Published:Updated:

கேரள திவ்ய தேசங்கள்! - 3

கேரள திவ்ய தேசங்கள்! - 3
News
கேரள திவ்ய தேசங்கள்! - 3

திருவிழா முடிந்ததும் மீண்டும் கொண்டு வந்து இங்கு வைத்துப் பாது காத்து வருகிறார்கள்.

கேரள திவ்ய தேசங்கள்! - 3
கேரள திவ்ய தேசங்கள்! - 3
கேரள திவ்ய தேசங்கள்! - 3
கேரள திவ்ய தேசங்கள்! - 3

ஆகுங்கொல் ஐயம் ஒன்று இன்றி
அகலிடம் முற்றவும் ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குற
அப்பன் அமர்ந்து உறையும்
மாகந் திகழ்கொடி மாடங்கள் நீடு
மதிள்திரு வாறன் விளை
மாகந்த நீர்கொண்டு தூவி வலம்செய்து
கைதொழக் கூடுங்கொலோ?

- நம்மாழ்வார் (திருவாய்மொழி)

பொருள்: ''அகன்ற உலகம் முழுவதையும் எம்பெருமான் தன் திருப்பாதம் கொண்டு இரண்டு அடிகளால் அளந்தார். இப்படி அளக்க முடியுமா என்று சிறிதும் சந்தேகம் இல்லாமல், அழகிய குள்ள வடிவ வாமனனான அவர் வந்து அதிசயமாகப் பேருருவம் எடுத்து நிமிர்ந்தார். இப்படிப்பட்ட திருக்குறளப்பன் எழுந்தருளியுள்ள திருத்தலம்... திருவாறன்விளை. இந்த ஊரில் வானத்தைத் தொடுகின்ற கொடிகள் காணப்படும் மாடங்கள் உண்டு; நீண்ட மதில் உண்டு. இந்தத் திருப்பதிக்குச் சென்று, பகவானை மணம் மிகுந்த சந்தனநீர் தூவி, வலம் வந்து, கைகளால் வணங்கி வழிபடும் வாய்ப்பு எனக்குக் கைகூடுமோ?''

கேரள திவ்ய தேசங்கள்! - 3
கேரள திவ்ய தேசங்கள்! - 3

குருக்ஷேத்திர யுத்தத்தின்போது அர்ஜுனனும் கர்ணனும் கடுமையாகப் போரில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த நேரம், பூமியில் புதையுண்ட தன் தேர்ச் சக்கரத்தை விடுவிக்கக் கர்ணன் முயன்றான். அப்போது, கருணையே காட்டாமல் தன் மீது அம்பு தொடுத்த அர்ஜுனனைப் பார்த்து, ''கொஞ்சம் பொறு! இந்த நேரத்தில் அம்பு எய்தாதே...'' என்று வேண்டுகோள் விடுத்தான் கர்ணன். ஆனால், பார்த்தனான அர்ஜுனனுக்குச் சாரதியாக இருந்த பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் அறிவுரைப்படி சரமாரியாக அம்புகளைக் கர்ணன் மீது தொடுத்து, அவனை வீழ்த்தினான் அர்ஜுனன்.

போர் தர்மம் அற்ற தனது தகாத செயல், பின்னர் அர்ஜுனனின் மனத்தை வெகுவாகத் துளைத்தது. எனவே, அந்தப் பாவம் நீங்க பம்பை நதிக்கரையில், அடர்ந்த காடாக இருந்த நீலக்கல் எனும் இடத்தில் மகாவிஷ்ணுவைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும், காட்டு விலங்குகளின் தொல்லைக்குப் பயந்து 6 மூங்கில்களால் இணைக்கப்பட்ட படகில் விஷ்ணுமூர்த்தியை எடுத்து வந்து, பம்பைக்கரையில் ஒரு திவ்யமான இடத்தில் மறு பிரதிஷ்டை செய்து பெரிய கோயில் எழுப்பியதாகவும், 6 மூங்கில்கள் (முலா) மூலம் வந்ததால் திருஆறன்முலா என்றும், திருவாறன்விளை என்றும் இத்தலம் குறிப்பிடப்படுவதாகவும் சொல்கிறது கோயில் ஸ்தலபுராணம்.

