நவராத்திரி ஸ்பெஷல்!
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

பிறந்த வீட்டுக்கு வந்த புகுந்த வீட்டு பொம்மைகள்! லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்

பிறந்த வீட்டுக்கு வந்த புகுந்த வீட்டு பொம்மைகள்! லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்

பிறந்த வீட்டுக்கு வந்த புகுந்த வீட்டு பொம்மைகள்! லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்
##~##
''எ
ங்க ஊர் பாலக்காடு. அம்மாவுக்கு கொலுன்னா அவ்ளோ இஷ்டம். சினிமாவுக்கு செட் போடுற நண்பர்களைக் கூப்பிட்டு, பெரிய செட் மாதிரி போட்டு, கொலு வைக்கும்போது அம்மாவுக்கு கவனம், சிந்தனை, செயல் எல்லாமே அதுலதான் இருக்கும்!''என்று  சொல்கிறார் நடிகையும் இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

''பிரமாண்டமான குடை, தேர்னு எங்க வீட்டு மொட்டைமாடியில கொலு வைப்போம். அதைப் பாக்கறதுக்காகவே பாலக்காடு பக்கத்துல இருக்கிற ஊர்கள்லேருந் தும் நிறையப் பேர் வருவாங்க. ஆக, நவராத்திரி ஒன்பது நாட்களும் எங்க வீட்ல தேர்க்கூட்டம் திருவிழாக் கூட்டம்தான்! நவராத்திரின்னாலே, அம்மாவும் அவங்க வைச்ச கொலுவும் ஞாபகத்துக்கு வரும்.

அப்புறம் நான் வெளிநாட்ல சில வருஷங்கள் இருந்தப்போ, பொம்மைகளைச் சேர்க்க முடியலை; கொலு வைக்கவும் முடியலை.

என் கல்யாணத்துக்கு முன்னாடியே எங்க வீடும் என் மாமியார் வீடும் நல்ல பழக்கம். ஒருமுறை, அவங்க வீட்டுக்குப் போயிருந்தப்போ அங்கே இருந்த பொம்மைகளைப் பார்த்து மிரண்டே போயிட்டேன். அவ்ளோ பொம்மைகள்! 'எனக்குத் தர்றீங்களா மாமா?’ன்னு என் கணவரோட அப்பாகிட்டக் கேட்டேன். 'தாராளமா எடுத்துக்கோம்மா! எங்க வீட்டுக்கே நீ வரும் சூழ்நிலை ஏற்படலாம். அப்ப இதையெல்லாம் உங்க வீட்டு கொலுவுக்காக வைச்சிட்டு வந்துடு’ன்னார்.

அப்ப எதுவும் புரியலை; பிறகு அதுவே எனக்குப் புகுந்தவீடானது தனி சுவாரஸ்யம்!'' எனச் சிரித்தபடி சொல்கிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.