ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
##~##
த்திராட நட்சத்திரத்துக்கும் திருவோணத்துக்கும் இடையே ஒரு நட்சத்திரம் உண்டு. அதன் பெயர் அபிஜித். 28-வது நட்சத்திரம். இதன் தேவதை ப்ரஜாபதி என்று விளக்குகிறது வேதம் (உபரிஷ்டாதஷாடானாம் அவஸ்தாத் ச்ரோணாயை...).

நட்சத்திர வேள்வி என்ற தொகுப்பில் அபிஜித் நட்சத்திர வேள்வியும் அடங்கும். ஜோதிடத்தில் இந்த நட்சத்திரம் இடம்பெறவில்லை. விண்வெளியில் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் இருந்தாலும், 27 நட்சத்திரங்கள் மட்டுமே பிறப்புடன் ஒட்டிக்கொண்டு - பிறந்தவனின் குணாதிசயங்களை வெளிப்படுத்த இயலும் என்பதை அறிந்து பரிந்துரைத்தது ஜோதிடம். காலத்தை அளவிடும் கருவிகளில் நட்சத்திரமும் அடங்கும். சூரியனை வைத்து ஸெளரமானம்; சந்திரனை வைத்து சாந்திர மானம்; உதயாஸ்தமனத்தை வைத்து ஸாவனமானம். அதுபோன்று, நட்சத்திரத்தின் ஒரு சுற்றை வைத்து நாக்ஷத்திரமானம் என்று கால கணனம் உண்டு (ஸெளரசாந்திரஸாவன நாக்ஷத்திரமானை: அனுமிதே...).

'பத்து மாதம் சுமந்து பெற்று’ - என்ற வழக்குச் சொல், நட்சத்திர அளவில் 10 மாதத்தைச் சொல்லும். 27 ஜ் 10 = 270 நாட்கள் பத்து மாதம் ஆகும். மற்ற அளவுகளில்... குழந்தை 10 மாதங்கள் கருவறையில் இருக்காது. அயனம் = 6 மாதம், ரிது 2 மாதம், ஒரு மாதம் = 30 நாள், பக்கம் = 15 நாள், வாஸரம் = ஒரு நாள், க்ஷணம் = 2 நாழிகை. இவை அனைத்தையும்... அதாவது 6 (மா) 2 (மா) 1 (மா) 15 நாட்கள் (பக்கம்), ஒரு நாள் (வாஸரம்), க்ஷணம் - 2 நாழிகை இவற்றைக் கூட்டினால் வரும்... 9 மாதங்கள் - 16 நாட்கள் - 2 நாழிகை கால அளவுதான் சராசரி கர்ப்பவாசம் என்று பிரசவ காலத்தை, அதாவது குழந்தை வெளிவரும் நேரத்தை ஜோதிடம் துல்லியமாக எடுத்துச் சொல்லும் (அயனஷண...). (நட்சத்திரத்தின் கால அளவு பிறப்பை உறுதி செய்கிறது.) மாதவிடாயின் கால அளவு 27 நாட்கள். அதுவும் நட்சத்திர கால அளவை வைத்து வரும். 'ஊனமாஸிகம்’ நக்ஷத்திரமானத்தில் மாத

நிர்ணயம் செய்கிறது. 27 நாட்களில் மாதம் நிறைவுற்றதாக வைத்து செயல்படும். பிறந்தநாளை நட்சத்திர அளவில் நிர்ணயம் செய்வோம். கால மாற்றத்தில் தேதியை ஏற்றாலும், பிறந்தநாளை நட்சத்திரத்தை வைத்துக் கொண்டாடும் வழக்கம் தற்போதும் உண்டு.

நமது உடல் பஞ்சபூதங்களின் கலவை. அதில் ஆகாசத்தின் பங்கை நிறைவு செய்வதில், கிரகங்களுடன் நட்சத்திரத்துக்கும் பங்குண்டு. கிரகங்கள் நகர்ந்து செல்ல நட்சத்திரங்கள் உதவுகின்றன. கிரக பாதசாரம் என்ற சொல்லில் 'பாத’ என்ற பகுதி, நட்சத்திர பாதத்தைக் குறிக்கும். கிரகங்கள் ஊர்ந்து செல்லும் சாலையாக (பாதையாக) நட்சத்திரங்கள் செயல்படுகின்றன. அமிருத யோகம், சித்த யோகம், மரண யோகம் போன்றவற்றில் நட்சத்திர பங்குதான் யோகத்தை வரையறுக்கிறது. தினப் பொருத்தம் என்பது நட்சத்திரப் பொருத்தம்தான். நல்ல காரியங்களை துவக்க நட்சத்திர பலம் வேண்டும் என்கிறது காலவிதானம் (தாராபலம் சந்திரபலம் ததைவ).

