Published:Updated:

மழலையர் மந்திரம்

மழலையர் மந்திரம்

மழலையர் மந்திரம்

மழலையர் மந்திரம்

Published:Updated:
மழலையர் மந்திரம்
மழலையர் மந்திரம்

'மழலையர் மந்திரம்’ முதல் போட்டியில் கலந்துகொண்டு 'பாலும் தெளிதேனும்...’ பாடலைப் பாடிப் பதிவு செய்திருந்த குழந்தைகள் அத்தனை பேரின் குரலையும் கேட்டு, மிகச் சிறப்பான பத்து குரல்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தவர் 77 வயதாகும் திருமதி ஜானகியம்மாள். சென்னை, மேற்கு மாம்பலத்தில் வசிக்கும் இவர் 30 வயதிலிருந்தே நிறைய சங்கீதக் கச்சேரிகள் செய்திருக்கிறார். அற்புதமாக வீணை வாசிக்கவும் தெரியும். இந்த முதிய வயதிலும் தளராமல், தன்னிடம் வரும் குழந்தைகளுக்கு உற்சாகத்துடன் வாய்ப்பாட்டும் வீணையும் சொல்லித் தருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
''போட்டியில் கலந்துகொண்டு பாடிய அத்தனைக் குழந்தைகளுக்கும் திருஷ்டி சுற்றிப் போடவேண்டும். அந்த மழலைக் குரல்களைக் கேட்கவே அத்தனை அழகு! எல்லாக் குழந்தைகளுக்கும் என் வாழ்த்துக் கள். தெளிவாகவும் உச்சரிப்புப் பிழையின்றியும் மிகச் சிறப்பாகப் பாடிய குரல்களை மட்டும் தேர்ந்தெடுத்துள்ளேன். குழந்தைகள் ஸ்லோகங்களைக் கற்கவும், பழந்தமிழ்ப் பாடல் களைப் பிழையின்றிப் பாடவும் ஓர் அரிய வாய்ப்பை சக்தி விகடன் ஏற்படுத்தித் தந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம்!'' என்கிறார் திருமதி ஜானகியம்மாள்.

அவர் தேர்ந்தெடுத்துக் கொடுத்த இந்தப் பத்து குழந்தை களுக்கும் பாராட்டு சான்றிதழோடு, சுட்டி மகாபாரதம், சுட்டி களின் கோயில் விசிட் ஆகிய புத்தகங்கள் பரிசாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பரிசு பெற்ற குழந்தைகளின் குரலை இங்கே கிளிக் செய்து கேட்டு ரசிக்கலாம்.  

அடுத்த போட்டிக்கான பாடல்...

முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே ஒரு கைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும்
நம்பியே கை தொழுவேன் நான்

உங்கள் குழந்தையின் குரலை 15.2.11-க்குள் பதிவு செய்ய வேண்டியது அவசியம்!

044 - 42890010

என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளுங்கள்*. ரிங் அடித்து இணைப்பு கிடைத்து, கணினி குரல் ஒலிக்கும். அதன் பிறகு, 'பீப்’ ஒலி கேட்டதும், உங்கள் குழந்தையிடம் போனைக் கொடுத்துப் பாடச் சொல்லுங்கள். உங்கள் வீட்டுக் குழந்தையின் வயது 10-க்குள் இருக்கவேண்டும்.

மழலையர் மந்திரம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism