நவராத்திரி ஸ்பெஷல்!
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

‘பாட்டி... பாட்டு... ஆசீர்வாதம்!’ - நித்யஸ்ரீ மகாதேவன்

‘பாட்டி... பாட்டு... ஆசீர்வாதம்!’ - நித்யஸ்ரீ மகாதேவன்

‘பாட்டி... பாட்டு... ஆசீர்வாதம்!’ - நித்யஸ்ரீ மகாதேவன்
##~##
''ந
வராத்திரின்னாலே கொலு ஞாபகம் வரும். கொலுன்னாலே எனக்கு என் மாமியார்தான் ஞாபகத்துக்கு வருவாங்க. பொம்மைகளைத் தேர்வு செஞ்சு, வீட்டுக்குக் கொண்டு வரும்போது, அவங்க முகத்தைப் பார்க்கணுமே... சின்னக் குழந்தை மாதிரி குதூகலத்தோட இருப்பாங்க'' என்று மாமியாரைச் சிலாகிக்கிறார் நித்யஸ்ரீ மகாதேவன்.

''ரெடிமேட் கொலுப் படிக்கட்டுகளை வாங்க மாட்டாங்க அவங்க. வீட்ல இருக்கிற தகர டின்கள், பாத்திரங்களையெல்லாம் எடுத்து அடுக்கி, ரொம்ப நேர்த்தியா அவங்க படிக்கட்டுகள் அமைக்கற வித்தையை பார்த்துக்கிட்டே இருக்கலாம். அதேபோல, போன வருஷம் கொலுவுல வைச்ச பொம்மை எதுவும் இந்த வருஷ கொலுவுல இருக்கக்கூடாதுங்கறதுல கவனமா இருப்பாங்க. நவராத்திரி வர்றதுக்கு ரெண்டு மாசம் முன்னாடியிருந்தே வீடு களை கட்ட ஆரம்பிச்சிடும்.

அம்மா வீடும் அப்படித்தான்! கோட்டூர் புரத்துல அம்மா வீட்ல இருக்கும்போது, விஜயதசமி அன்னிக்குப் பாட்டியைப் பார்க்கணுமே (டி.கே.பட்டம்மாள்)... சாட்ஷாத் அந்த சரஸ்வதிதேவியே வந்து எதிர்ல நிக்கற மாதிரி இருக்கும். அந்த நாள்ல, பாட்டிக்கிட்ட ஒரு வரியாவது பாட்டுக் கத்துக்கணும்னு காலைல ஏழு மணிக்கே நிறையப் பேர் வந்துடுவாங்க. பாட்டியும் சளைக்காம எல்லாருக்கும் பாட்டு சொல்லித் தந்து ஆசீர்வாதம் பண்ணுவாங்க. காலைல ஆரம்பிச்சு, நைட் ஒன்பது மணி வரைக்கும் எப்படியும் ஐந்நூறு பேராவது வந்து பாட்டுக் கத்துக்கிட்டுப் போவாங்க. நவராத்திரியும் கொலுவும், அம்மாவும் மாமியாரும், பாட்டியும் பாடல்களும் நினைக்க நினைக்க தித்திப்பான விஷயங்கள்'' என மலரும் நினைவுகளில் மூழ்குகிறார் நித்யஸ்ரீ.

தொகுப்பு: இ.ராஜவிபீஷிகா