நவராத்திரி ஸ்பெஷல்!
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

’எங்க வீட்ல தினமும் கொலு!’ - சுதா ரகுநாதன்

’எங்க வீட்ல தினமும் கொலு!’ - சுதா ரகுநாதன்

’எங்க வீட்ல தினமும் கொலு!’ - சுதா ரகுநாதன்
##~##
''அ
து 94-ஆம் வருஷம். என் மகள் மாளவிகாவுக்கு மூணு வயசு. பெரிய அளவில் கொலு வைச்சிருந்தோம். அன்னிக்கு ஏகக் கூட்டம். வந்தவங்களை எல்லாம் பிரசாதம் கொடுத்து, அனுப்பி வெச்ச பிறகுதான் பகீர்னுச்சு... 'என்னடா இது... மாளவிகாவைக் கொஞ்ச நேரமா பார்க்கவே இல்லியே..!’னு தோணுச்சு. எங்க வீடு, பக்கத்து வீடுகள்னு தேடியும் காணோம்னதும் பதற்றமாகிடுச்சு. அப்ப வீட்டுக்குள்ளே, கொலுப் படிக்குப் பின்னாலிருந்து முனகல் சத்தம்! பார்த்தா... செட்டியார் பொம்மைக்கு முன் தட்டில் பரப்பி வைச்சிருந்த அத்தனை திராட்சையையும் முந்திரியையும் எடுத்து வைச்சுக்கிட்டு சாப்பிட முடியாம சாப்பிட்டு, ஒரு முந்திரிப் பருப்பு முழுங்கவும் முடியாம, துப்பவும் முடியாம எசகுபிசகா குழந்தையின் தொண்டையில சிக்கிக்கிட்டிருக்கு. உடனே அவளைத் தூக்கித் தண்ணி குடிக்க வெச்சதும், நார்மலாயிட்டா. குழந்தை சிரிச்சதைப் பார்த்ததும்தான் எங்களுக்குப் போன உயிரே திரும்ப வந்துச்சு. இப்பவும் நவராத்திரி வந்தாலே, 'என்ன மாளவிகா... முந்திரிப்பருப்பு சாப்பிடுறியா?’னு கேட்டு அவளைக் கேலி பண்ணுவோம்.

அப்புறம்... நவராத்திரி சீசன்ல நிறைய கச்சேரிகள் புக் ஆயிடறதால, அடுத்தடுத்த வருஷங்கள் கொலு வைக்கமுடியலை. ஆனா என்ன... எனக்கு விநாயகர் மேல ரொம்ப ஈடுபாடு. அதனால, எங்க வீட்டுல சுமார் 650 விநாயகர் சிலைகள் இருக்கு. அத்தனைப் பிள்ளையாரையும் வைக்கறதுக்காகத் தனி இடமே ஒதுக்கியாச்சு. அதனால எங்க வீட்ல தினம் தினம் கொலுதான்!'' என்று சொல்லிவிட்டு, இயல்பாகச் சிரிக்கிறார் சுதா ரகுநாதன்.