Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

Published:Updated:
தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தி
யாகபிரம்மம்- ஸ்ரீராமனை கண்கண்ட தெய்வமாகப் போற்றித் துதித்த மகான். ஒருமுறை அடியார்கள் சிலர், ஸ்ரீராமநவமி உத்ஸவத்துக்கு மகானுக்குப் பயன்படுமே என்ற எண்ணத்தில் ஆயிரம் வெள்ளிகளை அவரது பல்லக்கில் அவருக்குத் தெரியாமல் வைத்துவிட்டனர். தெரிந்தால் ஏற்கமாட்டார் என்பதால் இந்த ஏற்பாடு!

மறுநாள் மாலையில், திருடர்கள் நால்வர் ஓடிவந்து மகானின் திருவடியில் வீழ்ந்து கதறினர். ''ஸ்வாமி! எங்களை மன்னித்துவிடுங்கள். தங்கள் பல்லக்கில் இருந்த ஆயிரம் வெள்ளிகளைக் கொள்ளையடிக்கும் எண்ணத்தில், நேற்று தங்களின் பல்லக்கைப் பின்தொடர்ந்தோம். ஆனால், வில்லும் அம்பும் ஏந்திய வண்ணம் ஆயுதபாணிகள் இருவர் தங்களுக்குக் காவலாய் பின் தொடர்வதைக் கண்டோம். அவர்களைப் பார்க்கப் பார்க்கப் பேரானந்தமாக இருந்தது. பெரும் அபசாரம் செய்வதில் இருந்து எங்களையும் தடுத்தாட்கொண்டார்கள் அவர்கள். நீங்களும் எங்களை மன்னிக்க வேண்டும்'' என்று கதறினார்கள்.

தியாகப்பிரம்மம் வியந்தார். ஆயிரம் வெள்ளிகள் தனது பல்லக்கில் எப்படி வந்தது என்று அவருக்குத் தெரியாது. ஆனாலும், வில்லேந்தியபடி பின்தொடர்ந்த இருவர் ஸ்ரீராம- லட்சுமணரே என்பதைப் புரிந்துகொண்டார்.

கண்களில் நீர்மல்க, 'ஸ்ரீராமா... எனக்காகவா காவலனாய் வந்து அருள்புரிந்தாய்!’ என்று கசிந்துருகினாராம்.

தன்னையே சிந்தித்திருக்கும் அடியார்கள் குறித்தே இறைவனும் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிறான். இமைப்பொழுதும் அவர்களைவிட்டு நீங்காமல் காத்து ரட்சிக் கிறான். அதற்குச் சிறந்த உதாரணமே இந்தச் சம்பவம்.

அதேபோன்று இறைவனின் அருட் கடாட்சத்துக்கு உயர்வு- தாழ்வு எனும் பேதம் கிடையாது. படைக்கும் பிரம்மன் முதல் பறக்கும் புள்ளினம் வரை... எல்லோருக்கும் சமமாகவே பெய்யும் அந்தக் கருணைக் கொண்டலின் அருள்மழை!

தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த மாறனேரி நம்பிகள் நோயுற்றிருந்தபோது பணிவிடை செய்ததாலும், அவர் இறந்ததும் ஈமக்கிரியை செய்ததாலும் பெரிய நம்பிகள் மீது அந்த ஊரில் வசித்த பழைமைவாதிகள் சிலருக்குக் கடும்கோபம்.

அவர்களுக்குத் தக்க பாடம்புகட்ட விரும்பிய பெரிய நம்பிகள், அவர்களிடம் கேட்டார்: ''அதோ விண்ணில் பறக்கின்றனவே பட்சிகள், அவை நம்மைவிட உயர்ந்தவையா, தாழ்ந்தவையா?''

''அதிலென்ன சந்தேகம்... அவை நம்மைவிடத் தாழ்ந்தைவையே!'' என்று பதில் கிடைத்தது.

பெரிய நம்பிகள் மீண்டும் கேட்டார்: ''அவதாரப் புருஷனான ஸ்ரீராமன் நம்மைவிட உயர்ந்தவரா? தாழ்ந்தவரா?''

