Published:Updated:

சங்கடங்கள் தீர்ப்பார் ஸ்ரீசந்தி பிள்ளையார்!

ஆனை முகனே சரணம்... சரணம்!

சங்கடங்கள் தீர்ப்பார் ஸ்ரீசந்தி பிள்ளையார்!
##~##
நெ

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ல்லைச்சீமை எனப் போற்றப்படும் திருநெல்வேலி நகரின் தேரோடும் வீதியில், தென்மேற்கு முனையில் அமைந்துள்ளது ஸ்ரீசந்தி விநாயகர் திருக்கோயில். அற்புதமான இந்தக் கோயிலுக்கு வந்து தங்கள் குறைகளைச் சொன்னால் போதும்... விரைவில் குறைகள் நீங்கும்; நல்லது நடக்கும் என்கின்றனர், நெல்லைவாழ் மக்கள்.

திருக்கயிலாயத்தில் சிவனாருக்கும் பார்வதிக்குமான திருமண வைபவத்தைத் தரிசிக்க ரிஷிகளும் முனிவர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் கூடியிருந்தனர். இதனால் வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்து... சமநிலையற்று இருந்தது.

உடனே அகத்திய மாமுனிவரை அழைத்த சிவபெருமான், 'தெற்கே சென்று உலகை சமநிலைப்படுத்துவாயாக!’ என அருளினார். 'அப்படி நான் சென்றுவிட்டால், தங்களின் திருமணக் கோலத்தைத் தரிசிக்க முடியாது போய்விடுமே!’ என வருந்தினார் அகத்தியர். அவரின் ஏக்கத்தையும் ஆசையையும் அறிந்துகொண்ட சிவனார், 'கவலை வேண்டாம்! தென்பொதிகையில் உனக்குத் திருமணக் கோலத்தைக் காட்டியருள்வேன்’ என ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.

சங்கடங்கள் தீர்ப்பார் ஸ்ரீசந்தி பிள்ளையார்!

அதன்படி தென்திசைக்கு வந்த அகத்திய முனிவர் நெல்லையம்பதியில் உள்ள ஸ்ரீதிருமூலநாதரை வணங்கித் தொழுதார். அப்படியே விநாயகப்பெருமானையும் வணங்கினார். அகத்திய முனிவர் வழிபட்ட திருமூலநாதரை, ஸ்ரீநெல்லையப்பர் ஆலயத்தில் இன்றைக்கும் தரிசிக்கலாம்.

அகத்திய முனிவர் வழிபட்ட விநாயகர்..? அவர்தான் நெல்லையப்பர் ஆலயத்தின் தேரோடும் வீதியில், சந்திப் பிள்ளையார் எனும் திருநாமத்துடன் அருள்பாலித்து வருகிறார்.

திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில், நெல்லையப்பர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது ஸ்ரீசந்தி விநாயகர் திருக்கோயில். இங்கே, அகத்தியரின் விக்கிரகத் திருமேனியையும் தரிசிக்கலாம்.

சந்திவிநாயகரை வணங்கினால் சங்கடங்கள் யாவும் தீரும் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள். புதிதாகத் தொழில் துவங்குவோர் இங்கு வந்து ஸ்ரீவிநாயகப் பெருமானுக்கு வெள்ளை நிற வஸ்திரம் சார்த்தி, அருகம்புல் மாலை அணிவித்து வணங்கினால், தொழிலில் லாபம் அதிகரிக்கும் என்கிறார்கள் அவர்கள்.

மாதந்தோறும் சதுர்த்தி நாளிலும், வருடந்தோறும் விநாயகர் சதுர்த்தி நாளிலும் இங்கு வந்து சந்திப் பிள்ளையாரைத் தரிசிக்கும் பக்தர்கள் ஏராளம்.

அண்ணனின் ஆலயத்தில் உள்ள தம்பியும் இங்கே விசேஷம்தான்! இங்கேயுள்ள முருகப்பெருமானுக்கு கந்த சஷ்டி விழாவும் தெய்வானைத் திருமண வைபவமும் சிறப்புற நடைபெறுகின்றன.  

- ச.காளிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்