சித்திரா பூர்ணிமா, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணி அவிட்டம், கார்த்திகை தீபம், மாசி மகம், பங்குனி உத்திரம் போன்றவை நட்சத்திரத்தின் பெருமைக்குச் சான்று. திருவோண விரதம், கார்த்திகை விரதம், ஆர்த்ரா தர்சனம் போன்ற விரதங்களும் நட்சத்திரத்துக்கு முன்னுரிமை அளிக்கும்.

கேரளத்தில் அரச பரம்பரையை சுட்டிக்காட்ட நட்சத்திரத்தைப் பயன்படுத்துவர். ஆயில்யம் திருநாள், மூலம் திருநாள் என்று அரசரை குறிப்பிடுவர். ஆழ்வார்கள் திருநட்சத்திரம், நாயன்மார் திருநட்சத்திரம் என்று தெய்வ அடியார்களையும் குறிப்பிடுவது உண்டு. இறை வடிவங்களை ஆராதிப்பதிலும் நட்சத்திரத்துக்கு பங்கு உண்டு. புனர்வசுவில் - ராமர் ஆராதனை, திருவோணத்தில் - விஷ்ணு, திருவாதிரையில் - ஈசன், உத்திரத்தில் - சாஸ்தா, மூலத்தில் - கலைமகள், கிருத்திகையில் - கந்தன்... இப்படி பட்டியல் நீளும். துருவன், அருந்ததீ, அகஸ்தியர், ஸப்த ரிஷிகள் ஆகியோர் நட்சத்திர வடிவில் விண்வெளியில் வீற்றிருப்பார்கள். அழிவற்றவர்களாகத் திகழ நட்சத்திர வடிவை  (ஜோதிர் வடிவம்) அவர்கள் தேர்ந்தெடுத்தனர். விண்வெளியில் மிளிர்வதால் உலக மக்கள் அனைவரும் தரிசிக்கும் வாய்ப்பு உண்டு.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

அந்தந்த நாளில் தென்படும் நட்சத்திரங்களை விண்வெளியில் சந்திரனின் அருகில் தரிசிக்கலாம். விசாகா நட்சத்திரம் சந்திரனைப் பின்தொடர்ந்து நகருகிறது என்பார் காளிதாசன் (யதிவிசாகே சசாங்கலேகாமனுவர்த்ததே). நாக ஆராதனை யில் ஆயில்யத்துக்கு தனிப்பெருமை உண்டு. நாட்டில் இருக்கும் நாக வடிவங்களுக்கு ஆயில்ய நட்சத்திரத்தில் விசேஷ பூஜை நிகழும். ஆலய ப்ரதிஷ்டா தினத்தை நட்சத்திரம் நிர்ணயிக்கும். பூரம் பிறந்த புருஷன், மகம் பிறந்த மங்கை - இப்படி நட்சத்திர இணைப்பில் மிளிரும் தகுதியை ஆணிலும் பெண்ணிலும் கண்டு களிப்பதுண்டு.

படைப்பை ஏற்ற பரம்பொருள் ஹஸ்த நட்சத்திரத்தை தனது கைகளாகவும், சித்திரையை சிரசாகவும், ஸ்வாதியை இதயமாகவும், விசாகத்தை இரண்டு துடைகளா கவும், அனுஷத்தை பாதங்களாகவும் தன் உடலோடு இணைத்துக் கொண்டு செயல்படுகிறார் என்கிறது வேதம் (ஹஸ்தஏவாஸ்யஹஸ்த சித்ரா சிர:...). மஹாளயபக்ஷத்தில் 'மஹா பரணி’ சிறப்புப் பெற்றது. தென்புலத்தாரை வழிபட பரணி நட்சத்திரம் சிறந்தது என்று சாஸ்திரம் சொல்லும். எம பயத்தைப்