''என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? உயர்ந்தது எல்லாவற்றையும்விட உயர்ந்தவர் அல்லவா ஸ்ரீராமன்!'' என்றனர்.

''எனில், நம்மைவிட உயர்ந்த ஸ்ரீராமன் நம்மைவிடத் தாழ்ந்ததாக நீங்கள் கருதும் பட்சிக்கு அதாவது ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்யும்போது, மனிதனுக்கு மனிதன் செய்தது தவறா?'' - பெரியநம்பிகளின் இந்தக் கேள்வி, ஊர்க் காரர்களைச் சிந்திக்க வைத்தது. தவற்றை உணர்ந்து வருந்தினார்கள். அதுவரை அவர்களுக் குள் இருந்த பேதமும் விடைபெற்றது.

பிரம்மன் முதலான தேவாதிதேவர்களுக்கும் அபயம் அருளும் பரம்பொருள், பறவை இனமான ஜடாயுவையும் தந்தையாகக் கருதி, இறுதிக்கடன் செய்து ஏற்றம் தந்தது. அதன் மூலம், பிறப்பாலும் இனத்தாலும் உயர்வு- தாழ்வு இல்லை என்றொரு உயர்ந்த படிப்பினையை நமக்குத் தந்தது.

அதை, மனித குலம் என்றென்றும் மறவாமல் இருக்க வேண்டும் அல்லவா? அதற்காகவே, ஜடாயு மோட்சக் கதையையே தலபுராணமாகக்  கொண்டு, சில புண்ணிய க்ஷேத்திரங்களை ஏற்படுத்தி, அங்கே கோயில் கொண்டது பரம்பொருள்.

அத்தகைய புண்ணிய க்ஷேத்திரங்களில் ஒன்று திருப்புட்குழி. தொண்டைநாட்டு திவ்வியதேசங்களில் ஒன்றான இந்த தலம், சென்னை- வேலூர் மார்க்கத்தில் சுமார் 80 கி.மீ.

தொலைவில், பாலுசெட்டிச் சத்திரம் என்ற இடத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ளது (காஞ்சியில் இருந்து சுமார் 11 கி.மீ. தூரத்தில் உள்ளது).

புள்ளினமான ஜடாயுவுக்குத் தர்ப்பணம் செய்து மோட்சம் அளிக்க நினைத்த ஸ்ரீராமன், அதற்காக இங்கே தீர்த்தம் உருவாக்கியதால், திருப்புள்குழி என்று இந்தத் தலத்துக்குத் திருப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். திருமங்கையாழ்வார் பாடிப்பரவிய தலமிது.

இங்கு, விஜயகோடி விமானத்தின் கீழ், கிழக்கே திருமுக மண்டலமாக வீற்றிருந்த கோலம் காட்டுகிறார் ஸ்ரீவிஜயராகவ பெருமாள். மூலவர், தம்முடைய தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு ஸம்ஸ்காரம் (இறுதிக் கடன்) செய்யும் நிலையில் எழுந்தருளியுள்ளார்.

ஸ்வாமி இந்தத் தலத்தில் ஜடாயுவை வலப் புறமாக வைத்துத்  தீமூட்டி, ஈமக்கிரியைகள் செய்தாராம். அதனால் உண்டான வெம்மை தாங்காமல் வலப்புறம் இருக்கும் ஸ்ரீதேவி இடப்புறத்திலும், இடப்புறம் இருந்த பூதேவி தாயார் வலப்புறத்திலும் இடம்மாறி அமர்ந்து அருள்பாலிப்பதாகச் சொல்கிறார்கள்.

அதற்கேற்ப, இந்தத் தலத்தில்... மூலவர் கருவறைக்கு இடப்புறம் ஸ்ரீமரகதவல்லித் தாயார் சந்நிதி கொண்டிருக்கிறார்.

தசாவதாரம் திருத்தலங்கள்!

முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப் பதற்கு விசேஷமான திருத்தலங்களில் இதுவும் ஒன்று. அமாவாசை தினங்களில் இந்தத் தலத்துக்கு வந்து முன்னோருக்குரிய வழிபாடுகளைச் செய்ய, பிதுர்தோஷங்கள் நீங்கும்; சந்ததி செழிக்கும்.

