Published:Updated:

சகல ஐஸ்வரியமும் அள்ளித் தருவார் அண்ணன் பெருமாள்!

புண்ணியம் சேர்க்கும் புரட்டாசி தரிசனம்!

சகல ஐஸ்வரியமும் அள்ளித் தருவார் அண்ணன் பெருமாள்!
##~##
நா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கை மாவட்டம் சீர்காழியில் இருந்து தெற்கில், சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அண்ணன்கோயில். சோழ நாட்டு 40 திவ்ய தேசங்களில், 11 தலங்களைக் கொண்ட திருநாங்கூர் திவ்ய தேசங்களின் தலைவாயிலில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். புராணங்கள் திருவெள்ளக்குளம் எனப் போற்றுகின்றன.

திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாளுக்கு இவர் அண்ணன் என்பார்கள். எனவே, அண்ணன்பெருமாள் என்று பெயர் வந்ததாம். அடியார்களுக்கு அருள்பாலிக்கும் அருளாளனாகத் திகழ்கிறார் இந்தப் பெருமாள். கிழக்குப் பார்த்த அற்புதமான ஆலயம். உள்ளே கிழக்கே திருமுக மண்டலமாக நின்ற கோலத்தில் அருள்கிறார் ஸ்வாமி ஸ்ரீநிவாச பெருமாள். 'திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக் குளத்துள் அண்ணா, அடியே னிடரைக் களையாயே’ என்று இந்தப் பெருமாளை வேண்டுகிறார் திருமங்கை ஆழ்வார். இவர், 10 பாசுரங்களால் இந்தப் பெருமாளை பாடியுள்ளார்.

மூலவருக்கு அருகிலேயே உத்ஸவ மூர்த்தியும் தரிசனம் தருகிறார். உத்ஸவரின் திருநாமம் - ஸ்ரீஅண்ணன்பெருமாள். உபய நாச்சியார்களுடன் இவர் சர்வ அலங்காரத்துடன் திருவீதியுலா வரும் அழகைத் தரிசித்துக்கொண்டே இருக்கலாம்.

இங்கே... ஸ்ரீஅலர்மேல்மங்கைத் தாயார் நின்ற திருக்கோலத்தில் கருணை பொங்கக் காட்சி தருகிறார். தாயார் சந்நிதியின் முன்மண்டபத்தில், குமுதவல்லி நாச்சியாருக்கு சந்நிதி உள்ளது. இங்கு குமுத மலரில் அந்தணர் ஒருவரால் கண்டெடுத்து வளர்க்கப்பட்டவள் குமுதவல்லி நாச்சியார். திருமங்கை மன்னனை, திருமங்கை ஆழ்வாராகத் திருத்திய நாச்சியார் இவள். இங்கு வந்து ஸ்ரீகுமுதவல்லி நாச்சியாரைத் தரிசித்தால், கெட்ட சகவாசம் உள்ள கணவன் திருந்திவிடுவான் என்பது ஐதீகம்!  

சகல ஐஸ்வரியமும் அள்ளித் தருவார் அண்ணன் பெருமாள்!

இந்தத் தலத்தில், ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் வெகு விசேஷம்! ஸ்ரீநிவாசபெருமாளுக்கு திருமணம் செய்துவைத்துப் பிரார்த்தனை செய்தால், திருமணத் தடை விலகும்; விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அற்புதமான கோயில்; எதிரே அழகிய தீர்த்தக் குளம். இந்தத் திருக்குளத்தை ஸ்வேத புஷ்கரணி என்பார்கள். எனவே, இந்தக் குளத்தை தமிழில் வெள்ளைக் குளம் என்றும் அழைக்கின்றனர்.  

முன்னொரு காலத்தில், சூரிய குலத்தில் தோன்றிய சுவேதன் எனும் இளவரசன், தன் ஒன்பதாம் வயதில் அகால மரணம் அடைவான் என்று ஜோதிட சாஸ்திரம் தெரிவிக்கவே, மன்னனும் அமைச்சர் பெருமக்களும் கலங்கிப் போனார்கள். வசிஷ்ட முனிவரிடம் சென்று முறையிட... அவர் இந்தத் தலத்தில் உள்ள திருக்குளத்தில் நீராடி, பெருமாளை நினைத்துத் தவமிருந்தால், மரணத்தை வெல்லலாம் என்று தெரிவித்தார். அதன்படியே இங்கு வந்த சுவேதன், இங்கேயுள்ள தாமரைகள் பூத்திருந்த திருக்குளத்தில் நீராடி, ஸ்ரீநிவாச பெருமாளை தினமும் வழிபட்டுத் தவமிருந்து வந்தான். இதில் மகிழ்ந்த பெருமாள், அவனுக்குத் திருக்காட்சி தந்ததுடன், அவனது மரண தோஷத்தை நிவர்த்தி செய்து அருளினார் என்கிறது கோயிலின் ஸ்தல புராணம்.

இந்தத் தலத்துக்கு வந்து, தீர்த்தக் குளத்தில் நீராடி அல்லது தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொண்டு, ஸ்ரீநிவாச பெருமாளையும் தாயாரையும் வணங்கித் தொழுதால், மரண பயம் விலகும்; நீண்ட ஆயுளுடன் நிம்மதியாக வாழலாம் என்பது ஐதீகம்!

திருமலைக்கு நிகரான தலம் இது. எனவே, திருமலைக்கு வேண்டிக்கொண்டு அங்கு செல்ல முடியாத அன்பர்கள், இங்கு வந்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்ளலாம். திருமலை- திருப்பதியில் நடைபெறுவது போலவே, புரட்டாசி மாதத்தில் வெகு பிரமாண்டமாக நடைபெறுகிறது பிரம்மோத்ஸவ விழா. இந்த வருடம் புரட்டாசி 2-ஆம் நாள் துவஜாரோகணம் துவங்கி... திருப்பதிக்கு நிகராகவே நடத்தப்படுகிறது, பிரம்மோத்ஸவ வைபவம். 5-ஆம் நாள்... இரவு கருட சேவையும் 10-ஆம் நாள் திருத்தேரும் மிகவும் விசேஷம்.

புரட்டாசி பிரம்மோத்ஸவ விழாவின்போது ஒருநாள்... ஒரேயருநாள் வந்து அண்ணன்பெருமாளைத் தரிசித்தாலும் போதும்... சகல ஐஸ்வரியங் களையும் தந்தருள்வார் பெருமாள் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

  - து.யோகேஸ்வரி
படங்கள்: ஜெ.ராம்குமார்