போக்க பரணி தீபமும் பயன்படும். நட்சத்திரங்களை வழிபட்டால் அவர்கள் இருக்கும் சுவர்க் கத்தை அடைவான்; நட்சத்திர வடிவில் விளங்கிக் கொண் டிருப்பான் என்கிறது வேதம் (அமும்ஸலோகம்நஷதே). கிரஹண காலத்தில் சூரியனை யும் சந்திரனையும் ராகு தீண்டி னாலும், அதோடு இணைந்த நட்சத்திரங்களுக்கும் பாதிப்பு இருப்பதால், அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களை ஆராதனையில் ஈடுபடச் செய்யும் சாஸ்திரம்.

மேல் நோக்கு, கீழ் நோக்கு, பக்க நோக்கு என்று பார்வையில் பாகுபாடு உண்டு. மென்மையானது, கடினமானது, ஸ்திரமானது, சரமானது - என்ற தன்மைகளும் உண்டு. அத்துடன், கிருத்திகை முதல் விசாகம் வரையிலானவை தேவ நட்சத்திரங்கள். அனுஷம் முதல் பரணி வரை - யம நட்சத்திரங்கள் என்ற பாகுபாடும் வேதம் சொல்லும் (கிருத்திகா: ப்ரதமம், விசாகே உத்தமம் தானி தேவநக்ஷத்திராணி, அனுராதா:ப்ரதமம் அபபரனீருத்தமம் தானியம நக்ஷத்திராணி). கிருத்திகையை முதல் நட்சத்திரமாகவும் பரணியை கடைசி நட்சத்திரமாகவும் குறிப்பிடும் வேதம் (அக்னே:கிருத்திகா:...). பிற்பாடு வந்த ஜோதிட வல்லுநர்கள் பலன் சொல்லுவதற்கு பாங்காக, அச்வினியை முதல் நட்சத்திரமாகவும் ரேவதியை கடைசியாகவும் குறிப்பிட்டனர். ஆனால், கிரகநாயகன் சூரியனின் தசையை கிருத்திகையுடன் இணைத்து, வேதக் கருத்துக்கு இயைந்து செயல்பட்டனர். கிருத்திகையில் சூரிய தசை ஆரம்பம், ரோஹிணியில் சந்திரன்... இப்படி தசாகால நிர்ணயத்தில் வேதக் கோட்பாட்டுக்கு முன்னுரிமை அளித்தனர்.

கிருத்திகையில் சூரியன் நுழையும் வேளையில் வெப்பம் அதிகமாகும். கிருத்திகைக்கு அக்னி நட்சத்திரம் என்ற பெயர் உண்டு (அக்னி நக்ஷத்திரம் இத்யபசாயந்தி). அந்த வேளையை அக்னி நட்சத்திரம் என்றும், 'கத்திரி வெயில்’ என்றும் சொல்லுவது உண்டு. க்ருத்திகை என்ற சொல் கத்திரியாக மருவியிருக்கிறது. சூரியனின் வெப்பமும் அக்னி நட்சத்திரமான கிருத்திகையின் தேவதையான அக்னியின் வெப்பமும் இணைந்து இருப்பதால் வெப்ப மிகுதியாக வாட்டியெடுக்கும் என்று சொல்வதுண்டு. கிருத்திகை நட்சத்திர ப்ரவேசம் வெப்பத்துக்கு காரணமாகிறது. வெப்பத்தின் தாக்கம் மனதைத் தளர வைப்பதால், நல்ல காரியங்களை, அதாவது நம் முன்னேற்றத்துக்கு உகந்த காரியங்களை செய்வதை அந்த வேளையில் தள்ளிப்போடச் சொன்னார்கள்.

