’நல்ல மழை பெய்யணும்!’

##~## |
முன்னதாக, சிறுமி அசின்கோபிகா, 99 வகைப் பூக்களைக் கொண்டு கபிலர் இயற்றிய பாடலைப் பாடிய பிறகு, பூஜை துவங்கியது.
''எனக்கு வீட்டுல வரன் தேடிக்கிட்டிருக்காங்க. அப்பா- அம்மா ஆசைப்பட்டபடி நல்ல வரன் அமையணும். நல்ல வேலை கிடைக்கணும்!'' என்று தன் பிரார்த்தனையைத் தெரிவித்தார் கவிதா எனும் வாசகி. ''நாங்க சுயமா தொழில் செய்யறோம். அந்தத் தொழில், ஒரு குறையும் இல்லாம சீரும் சிறப்புமா நடக்கணும். எங்க கஷ்டமெல்லாம் தீரணும்'' என்று வாசகி சுந்தரேஸ்வரி தெரிவித்தார்.
''கம்பம் பள்ளத்தாக்கைச் சுத்தியிருக்கற பகுதியெல்லாம் மூணு போகமும் பொன்னா விளையற பூமி! ஆனா, இந்த முறை வருண பகவான் கரிசனம் காட்டாததால, இன்னும் யாரும் விதைக்கவே இல்லை. எங்க தேனி மாவட்டத்துல நல்ல மழை பெய்யணும்; விவசாயம் செழிக்கணும்.'' என்றார் வாசகி ஹேமா. அனைவரது பிரார்த்தனைகளையும் ஸ்ரீபூலாநந்தீஸ்வரர் ஈடேற்றித் தருவார்!
- இரா.முத்துநாகு,
படங்கள்: சக்திஅருணகிரி