. பு.துக்கோட்டையில், ஜட்ஜ் ஸ்வாமிகள் என்று போற்றப்படும் சத்குரு சதாசிவ பிரும்மேந்திராளின் அதிஷ்டானம் அமைந்துள்ளது என்பது தெரியும்தானே?! ஆரம்பத்தில், திருவாங்கூர் சமஸ்தானத்தில் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணி புரிந்தவர் சுவாமிகள். வழக்கு ஒன்றில், நிரபராதி ஒருவருக்குத் தண்டனை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட... மனம் வெறுத்து, பதவியைத் துறந்து, சந்நியாசம் மேற்கொண்டார் சுவாமிகள். பிறகு புதுக் கோட்டைக்கு வந்தவர் அங்கேயே தங்கி, பலருக்கும் அருளாசி வழங்கினார். அதை யடுத்து முக்தி அடைந்தபோது, இங்கே... அவருக்கு அதிஷ்டானம் அமைக்கப்பட்டது..
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள சுவாமிகளின் சீடர் ஸ்ரீஸ்வயம்பிரகாச பிரும்மேந்திர சுவாமிகள், புதுக்கோட்டையில் உள்ள நீதிபதிகளிடம் தெரிவிக்க... அவர்கள் அதிஷ்டானத்தை அற்புதமான கோயிலாக்குவதற்கு உதவிகள் செய்தனர். அதன் பின்னர், சேந்தமங்கலம் சுவாமிகளின் அருளுக்கும் அன்புக்கும் பாத்திரமான ஸ்ரீசாந்தானந்த சுவாமிகள், அதிஷ்டானத்தையும் ஆலயத்தையும் இன்னும் விரிவுபடுத்தினார். ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகப்பெருமான் ஆகியோரின் விக்கிரகத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார்.

1962-ஆம் வருடம், ஸ்ரீபுவனேஸ்வரி அம்பாளுக்கு விக்கிரகம் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினார். அன்று முதல் ஸ்ரீபுவனேஸ்வரி அம்பாளின் பேரருளால், இந்தத் திருவிடம்... ஸ்ரீபுவனேஸ்வரி கோயில் என்றே அழைக்கப்படுகிறது.

இந்தக் கோயிலில் அருளும் ஸ்ரீஅஷ்டதசபுஜ ஸ்ரீதுர்காதேவியும் வெகு பிரசித்தம். ராகுகால வேளையில், ஸ்ரீதுர்கைக்கு சிறப்பு வழிபாடு விமரிசையாக நடைபெறுகிறது. ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீவராஹர், ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீஹயக்ரீவர் ஆகியோர் அடங்கிய பஞ்சமுக ஆஞ்சநேயரையும் இங்கு தரிசிக்கலாம். 'அதிர்ஷ்டம் செய்தவர்கள், அதிஷ்டானத்துக்கு வந்து ஞானியைத் தரிசிக்க வருவார்கள்’ என்கிற ஸ்ரீமத் சாந்தானந்த சுவாமிகளின் அருள்வாக்குக்கு ஏற்ப, இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, தரிசித்துச் செல்கின்றனர். ஸ்ரீதட்சிண காளி, ஸ்ரீஐயப்ப ஸ்வாமி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீவிஸ்வகர்மா ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.

அம்பிகைக்கு முன்னே ஸ்ரீசக்கர மேரு அமைந்துள்ள இந்தத் தலத்தின் விசேஷங்களில் முதன்மையானது... ஸ்ரீபஞ்ச முக ஹேரம்ப மகா கணபதியின் விக்கிரகம்தான். அருகம்புல் மாலை அல்லது தேங்காய் மாலை சார்த்தி இவரை எந்த நாளில் வழிபட்டாலும், நம் வாழ்வில் உள்ள சங்கடங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்! கல்வியில் மேன்மை, இல்லறத்தில் இனிமை, தொழிலில் மேன்மை ஆகியவற்றை குறையறப் பெறலாம் என்று போற்றுகின்றனர், பக்தர்கள்.

மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி மற்றும் விநாயக சதுர்த்தி ஆகிய நாட்களில் பஞ்சமுக கணபதியைத் தொழுதால், பஞ்ச மெல்லாம் விலகி, சகல ஐஸ்வரியங்களும் பெருகும்.

- கே.அபிநயா,
படங்கள்: தே.தீட்ஷித்