பரணி - யம நட்சத்திரம்; க்ருத்திகை - அக்னி நட்சத்திரம். ஆகையால் இந்த இரண்டிலும் நல்ல காரியங்கள், அதாவது வளர்ச்சியுற்று விளங்க வேண்டியவற்றை தள்ளிப் போட்டார்கள். 'இன்றும் நாளையும் பரணி - க்ருத்திகையாக இருக்கு. ஆதலால் செயல்பாட்டை தள்ளிப் போடுவோம்’ என்ற கணிப்புக்கு ஆதாரம் இந்த இரண்டு நட்சத்திரங்கள். 'யம ருத்ராஹிமுப்பூரம்’ பயணத்தைத் தவிர்ப்பது உண்டு. யமன் - பரணி; அஹி-ஆயில்யம்; பூரம், பூராடம், பூரட்டாதி ஆகியன பயணத்துக்கு உகந்ததல்ல என்கிறது ஜோதிடம்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

சுவாதி நட்சத்திரத்தில் மணப்பெண்ணை மணமகனிடம் ஒப்படைத்தால், அவள் புகுந்த வீட்டில் புகழோடு வாழ்வாள் என்கிறது வேதம். முத்துச் சிப்பியில் சுவாதி நட்சத்திரம் இருக்கும் வேளையில் நீர் புகுந்தால், அந்த நீர் முத்தாக மாறும் என்கிறது சாஸ்திரம் (தாம் நிஷ்ட்யாயாம்தத்யாத்... தன் மௌக்கிதம்ஜாயதே).

புஷ்பவதியாகும் வேளையில் இணைந்த நட்சத்திரம் அவளது வருங்காலத்தை நிர்ண யிக்கும் தகுதியைப் பெறுகிறது. புஷ்பவதி என்றால் பெண்மை வெளிப்படும் முதல் மாதவிடாய் நேரம். உடலுறவை இன்பமயமாக்கவும், அதுவழி மழலை செல்வத்தைப் பெறவும், கர்பாதான வேளையை இறுதி செய்ய நட்சத்திரத்தின் பங்கு முக்கியமாக இருக்கும்.

பெயர் சூட்டுதல், காது குத்துதல், திருமணம் போன்ற வேளையை நிர்ணயிப்பதிலும் நட்சத்திர இணைப்பு இறுதி முடிவைத் தரும். குழந்தையை தொட்டிலில் போட, மருந்துண்ண, பாலூட்ட, பயணம் மேற்கொள்ள, உழுது பயிரிட, பயிரறுக்க, சேமிக்க, க்ரய-விக்ரயம் செய்ய, கடன் வாங்க - கொடுக்க, புது வஸ்திரம் வாங்க- உடுக்க, அணிகலன் வாங்க, கிணறு வெட்ட, வீடுகட்ட, தோட்டம் அமைக்க, குளம் அமைக்க, கூரை போட, புதுமனை புகுவிழா செய்ய, ஒப்பந்தம் செய்ய, பத்திரப்பதிவு - போன்றவற்றிலும், சமுதாய சேவைகளிலும், நமது செயல்பாடுகளிலும் நல்ல நாளை நிறைவு செய்யும் விஷயத்தில் முதலில் நிற்பது நட்சத்திரம்.

இறையுருவத்தை வழிபடவும் நட்சத்திரம் வாயிலாக நம்மை இணைத்துக் கொள்கிறோம். ஆகையால், அர்ச்சகர் நட்சத்திரத்தைக் கேட்டறிந்து, நமது இனைப்பை ஏற்படுத்தி அர்ச்சனை செய்கிறார். செடி- கொடிகள், மரங்கள், விலங்கினங்கள் அத்தனையிலும் நட்சத்திரம் இணைந்திருக்கும். ஆகாயம் தொடாத பொருள் உலகத்தில் இல்லை. அதோடு, அத்தனைப் பொருட்களிலும் நட்சத்திரத்தின் தொடர்பு நேரடியாகவோ, பரம்பரையா கவோ மறைமுகமாகவோ இருக்கும். இதை வைத்துதான் நட்சத்திர கற்கள் என்று மிகைப்படுத்திய தகவல்கள் தென்படுகின்றன.

முற்பிறவி கர்மவினைகள் நட்சத்திரத்துடன் இணைந்த தசாபுத்தி அந்தரங்களால் அனுபவத்துக்கு வருகின்றன. 9 கிரகங்களுடைய தசைகளும் நட்சத்திரத்தை ஒட்டி வரையறுக் கப்பட்டிருக்கின்றன. 12 ராசிகளில் பகிர்ந்தளிக் கப்பட்ட 27 நட்சத்திரங்கள், 9 கிரகங்களுடன் இணைந்து பலனளிக்க உதவுகின்றன. முதல் 9 நட்சத்திரங்களுக்கு கிரஹங்களின் தசா வரிசைகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இரண்டாவது மூன்றாவது 9-லும் அதே தசைகள் அதே வரிசையில் இணைந்துவிடும். அச்வினி, மகம், மூலத்துக்கு ஆரம்ப தசை கேதுவானாலும் நட்சத்திர மாறுபாட்டில் கேது தசையின் பலனும் மாறுபட்டிருக்கும். இங்கு மாறுபாட்டை ஏற்படுத்துவது நட்சத்திரத்தின் பங்கு என்கிறது ஜோதிடம்.