அதுமட்டுமின்றி, குழந்தை வரம் கிடைக்கவும் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடுகிறார்கள். பிள்ளைப்பேறு வேண்டும் பெண்கள் இங்கு வந்து, ஜடாயு தீர்த்தத்தில் நீராடி தாயாரை பிரார்த்தித்துக் கொள்வ துடன், கோயிலில் சொல்லி மடைப்பள்ளியில் இருந்து வறுத்த பயிற்றை வாங்கி மடியில் கட்டிக்கொள்வார்கள். இரவு கோயிலிலேயே தங்குவார்கள். விடிந்ததும் வறுத்த பயிறு முளைத்தால், பிள்ளை பாக்கியம் நிச்சயம் என்பது நம்பிக்கை.

ஸ்ரீராமானுஜரின் குருவான யாதவ ப்ரகாசர், தம்முடைய சீடர்களுக்கு வேதாந்த பாடங்கள் கற்பித்தது இந்தத் தலத்தில்தான். தத்ரூபமான குதிரை வாகனம், இத்தலத்தின் சிறப்பம்சம். இதைச் செய்த சிற்பி, இதுபோன்று வேறொரு வாகனம்  செய்வதில்லை என்று உறுதி ஏற்றதாகச் சொல்வர்.

ஜடாயு மோட்சக் கதையுடன் தொடர்பு கொண்ட மற்றுமொரு புண்ணிய க்ஷேத்திரம் திருப்புள்ளம்பூதங்குடி. கும்பகோணம் சுவாமி மலையிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம்.

ஸ்ரீராமபிரான், ஜடாயுவுக்கு மோட்சம் அளித்த பிறகு, சிரம பரிகாரம் செய்து கொள்ளும் நிலையில் கோயில் கொண்ட அற்புதமான க்ஷேத்திரம்! ஆமாம்... ஸ்ரீராமனை சயனக் கோலத்தில் தரிசிக்கும் பெரும் வாய்ப்பு இங்கு கிடைக்கிறது.

அறிவ தரியா னனை த்துலகும்
    உடையா  னென்னை யாளுடையன்
குறிய மாணியுருவாய கூத்தன்
           மன்னி யமருமிடம்
நறிய மலர்மேல் சுரும்பார்க்க
        எழிலார் மஞ்ஞை நடமாட
பொறிகொள் சிறைவண் டிசை பாடும்
  புள்ளம் பூதங்குடிதானே

- என இந்த திருத்தலத்தைச் சிறப்பித்துப் பாடி யுள்ளார் திருமங்கையாழ்வார். தாயார் அருள்மிகு பொற்றாமரையாள், தனிக்கோயில் நாச்சியாராக அருள்கிறார். இங்கு, பித்ரு வழிபாடு செய்வது உகந்தது. மேலும், திருமணத்தடை உள்ளவர்களும் இங்கு வந்து வழிபடுகின்றனர்.

மேலும், இந்த ஆலயத்தின் பிராகாரத்தில் உள்ள ஸ்ரீயோக நரசிம்மர் மற்றும் ஸ்ரீஉத்யோக நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்து வழிபட, பதவி உயர்வு கிடைக்கும்; வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம். வைணவ சம்பிரதாயத்தில் வைணவர் களுக்கு இரண்டு பூதபுரிகள் உண்டு. ஒன்று, ஸ்ரீபெரும்புதூர்; ராமானுஜர் அவதரித்த தலம். மற்றொன்று திருப்புள்ளம் பூதங்குடி!

வாழ்வில் ஒருமுறையேனும் இந்தத் தலத்துக்குச் சென்று, சோபன விமானத்தின் கீழ், புஜங்கசயனத் தில் அருளும் ஸ்ரீவல்வில் ராமனைத் தரிசித்து வாருங்கள்; வல்வினைகள் யாவும் நீங்கி, வாழ்வு சிறப்படையும்!

- அவதாரம் தொடரும்...
படங்கள்: எம்.என். ஸ்ரீநிவாஸன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism