Published:Updated:

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்

கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்
கலகலப் பக்கம்! - கு.ஞானசம்பந்தன்
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
'ம
துரைக்குள்ளேயே மஹால் இருக்கு; தெப்பக்குளம் இருக்கு; ஏகப்பட்ட கோயில்கள் இருக்கு; புதுசா வந்த ஷாப்பிங் மால் நாலஞ்சு இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு, பழைய புத்தகக் கடையைப் பார்க்கலாம்னு கூட்டிட்டுப் போறாரே... இது சாமிக்கே அடுக்குமா?' என்று என்னோடு வந்த மாணவர்களில் ஒருவர் புலம்பியபோது, நாங்கள் மதுரை தெற்கு சித்திரை வீதியில், பழைய புத்தகக் கடைகள் உள்ள பகுதிக்குள் நுழைந்தோம். மதுரையின் பாரம்பரியப் பெருமைகளில் இந்தப் பழைய புத்தகக் கடைகளும் ஒன்று.

பத்துக்குப் பத்து இடத்தில் ஒரு நபர் மட்மே உட்காரக்கூடிய ஒரு சிறிய அறைதான் இந்தக் கடைகளின் அடையாளம். பழைய புத்தகங்களைப் போலவே அனுபவம் வாய்ந்த, வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் அங்கே பலகையில் அமர்ந்திருப்பார். அறை முழுவதும் நிரம்பி வழியும் புத்தகங்கள் நடைபாதை பிளாட்பாரம் வரை அடுக்கப்பட்டிருக்கும். நாங்கள் ஒரு கடை முன்பு வந்து நின்றதும், அங்கிருந்த பெரியவர் மகிழ்ச்சியோடு வரவேற்றார்.

'ஐயா..! நீங்க கேட்டிருந்த 'விநோத ரசமஞ்சரி’யும், 'பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை’யும் வந்திருச்சு!' என்று சொல்லி, என் கையில் அந்தப் புத்தகங்களைத் தந்தபோது என் முகத்தில் மகிழ்ச்சி பரவியது. அதைப் பார்த்து, 'என்ன ஐயா... பத்மஸ்ரீ பட்டமே கிடைச்சது போல, இந்தப் பழைய புத்தகம் கிடைச்சதுக்கு இவ்வளவு சந்தோஷப்படுறீங்களே?' என்று கேட்டார் என் மாணவர் ஒருவர்.

'உண்மைதான். கடுமையாக முயன்றால் 'பத்மஸ்ரீ’ பட்டம் என்ன, 'நோபல்’ பரிசுகூடப் பெற்றுவிடலாம். ஆனால், இந்த நூல்கள் பதிப்பிக்கப்பட்ட ஆண்டைப் பாருங்கள்; 1888, 1890-ஆம் ஆண்டுகளில் வெளிவந்தவை. எத்தனை ஆயிரம் மனிதர்கள், எத்தனை எத்தனை கரங்களில் இவை மாறி வந்திருக்க வேண்டும் என யோசியுங்கள்!' என்று நெகிழ்ச்சியோடு சொன்னேன். பின்பு, 'ஐயா! இந்தப் பகுதியில இன்னும் சில பழைய புத்தகக் கடைகள் இருந்ததா என் அப்பா சொல்லியிருக்கார். அவை எல்லாம் இப்போது இல்லையா?' என்று கடைக்காரரிடம் விசாரித்தேன். 'ஐயா! நீங்க சொல்றது மேங்காட்டுப்பொட்டல் பகுதியில் இருந்த பழைய பழைய புத்தகக் கடைகளை...' என்றார் அவர். நான்  சிரித்துவிட்டு, 'மாணவர்களே... கவனித்தீர்களா? 'பழைய பழைய புத்தகக் கடை’!' என்று கேட்டேன்.

'முதல்ல சொன்ன 'பழைய’ என்பதற்கு முன்னர், முன்னாள் என்று பொருள். அடுத்து வந்த 'பழைய’ என்பது பழைய புத்தகத்தைக் குறிக்கும். பழைய பழைய புத்தகக்கடைங்கிறது கேக்க ரசனையாத்தான் இருக்கு!'' என்று விளக்கினார் ஒரு மாணவர்.

'நீங்க எல்லாம் என்னோட மாணவர்கள் ஆயிற்றே... அதான் கரெக்ட்டா சொல்றீங்க!' என்று நான் சொல்ல, பதிலுக்கு அவர்கள் 'ஐயாவுக்கு ஒரு ஓ போடுவோம்...' என்று கலாய்த்தார்கள்.

அரிய புத்தகங்களை வாங்கியதால் மனதும் இனித்தது. மதுர மதுரதான்!