தசையிலும், புத்தியிலும், அந்தரத்திலும் 9 கிரகங்கள் மூன்று முறை சுழன்று வரும். தசாநாதன், புக்திநாதன் அந்தரநாதன் - இவர்களின் மாறுபாட்டுக்கு அவர்களுடன் இணைந்த நட்சத்திரத்தின் பங்கு காரணமாகும். நட்சத்திர வரிசைக்கு பலன் சொன்னது வேதாங்க ஜோதிடம். ஒன்பது எண்ணிக்கையில் அடங்கி நட்சத்திரத் தொகுப்புக்கு பலன் வெளியிட்டது அது. முதல் நட்சத்திரம் ஜன்ம நட்சத்திரம். 2-வது 'ஸம்பத்’; 3-வது விபத்து; 4-வது ஷேமம்; 5-வது ப்ரத்யரம், 6-வது ஸாதகம், 7-வது வதம், 8-வது மைத்திரம், 9-வது பரம மைத்ரம் என்று வரையறுத்தது. பிறகு வரும் இரண்டு வரிசை ஒன்பது நட்சத்திரங்களுக்கும் இதையே ஏற்கச் சொல்லும் (ஜன்மஸம்பத் விபத்ஷேம ப்ரத்யர: ஸாதகோவத: மைத்ரம பரம மைத்ரம் ச ஜன்மாதீனிபுன:புன:)

இந்த ஒன்பது எண்ணிக்கை யில் 2, 4, 6, 8, 9 ஆகியவை நற்பயனை அளிக்கும். 1, 3, 5, 7 எதிரிடையான பலனை அளிக்கும் என்று விளக்கம் அளிக்கும். இந்தக் கோட்பாட்டை தசைகளிலும் புகுத்தி பலன் சொல்வது உண்டு. ஒருவனது மூன்றாவது தசை எந்த கிரகமானாலும் இடையூறை ஏற்படுத்தும். அதுபோன்று 5, 7 தசைகளும் விரும்பிய பலன் அளிக்காது. இந்த முடிவு நட்சத்திர வரிசை எண்ணின் பலனை வைத்து எழுந்தது. ஆகையால், 9 கிரகங்களின் பலனை இறுதியாக்கும் பணியில் நட்சத்திர எண்ணிக்கை வரிசையின் பங்கு கோலோச்சுகிறது.

ஒருவனது 3-வது தசை அல்பாயுஸ்ஸை சுட்டிக்காட்டும் 5-வது தசை மத்யாயுஸ்யை வரையறுக்கும். 7-வது தசை தீர்காயுஸ்ஸை நிர்ணம் செய்யும் என்கிறது ஜோதிடம். இந்த கணிப்புக்கு ஆதாரம் வேதாங்க ஜோதிடத்தின் நட்சத்திர பலனின் இணைப்பு என்பது புலனாகும். சுருங்கச் சொன்னால், நட்சத்திரத் தின் பங்கு எல்லா பலனிலும் ஊடுருவி பரந்து விரிந்து விளங்குகிறது என்பது புலனாகும். ஆகையால், கிரக மண்டலத்திலும் ராசி மண்டலத்திலும் அதன் பங்கை அறியும்போது, துல்லியமான பலனை தெரிந்துகொள்ளலாம்.

வேதம் நேரடியாக அறிமுகம் செய்த நட்சத்திர வழிபாடு வேள்விக்கு ஒப்பானது. பயனுள்ள சிறந்த வழிபாடு இது. பிறக்கும்போதே நம்மோடு ஒட்டிக்கொண்டிருக்கும் நட்சத்திரத்தினுடைய வழிபாடு, விரும்பிய பலனை நிச்சயம் தரும்!

- வழிபடுவோம்