கேரள மாநிலம், செங்கண்ணூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு நான்கு வாசல்கள் உள்ளன. கிழக்கு வாசல் 18 படிகளைக் கொண்டதாகவும், வடக்குக் கோபுர வாசல் 57 படிகளுடனும் அமைந்துள்ளது. வடக்கு வாசல் வழியாக பம்பை நதியை அடையலாம். பம்பையில் எவ்வளவு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும் இக்கோயிலைப் பாதிக்க முடியாதபடி உறுதியாகவும், மிக உயரமாகவும் கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

கேரள திவ்ய தேசங்கள்! - 3
கேரள திவ்ய தேசங்கள்! - 3

திருவாறன்விளை ஆலயத்தின் சிறப்புகளுள் ஒன்று... ஸ்ரீசபரிமலை ஐயப்பனின் விலை உயர்ந்த திருவாபரணங்களை இந்தக் கோயிலில் பாதுகாத்து வைத்திருப்பதுதான்! மகர ஜோதி நேரத்தில் அவற்றை இங்கிருந்து சபரிமலைக்கு எடுத்துச் சென்று சாஸ்தாவுக்கு அணிவிக் கிறார்கள். திருவிழா முடிந்ததும் மீண்டும் கொண்டு வந்து இங்கு வைத்துப் பாது காத்து வருகிறார்கள்.

ஒருமுறை, பிரம்மாவிடம் இருந்த வேத நூல்களை மதுகைடபர்கள் அபகரித்துச் சென்றுவிட, அதைத் திரும்பப் பெற இந்தத் தலத்துப் பெருமாளை நோக்கி பிரம்மா கடும் தவம் இருந்தாராம். ஸ்ரீபார்த்தசாரதி அவருக்குக் காட்சியளித்து ஆசி வழங்கிய துடன், பிரம்மாவின் வேத நூல்கள் மீண்டும் கிடைக்கவும் வழிசெய்தாராம்.

இந்தக் கோயில் மூலவரை ஸ்ரீதிருக் குறளப்பன், ஸ்ரீபார்த்தசாரதி ஆகிய பெயர்களில் அழைக்கிறார்கள். பகவான் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு திசையில் திருமுகம் பார்த்து அருள்கிறார். 5 அடி உயரம்; சதுர் புஜம்; சங்கு- சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரை மலர்களை ஏந்தி நிற்கும் திருக்கோலம். பிரம்மாவுக்கும் ஸ்ரீவேத வியாசருக்கும் பிரத்யட்சமாகக் காட்சி தந்து அருளிய பெருமாள் இவர். தாயாரின் திருநாமம்- ஸ்ரீபத்மாஸநி நாச்சியார். வேத வியாசருக்கு பகவான் காட்சி தந்ததால் இங்குள்ள புஷ்கரணிக்கு 'வேத வியாச சரஸ்’ என்று பெயர்.

கேரள திவ்ய தேசங்கள்! - 3
கேரள திவ்ய தேசங்கள்! - 3

இன்னொரு தீர்த்தமான பம்பா நதி, கோயிலை ஒட்டி அகலமாகவும் ஆழமாகவும் சுழித்துக் கொண்டு ஓடுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.

கி.பி.1751ஆம் ஆண்டு, மன்னர் மார்த்தாண்ட வர்மா மிகவும் வலிமையான மதில் சுவர்களை கோயிலின் நாற்புறமும் கட்டுவித்தார். கிழக்கு வாசலின் 18 படிகளில் நாம் ஏறும்போது, சபரிமலையின் 18 படிகளைக் கடக்கும் புண்ணியம் கிடைப்பதாகச் சொல்கிறார்கள்.

கோயில் கருவறைக்கு வாமன விமானம் அழகு செய்கிறது. இந்த மூலவரை நம்மாழ்வார் 11 பாசுரங் களால் துதித்துப் போற்றியிருக்கிறார். மூலவர் ஸ்ரீபார்த்தசாரதியைத் தவிர, ஸ்ரீசிவன், ஸ்ரீஐயப்பன், ஸ்ரீபலபத்ரன், ஸ்ரீபகவதி ஆகியோர் உபதேவதைகளாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். கோயிலுக்குச் சொந்தமாக ஒரு யானை உள்ளது. அதற்கு 'பார்த்தன்’ என்று பெயர்.

