நவராத்திரி ஸ்பெஷல்!
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

தேர் திருப்பணிக்கு ஊர் கூடி உதவுவோம்!

தேர் திருப்பணிக்கு ஊர் கூடி உதவுவோம்!

தேர் திருப்பணிக்கு ஊர் கூடி உதவுவோம்!
தேர் திருப்பணிக்கு ஊர் கூடி உதவுவோம்!
##~##
தொ
ண்டை தேசத்தில், மிகச் சிறிய பகுதியாகத் திகழ்ந்தது... மஹாபிலம். சின்னஞ்சிறிய அந்தக் கிராமத்தில் ஏரி ஒன்றும், அதைச் சுற்றிலும் வில்வ மரங்கள் சூழ்ந்த வனமும் இருந்தது. முனிவர்களும் ஞானிகளும் அந்த ஏரியில் நீராடிவிட்டு, வில்வ வனத்தில் அமர்ந்து, சிவனாருக்கு உரிய வில்வ தளங்களையே ஈஸ்வர சொரூபமாக நினைத்து வழிபட்டு வந்தார்கள்.

முனிவர்களைப் பின்பற்றி அந்த ஊர் மக்களும் ஏரியில் நீராடுவதும், வில்வ மரங்களைச் சுற்றி வந்து வணங்குவதுமாக இருந்தார்கள். இதில் மகிழ்ந்த சிவ பெருமான், அந்தத் தலத்தில் குடியிருக்கத் திருவுளம் கொண்டார்.

ஒருநாள்... மஹாபிலம் வனப் பகுதியில், சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளிய சிவலிங்கத் திருமேனியைக் கண்டு முனிவர்களும் கிராம மக்களும் சிலிர்த்துப் போனார்கள். பிறகு ஊர்மக்கள் அனைவரும் இணைந்து, அந்த இடத்தில் சிவனாருக்குக் கோயில் எழுப்புவது எனத் தீர்மானித்தனர்.

தேர் திருப்பணிக்கு ஊர் கூடி உதவுவோம்!

அதன்படி, ஆரம்பத்தில் மிகச் சிறிய கோயிலாகக் கட்டப் பட்டு, மற்ற தெய்வங்களின் திருவிக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மஹாபில திருத்தலம் என அழைக்கப்பட்ட அந்த ஆலயமும் அந்தக் கிராமமும் எல்லோராலும் அறியப் பட்டன. அந்தத் தலத்தின் இறைவன்- ஸ்ரீகாசி விஸ்வநாதர். இறைவி- ஸ்ரீவிசாலாட்சி.  

மஹாபிலம் என அழைக்கப்பட்ட திருத்தலம்தான் பிறகு 'மாபள்ளம்’ என மருவி இன்றைக்கு மாம்பலம் என்று அழைக்கப்படுகிறது. ஆம்... சென்னையின் முக்கியப் பகுதியான மாம்பலத்தில் கோயில்கொண்டு, அருள்பாலிக்கிறார் ஸ்ரீகாசி விஸ்வநாதர். காசி வாரணாசியில் உள்ளது போலவே சிவலிங்கத் திருமேனி அமைந்திருப்பதால், இறைவனுக்கு அதே திருநாமத்தைச் சூட்டி வழிபட்டு வருகின்றனர் மக்கள்.

தேர் திருப்பணிக்கு ஊர் கூடி உதவுவோம்!

ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீதட்சிணா மூர்த்தி, ஸ்ரீபைரவர், நவக்கிரகங்கள் ஆகியோ ருக்கும் தனிச்சந்நிதிகள் உள்ள இந்தத் திருக் கோயிலில், அறுபத்து மூன்று நாயன்மார்களும் பிராகாரத்தில் கொலுவிருக்கின்றனர்.

ஆரம்பத்தில் சிறிய கோயிலாக இருந்து தற்போது பிரமாண்டமான ஆலயமாக வளர்ந்திருக்கிறது எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர், பக்தர்கள். ஐப்பசி மாதம் இங்கே அன்னாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

தேர் திருப்பணிக்கு ஊர் கூடி உதவுவோம்!

ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில், அம்பிகைக்கு முக்கியத்துவம் அளித்து, விழாக்கள் விமரிசையாக நடைபெறுகின்றன. ஆடிப்பூர உத்ஸவமும் நவராத்திரி விழாவும் இங்கே பிரசித்தம். நவராத்திரி மற்றும் விஜயதசமி தினங்களில் (10 நாட்களும்) ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் ஸ்ரீகாசி விசாலாட்சியைத் தரிசிக்க... நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும்.  பிரதோஷம், மாத சிவராத்திரி, திருக் கார்த்திகை என சீரும் சிறப்புமாக விழாக்கள் மாதந்தோறும் நடக்கிற இந்தத் தலத்தில், கடந்த இரண்டு வருடங்களாக பிரம்மோத்ஸவ விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

இத்தனைப் பெருமைகளும் விழாக்களும் கொண்ட ஆலயத்தைத் தரிசிக்கும் பக்தர்களுக்கு ஒரேயரு குறை... கோயிலுக்குத் தேர் இல்லையே என்பதுதான்! பங்குனியில் நடைபெறும் திருவிழாவுக்கு வேறு கோயிலில் இருந்து தேர் கொண்டு வந்து தேரோட்டம் நடைபெறுமாம்.

தேர் திருப்பணிக்கு ஊர் கூடி உதவுவோம்!

தற்போது சுமார் 30 அடி உயரமும், 13 அடி அகலமும் கொண்ட அழகிய தேர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தேர்த் திருப்பணிக்காக, தமிழக அரசு கணிசமான தொகையை வழங்கியிருக்கிறது.

அறுபத்து மூன்று நாயன்மார்களின் சிற்பத் திருமேனிகள் உட்பட, சுமார் 160 மரச் சிற்பங்கள் தேரில் பொறிக்கப்பட உள்ளன என்கின்றனர் நிர்வாகிகள்.

ஊர் கூடித் தேரிழுப்போம் என்பார்கள். இதோ... தேர்த் திருப்பணிக்காக, ஊர் கூடித் தருவோம். நம் ஒவ்வொருவரும் தேர்த் திருப்பணியில் பங்கேற்போம்; ஸ்ரீகாசி விஸ்வ நாதரின் பேரருளைப் பெறுவோம்.