்றி பெற வேண்டும் எனத் தவிப்பவர்கள்தானே நாம்? அந்த வெற்றிக்குப் பக்கபலமாக இருந்து அருள்கிற ஸ்ரீகற்பூரவல்லி குடியிருக்கும் ஆலயம் சிதைந்து கிடக்கலாமா?

கல்வி ஞானத்தை அருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி குடி கொண்டிருக் கும் ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோயில் பொலிவுடன் திகழ வேண்டாமா? புத்தம் புது வஸ்திரங்கள் அணிந்து, ஊதுபத்தியின் நறுமணம் கமழ, வில்வமும் பூக்களும் கொண்டு அலங்கரிக்க... வேத கோஷங்கள் முழங்க பூஜைகள் நடந்தால்தானே ஊரும் செழிக்கும்; மனிதர்களும் சிறப்புறுவார்கள்!

பாடகச்சேரி சுவாமிகள் தரிசித்துச் சிலாகித்த ஆலயம், அவர் கைப்பட, அவரின் மேற்பார்வையில் திருப்பணிகள் செய்யப்பட்ட திருக் கோயில்... பூரணமாகச் சீரமைக் கப்பட வேண்டாமா? அப்படிச் சீரமைப்புப் பணியில் நம் பங்கும் இருந்தால், ஸ்ரீகற்பூரவல்லி சமேத ஸ்ரீகயிலாசநாதரின் பேரருளுடன் ஸ்ரீபாடகச்சேரி சுவாமிகளின் அருளையும் பெறலாமே!

புலிக்கொடி பறந்த புளியக்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீகற்பூரவல்லி கோயிலுக்கு நம்மால் இயன்றதைச் செய்வோம். அம்பிகையின் கடாட்சம் கிடைக்கப் பெறுவோம்!

படங்கள்: இ.ராஜவிபீஷிகா