கேரள திவ்ய தேசங்கள்! - 3
கேரள திவ்ய தேசங்கள்! - 3

ஆலயம் அதிகாலை 4.30 மணிக்குத் திறந்து, மதியம் 12.30 மணிக்குச் சாத்தப்படுகிறது; மாலை 5 மணிக்கு மறுபடியும் திறந்து, இரவு 8 மணிக்கு சாத்தப்படுகிறது.

கோயில் வெளிப் பிராகாரத்தில் தரை மட்டத் துக்குக் கீழே பள்ளத்தில் இரு சந்நிதிகள் உள்ளன. பரமசிவன், பார்வதி, கணபதி ஆகியோர் ஒரு சந்நிதியிலும், பலபத்ரன் இன்னொரு சந்நிதியிலும் தரிசனம் தருகிறார்கள். கோயிலுக்குப் பின்புறம் ஸ்ரீபகவதிக்கு தனிச் சந்நிதி இருக்கிறது.

திருவாறன்விளை சிற்றூரில் பிரபலமாக விளங்கும் பண்டிதரான பிரம்மஸ்ரீ ஹரி கிருஷ்ணன் திருமேனி என்பவரைச் சந்தித்தோம்.

'கேரளாவில் ஹரிப்பாடு ஸ்ரீசுப்ரமணிய க்ஷேத்திரத் தில் உள்ள கொடி மரம்தான் இந்த மாநிலத்தில் உள்ள கோயில் கொடி மரங்களிலேயே உயரமானது. அதற்கு அடுத்த உயரத்தில் உள்ள கொடி மரம் இந்தக் கோயிலில்தான் இருக்கிறது.

கேரள திவ்ய தேசங்கள்! - 3
கேரள திவ்ய தேசங்கள்! - 3

இந்தக் கோயில் ஸ்வாமிக்கு சந்தனத்தால் வழிபாடு செய்பவர்களுக்கு நல்ல புத்தியும் மனத்தில் சாந்தமும் கிட்டும். மலர் மாலைகளால் வழிபட்டால் மனத்தில் உள்ள கவலைகள் தீரும். 'தேச்சுகுளி சத்யா’ என்று ஒரு வழிபாடு இக்கோயிலில் உண்டு. குழந்தைகளுக்கு எண்ணெய்க் குளியல் நடத்தி, உணவு தரும் வைபவத்துக்குத்தான் அப்படியரு பெயர். திருமணம் ஆகிக் குழந்தை பிறக்கத் தாமதம் ஆனால், இங்கு வந்து பகவானைப் பிரார்த்திக்க, குழந்தை பாக்கியம் கிடைக்கும். தினமும் உச்சிக்கால பூஜை முடிந்து, பக்தர்களுக்குத் திருக்கை வெண்ணெய் பிரசாதம் தருவார்கள். ஸ்வாமிக்கு தலை முதல் பாதம் வரை துளசி மாலை அணிவித்துப் பிரார்த்தனை செய்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. கதலி (வாழைப் பழம்) நைவேத்யம் செய்தால் வித்யா லாபம், நெய் விளக்குப் போட்டுப் பாயசம் படைத்தால் துக்க நிவாரணம், பால் மற்றும் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தால் ரோக நிவாரணம்... என்று, பக்தர்களுக்கு பகவான் பல விஷயங்களில் நல்லது பண்ணுகிறார்.

இங்கே ஓணம் திருவிழா சிறப்பாகக் கொண் டாடப்படுகிறது. ஒவ்வொரு தை மாதமும் பிரம்மோத்ஸவம் 10 நாள் திருவிழாவாக நடை பெறுகிறது. ஐந்தாவது நாள் திருவிழாவின் போது தேவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து மகாவிஷ்ணுவைத் தரிசித்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக ஐதீகம்! ஓணம் திருநாளில் இருந்து நான்காவது நாளான உத்திரட்டாதி தினத்தில் 'வெள்ளம் களி’ என்று அழைக்கப்படும் படகுப் போட்டி, பம்பா நதியில் நடைபெறும். இந்த நன்னாளில்தான் அர்ஜுனன் மூலவரைப் பிரதிஷ்டை செய்ததாகச் சொல்வார்கள்...' என்கிறார் பிரம்மஸ்ரீ ஹரி கிருஷ்ணன் திருமேனி.

- தரிசனம் தொடரும்...
படங்கள்: ரா.ராம்குமார்